அலாதி
Appearance
அலாதி (பெ)
பொருள்
- தனியானது; தனி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- அலாதி அழகு
- அலாதி இன்பம்
- அம்மாவுக்கு கடைசி மகன் மீது அலாதி அன்பு
- அதிர்ந்து நடக்கவும் தெரியாது. மண்ணுக்கு நோகாமல் நடப்பாள். அவளின் நடையேகூட அலாதி அழகாயிருக்கும் (பாஞ்சாலி, சு.தமிழ்ச்செல்வி)
- இந்திய மாணவர்களுக்கு எப்போதும் வெளிநாட்டுப் படிப்புகள் மீது அலாதி பிரியம் இருக்கிறது (கல்வி: இங்கு படித்தால் எங்கும் படிக்கலாம்! தினமணி, 30 மே 2010)
- முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா? ([1])
- பால்யத்தில் கொய்யா என்றால், அலாதி மோகம். கொய்யா மரத்தின் வழவழப்பான உடலே இந்தக் கவர்ச்சிக்குக் காரணமாய் இருக்கலாம் (நெருப்புக் கோழி, ந.பிச்சமூர்த்தி)
- உன் அலாதி அன்பினில்
- நனைந்தபின் நனைந்தபின்
- நானும் மழையானேன் (திரைப்பாடல்)
ஆதாரங்கள் ---அலாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +