அட்டலட்சுமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

அட்டலட்சுமி:
இறைவி லட்சுமியின் எட்டு திருத்தோற்றங்கள்
அட்டலட்சுமி:
என்பது இறைவி திருமகளின் எட்டுத் தோற்றங்கள், படம்: திருமகள் (லட்சுமி)
அட்டலட்சுமி:
சென்னை பசந்த் நகரிலுள்ள அட்டலட்சுமி திருக்கோயில்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்---अष्टलक्ष्मी---அஷ்ட1லக்ஷ்மீ---மூலச்சொல்
  • சமஸ்கிருதத்தில் अष्ट-அஷ்ட1 எனில் எட்டு என்று அர்த்தமாகும்.
  • அட்டம் + லட்சுமி

பொருள்[தொகு]

  • அட்டலட்சுமி, பெயர்ச்சொல்.
  1. இறைவி திருமகளின் எட்டுத் தோற்றங்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. eight appearances of goddess mahalakshmi,depicting eight boons that she gives to devotees...

விளக்கம்[தொகு]

  • மகாவிஷ்ணுவின் பத்தினி மகாலட்சுமி செல்வங்களை வாரி வழங்கும் தெய்வம்...அத்தகைய செல்வங்கள் எட்டு ஆகும்...ஒவ்வொரு செல்வத்திற்கும் உரியவராய் தனித்தனியாக எட்டு தோற்றங்களில் அருள் பாலிக்கும் மகாலட்சுமியே அட்டலட்சுமி எனக் கொண்டாடப்படுகிறார்...இந்தியாவில் சென்னை பசந்த் நகர் மற்றும் மும்பாய் நகரில் உள்ள அட்டலட்சுமிக் கோயில்கள் மிகப் புகழ்ப் பெற்றவையாகும்...இக்கோவில்களில் எட்டு சன்னதிகளில் எட்டு இலட்சுமிகள் எழுந்தருளியுள்ளனர்..எட்டு இலட்சுமிகளின் பெயர்களையும் அவர்கள் அருளும் பேறுகளையும் கீழ்கண்டவாறு சொல்லப்படுகிறது:--
  1. ஆதிலட்சுமி...நோய்நொடி அற்ற உடல்நலம்பெற்று நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
  2. தானியலட்சுமி...உணவுத் தானியங்கள் தாராளமாகக் கிடைத்து பசிப்பிணி நீங்குவதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
  3. தைரியலட்சுமி...வாழ்வில் ஏற்படும் எத்தகைய இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு சமாளிக்க தைரியம் பெறுதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
  4. கஜலட்சுமி...வாழ்வில் அனைத்து நற்பாக்கியங்களையும் பெறுவதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
  5. சந்தானலட்சுமி... குழந்தைப்பேறு/புத்திர பாக்கியம் சித்திப்பதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
  6. விஜயலட்சுமி...கைக்கொண்ட நற்காரியங்களில் வெற்றிப் பெறுதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
  7. வித்யாலட்சுமி... கல்வியும், அறிவும், ஞானமும் பெறுதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
  8. தனலட்சுமி... செல்வம் பெருகி பன்மடங்காவதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.


  • அனைத்து சன்னதிகளிலும் பக்தர்கள் வழிப்படுவது நடைமுறையாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டலட்சுமி&oldid=1986306" இலிருந்து மீள்விக்கப்பட்டது