தாலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாலம்(பெ)

  1. பனை
    • தாலப் புல்லின் வால்வெண் தோட்டு (சிலப்பதிகாரம்.)
  2. தராசின் நடு நாக்கு, ஞமன்
    • தாலம் அன்ன தனி நிலை தாங்கிய (கம்பராமாயணம்)
  3. நாக்கு
    • தாலம் கணக்டரீடர் காக்க (விநாயகர் கவசம்)
    • தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ (கம்பராமாயணம்)
  4. பூமி
    • தாலமீதி லாதிதூதர் சாரமேவு வாழ்வினோர் (சீறாப்புரணம்)
  5. தட்டு, உண்கலம்
    • தோரைமலர் நீரறுகு துளும்புமணித் தால (சீவக சிந்தாமணி.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. palm
  2. tongue
  3. measuring rod in a balance
  4. earth
  5. plate


( மொழிகள் )

சான்றுகள் ---தாலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


தாளம் - தாழம் - தட்டல் - தாலப்பாக்கு - தாலாலம் - பொற்றாலம் - தாலகி - தால் - தாலகேதனன் - தாலகேது - தாலப்பருவம் - தாலபத்திரம் - தாலபத்திரி - தாலபீசநியாயம் - தாலபோதம் - தாலம்பபாஷாணம் - தாலமூலி - தாலவ்வியம் - தாலவட்டம் - தாலவிருந்தம் - தாலாங்கன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாலம்&oldid=1097212" இலிருந்து மீள்விக்கப்பட்டது