திமில்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- திமில், பெயர்ச்சொல்.
- கூனல்;கூன்
- பிசல்
- பியல்; எருத்தின் முரிப்பு
- திமிலுடைச்சே (உபதேசகா. சிவபுண்ணிய. 144)
- திமிலம்
- திமிலம்¹ (பெரிய மீன்) (எ. கா.) திமிங்கலம்
- திமிலிடுகின்ற தொல் சேடிமாருடன் (கந்தபுராணம். உமை வரு. 20)
- திமிலம்² (பேரொலி)
- (எ. கா.)
- திமிலநான்மறைசேர் திருப் பெருந்துறையில் (திருவாசகம் 29, 4)
- போரில் குண்டு வெடித்து, பேரொலி கேட்டது.
- திமிலம்¹ (பெரிய மீன்) (எ. கா.) திமிங்கலம்
- திமிர்வாதக்காரன்
- சோம்பேறி
- வேங்கை (மலை.)
- மீன்படகு, கட்டுமரம்
- திண்டிமில் வன்பரதவர் புறநானூறு. 24)
- கட்டுமரம், மரக்கலம், கப்பல்
-
கூன்(வளைந்தமுதுகு)
-
பிசல் (தோள்)
-
திமில்/பியல்
-
கழுத்தின்அம்புகுறிபகுதி
-
மீனும்,மனிதனும்
-
Pterocarpus marsupium
-
தரங்கினி கப்பல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- hump
- shoulder
- nape of the neck; hump, as of a bullock
- A kind of big fish or sound
- paralytic patient
- sluggish person
- east Indian kino (Pterocarpus marsupium (தாவரவியல் பெயர்))
- catamaran, small boat
- vessel, ship
இலக்கிய மேற்கோள்கள்
[தொகு]- அகநானூறு
- பழம் திமில் கொன்ற புது வலை பரதவர்
- கொடு திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென
- நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன்
- திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில்
- திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப
- கடு செலல் கொடு திமில் போல
- வண்டு இமிர் நறு சாந்து அணிகுவம் திண் திமில்
- வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்
- கலிங்கத்துப்பரணி
- இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த கால்
- நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக
- குறுந்தொகை
- பல் மீன் வேட்டத்து என்னையர் திமில்
- கொடு திமில் பரதவர் கோட்டு மீன் எறிய
- மதுரைக் காஞ்சி: நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை
- நற்றிணை
- திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி
- எந்தை திமில் இது நுந்தை திமில் என
- திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப
- திண் திமில் விளக்கம் எண்ணும்
- திண் திமில் பரதவர் ஒள் சுடர் கொளீஇ
- பதிற்றுப்பத்து: கொடு திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ண உம்
- பரிபாடல்: புனல் பொருது மெலிந்தார் திமில் விட
- புறநானூறு
- முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல
- திண் திமில் வன் பரதவர்
- சிலப்பதிகாரம்
- விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கம் உம்
- திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே
- ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்
- பதினோராம் திருமுறை: பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில்
- கந்தபுராணம்
- திமில் இடுகின்ற தொல் சேடி மாருடன்
- இளம் திமில் உடைச் செம் கண் ஏற்றொடும்
- பதினெண் கீழ்க்கணக்கு
- திரை பாகன் ஆக திமில் களிறு ஆக
- நளிந்த கடலுள் திமில் திரைபோல் எங்கும்
- பெரியபுராணம் : வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
- தேவாரம்:
- முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை
- அத்தன் எந்தைபிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே
- திருவாசகம்
- செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
- அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை
- திருவிளையாடற்புராணம்:
- விடுத்து விண் தொடு திண் திமில் விடையவன் கோயில்
- செல்லும் கல நாவாய் பல திமில் போல் சுமந்து ஏகிப்
- திமில்வாழ்நர் - திமிலகுமிலம் - திமிலர் - திமிலி - திம்மலி - திமிலிடுதல் - திமிசு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +