உள்ளடக்கத்துக்குச் செல்

களி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

களி(பெ)

  1. இறுகியப் பழச்சாறு
  2. குழைவு
  3. கேப்பங்களி, கம்மங்களி
    களி கிண்டி உண்ணும் பழக்கம் பண்டுக் காலத்தில் தமிழகம் முழுவதும் காணப்பட்டது.
  4. உருகி நீர்மமான மாழை (உலோகம்).

(வி)

  1. மகிழ்ச்சி அடை
    படக் காட்சியை கண்டுகளி
    குழந்தைகள் விளையாடுவதைக் கண்டால் அகம் களிப்படைகிறது
  2. விளையாடு
  3. உருகிய மாழை என்னும் பொருளுக்கான மேற்கோள், "செம் புருகு வெங்களிக ளுமிழ்வ (சீவக. 103)."


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. juice
  2. a food item indigenous to Tamil Nadu
  3. enjoy, rave
  4. play merrily
  5. molten metal


விளக்கம்
  1. குழைவானப் பொருட்களை களி என அழைப்பர்
  2. சிற்றின்பம், மகிழ்ச்சி, விளையாட்டு ஆகியவற்றை களி என விளிப்பதும் உண்டு



( மொழிகள் )

சான்றுகள் ---களி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=களி&oldid=1969881" இலிருந்து மீள்விக்கப்பட்டது