விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்
நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிபீடியா நிர்வாகியாக்கும்படி(sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். விக்கிபீடியா பராமரிப்பு தொடர்பில் சில தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான வசதி நிர்வாகிகளுக்கு உண்டு. இங்கே விண்ணப்பிக்குமுன், தயவுசெய்து வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும்.
நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.
விதிமுறைகள்
[தொகு]விக்சனரியின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிப்பீடியா சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளுக்கு விக்கிபீடியாமீது விசேட அதிகாரமெதுவும் இல்லாவிட்டாலும், பல பயனர்களால், விசேடமாகப் புதியவர்களால் விக்கிபீடியாவின் தொடர்பாளர்களாகப் பார்க்கப்படுவது காரணமாக, ஓரளவு உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும்போது நல்ல மதிப்பிடுதிறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்கவேண்டும். இத்தகைய பண்புகள் நியமனம் செய்யப்படுபவர்களிடம் உள்ளனவா என்று மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அவர்கள் போதிய அளவு காலம் விக்கிபீடியாவில் இருந்திருக்கவேண்டும். பெரும்பாலான புதிய நிர்வாகிகள் மூன்று மாதங்களுக்கு மேல் பங்களிப்புச் செய்தவர்களாயும், 1000 தொகுப்புகளுக்கு மேல் செய்தவர்களாயும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையே நியமித்துக்கொள்ளலாம், ஆனாலும் மேற்சொன்ன எதிர்பார்ப்புக்களை நீங்கள் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.
மற்றப் பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை விடப்படும். பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவில்லாதிருப்பின், இக் காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது). போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்துவரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக, முன்னரே நீக்கிவிடலாம், எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிபீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.
உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும். வாக்களிக்கும்போது, தயவுசெய்து நீங்கள் வாக்களிக்கும் நியமனத்தின் மொத்த வாக்குத் தொகையையும் உரியவாறு மாற்றவும். வாக்குத் தொகை மொத்தத்துக்கான குறியீட்டு வடிவம் பின்வருமாறு: (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை).
அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.
வேறொருவரை நிர்வாகிதரத்துக்கு அனுமதிக்க நியமிக்கும் போது:
1. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும். 2. பின்வரும் உரையைப் பிரதி செய்யவும்: {{விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/பயனர் பெயர்}} 3. பக்கத்தின் மேற்பகுதியிலுள்ள "தொகு" பொத்தானைச் சொடுக்கித் தொகுத்தல் பக்கத்துக்குச் செல்லவும். உங்கள் உரையைக் கடைசி நியமனத்துக்கு மேல் ஒட்டவும். 4. இதிலுள்ள பயனர் பெயருக்குப் பதிலாக நீங்கள் நியமிக்க விரும்புபவரின் பயனர் பெயரைப் பிரதியிடவும். 5. பக்கத்தைச் சேமிக்கவும். 6. விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/பயனர் பெயர் பக்கத்துக்கான சிவப்பு இணைப்பைச் சொடுக்கிப் பின்வரும் பகுதியைச் சேர்க்கவும்: === [[பயனர்:பயனர்பெயர்|பயனர்பெயர்]] === '''[http://ta.wikipedia.org/w/wiki.phtml title=விக்சனரி:நிர்வாகிகள்_தரத்துக்கான_வேண்டுகோள்/பயனர்பெயர்&action=edit இங்கே வாக்களிக்கவும்] (0/0/0) 00:00 00 மாதம் 0000 (UTC)''' முடிவு வரை 7. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும். ~~~~ என்பதைப் பயன்படுத்தி ஒப்பமிடவும். 8. எல்லாம் சரியாக உள்ளன என்பதை உறுதிப்படுத்த முன்தோற்றம் பார்க்கவும். 00:00 00 மாதம் 0000 என்பதை உங்கள் ஒப்பத்திலுள்ள நேரப் பதிவினால் மாற்றீடு செய்யவும், ஆனால் திகதியை ''ஏழு நாட்களுக்குப் பின்வரும் திகதியாக்கவும்''. 9. உங்கள் தொகுப்பைச் சேமிக்கவும்.
பழைய நியமனங்கள்
[தொகு]விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/பழைய நியமனங்கள்
நடப்பு நியமனங்கள்
[தொகு]குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந் நியமனத்தை ஏற்றுக்கொண்டால் இப் பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்ளவும் .
தயவுசெய்து புதிய கோரிக்கைகளை இப் பகுதியின் மேற்பக்கத்தில் எழுதவும். (and update the headers when voting)
தற்போதைய நேரம்01:10, 19 நவம்பர் 2024 (UTC)
தயவுசெய்து புதிய கோரிக்கைகளை இப் பகுதியின் மேற்பக்கத்தில் எழுதவும்.
வாக்கு நிலவரம் (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை): (10/0/0)
தொடக்க தேதி: 26 சூலை 2019
இறுதி தேதி:12 ஆகத்து 2019
ஒப்புகை
- Neechalkaran உயரணுக்கர்(sysop) நிலைக்குப் பரிந்துரைக்கிறேன். இணையத்தமிழிலும், தமிழ் விக்கிமீடியத் திட்டங்களிலும், பஞ்சாபி, வங்காளம், தெலுங்கு போன்ற சில இந்திய மொழி விக்கித்திட்டங்களுக்கு தொழினுட்ப உதவி மூலம் மிக முக்கியப் பங்காற்றி வரும் இவர், தற்போது தமிழ் விக்சனரி திட்டத்திலும் முனைப்புடன் செயல்பட விரும்புகிறார். --த♥உழவன் (உரை) 10:37, 26 சூலை 2019 (UTC)
- நன்றி. விக்சனரியில் துப்புரவு செய்யவும், மேம்பாடுகளைச் செய்யவும் இந்த அணுக்கம் உதவும் என்பதால் ஏற்கிறேன்.-Neechalkaran (பேச்சு) 12:03, 26 சூலை 2019 (UTC)
ஆதரவு
- ஆதரவு இவருக்கு வழங்கப்படும் அனுக்கம் நிச்சயம் விக்சனரிக்கு பயனுள்ளதாக இருக்கும். எனது மனமார்ந்த ஆதரவுSridhar G (பேச்சு) 15:40, 26 சூலை 2019 (UTC)
- ஆதரவு--Arularasan. G (பேச்சு) 01:11, 27 சூலை 2019 (UTC)
- ஆதரவு--கலை
- ஆதரவு----Vkalaivani (பேச்சு) 23:31, 27 சூலை 2019 (UTC)
- ஆதரவு --Aswn (பேச்சு) 03:39, 28 சூலை 2019 (UTC)
- ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 11:28, 28 சூலை 2019 (UTC)
- ஆதரவு--Tshrinivasan (பேச்சு) 09:50, 29 சூலை 2019 (UTC)
- ஆதரவு----Hibayathullah (பேச்சு) 15:33, 29 சூலை 2019 (UTC)
- ஆதரவு--TVA ARUN (பேச்சு) 04:23, 30 சூலை 2019 (UTC)
- ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 01:31, 1 ஆகத்து 2019 (UTC)
- ஆதரவு-- மாதவன் ( பேச்சு ) 05:30, 2 ஆகத்து 2019 (UTC)
நடுநிலை
மறுப்பு
கருத்து
- வாக்கெடுப்பு முடிவுக்கு ஒப்ப, நீச்சல்காரனுக்கு, இன்று முதல் மேலதிக அணுக்கம் (sysop) வழங்கப்படுகிறது. @Neechalkaran:--த♥உழவன் (உரை) 02:27, 13 ஆகத்து 2019 (UTC)
தயவுசெய்து புதிய கோரிக்கைகளை இப் பகுதியின் மேற்பக்கத்தில் எழுதவும்.
அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (Request for bureaucratship)
[தொகு]தயவுசெய்து புதிய கோரிக்கைகளை இப் பகுதியின் மேற்பக்கத்தில் எழுதவும் (and again, please update the headers when voting)