பகடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. மாடு, எருது, எருமைக்கடா, கடா
    பகட்டினானு மாவினானும் (தொல்காப்பியம். பொ. 76)
  2. மாடு பூட்டிய ஏர்
    பகடு புரந்தருநர் பார மோம்பி (புறநா.35)
  3. அதட்டுதல்
    பகடு தெழிதெள்விளி - (அகநானூறு. 17)
  4. பெரிய, அகன்ற
  5. ஆண் யானை, களிறு, பிடி, வேழம், பகடு, கைமா, கைமான்
    பைங்கட்பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ 8, 5)
  6. வலிமை, பலம்
    வலிமை நுண்பூ ணம்பகட்டுமார்பின் (புறநா. 88)
  7. பெருமை
    பகட்டா வீன்றகொடுநடைக் குழவி (பெரும்பாண். 243)
  8. பரப்பு
    பகட்டெழின் மார்பின் (புறநா. 13)
  9. தெப்பம், ஓடம்
  10. சந்து
    பகட்டி னொடித்து(தக்கயாகப். 483).

இலக்கியச் சான்றுகள்[தொகு]

  1. தான பகடு முதலாய சனங்கள் எல்லாம்-வில்லி பாரதம்: 2: 46 :3
  2. பாகசாதனனும் ஏனைய திசையின் பாலரும் பகடு மேற்கொண்டார் – வில்லி பாரதம்: 9: 44 : 4
  3. பரசுற்று அகன்றான் பிழை கொன்ற பகடு போல்வான் – வில்லி பாரதம்:23: 25 : 4
  4. பாண்டவர் யாமளத்தின்படி பகடு ஆதி ஆக – வில்லி பாரதம்:28: 35 : 3
  5. பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான் – வில்லி பாரதம்:46 : 31 : 2
  6. உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான் – வில்லி:4 : 48 : 3
  7. பகதத்தனும் பட்டு அவன் ஊர்ந்த பகடும் பட்டு புடை சூழ – வில்லி:40 : 67 : 1
  8. கற்கியும் நாலாயிரம் விகட பொரு பகடும்
    மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான் – வில்லி:44 : 70 : 2-3
  9. பகட்டு எருத்தின் பல சாலை - (பத்துப்பாட்டு) 52
    பொருள்: பெரிய எருதிற்கு வைக்கோலிடும் பலசாலையினையும்
  10. ஒளிறு இலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
    கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின்–(புறநானூறு) 88 : 3-4
    பொருள்: ஒளிவிட்டு விளங்கும் நீண்ட வேலையுமுடைய வீரர்களுக்குத் தலைவன். சுடர்விடும் நுண்ணிய வேலைப்பாடுகளுடைய அணிகலன்களை அணிந்த அழகிய அகன்ற மார்பும்

  11. உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு
    ஒளி திகழ் ஓடை பொலிய – (புறநானூறு) 161 : 17-18
    பொருள்: மலையைப் போன்ற வலிமையான யானையின் ஒளி விளங்கும் முகப்படாம் பொலிய

  12. பகடு தேர் புரவி காலாள் பல வகைப் பட்ட சேனை
    சகட மா வியூகமாக வகுத்தனன், தனுநூல் வல்லான்; -வில்லி பாரதம்: பதினோராம் போர்ச் சருக்கம் - 6

  13. பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க - நாலடியார் : 2
    ஆசிரியர் இரு பொருள்பட வைக்கிறார். பகடு என்பதற்கு மாடு என்ற பொருள் கொண்டு, உழவால் பெற்ற கூழாம் உணவினைப் பலரோடு உண்க என்கின்றார். பகடு என்பதற்கு யானை என்றும் பொருள் கொண்டு, ‘யானையெருத்தம் பொலியும்’ ஆளும் நிலையில் கொண்ட பெருஞ் செல்வத்தையும் அதன் வழிப்பெறும் கூழாம் உணவினையும் பல்லாரோடு உண்க.எனவும் காட்டுகிறார்.

  14. பண்டத்தின் கீழ் சாம் பகடு-நான்மணி:80/4
  15. மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற-குறள் : 63 : 4/1
  16. அரும் தொழில் ஆற்றும் பகடும் திருந்திய-திரி : 69/1

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bull, Buffalo, ploughing ox, A team of oxen harnessed to a plough
  2. utter threats
  3. Greatness, largeness, hugeness
  4. male elephant (male elephant is called bull, while the female is cow)
  5. strength, might
  6. Expansiveness
  7. Boat, Raft
  8. Joints


( மொழிகள் )

சான்றுகள் ---பகடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகடு&oldid=1984973" இலிருந்து மீள்விக்கப்பட்டது