உள்ளடக்கத்துக்குச் செல்

பரப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பரப்பு(பெ),(வி)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரப்பு(பெ)

பரப்பு
  1. கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
  2. ஏதொன்றும் பரவுதல் அளவைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
  3. உலகம்
  4. விரிவின், பெருக்கத்தின் பருவளவைக் குறிப்பது
  5. ஏதொன்றின் வீச்சு, செல்லும் எல்லை.
  6. பயிர்கள் போன்றவற்றின் விளைச்சல் விரிவு.
  7. கடல் (பரந்திருப்பதால்; பரவை என்றும் கூறப்படும்)
  8. மேல்தளம்
  9. நுழைவாயில் போன்றவற்றில், கதவுக்கு மேலே நிலைக்காலின் இருபகுதியையும் இணைக்கும் முகவணை, அல்லது மண்தாங்கிக் சட்டம் அல்லது கல்.
  10. படுக்கை
  11. கடவுளுக்கு முன் விரித்துப் பரப்பி வைத்துப் படைக்கும் அரிசி முதலான உணவுப் பயிர்கள் அல்லது உணவு.
மொழிபெயர்ப்புகள்
  1. expanse, extension, space, surface, area - இடவிரிவு. நன்பெரும் பரப்பின் விசும்பு (பதிற்றுப்பத்து- 17, 12)
  2. diffused or extended state of a being, corporeal or incorporeal; diffusion; overspreading - வியாபகம். படரொளிப் பரப்பே (திருவாசகம்- 22, 8)
  3. world - உலகம். பரப்பினடுப் படுவதொரு மேருகிரி (கோயிற் பு. வியாக். 6)
  4. multiplicity, variety of forms - மிகுதி
  5. mass - தொகுதி. படர்சடைப் பரப் பும் (கோயிற்பு. நடராச. 33)
  6. range, compass, extent of a subject - அளவு.
  7. land measure, of two kinds, viz., neṟ-parappu, nilai-p-parappu - நெற்பரப்பு, நிலைப்பரப்பு என்றிரு வகையான நிலவளவு.
  8. sea; ocean - கடல்
  9. ceiling - முகடு
  10. lintel - கதவுநிலையின் மேலுள்ள மண்தாங்கிப்பலகை.
  11. bed, couch - படுக்கை
  12. food of various kinds or rice placed before a deity in receptacles of the capacity of a kuruṇi - பரப்பரிசி
விளக்கம்
பயன்பாடு

பரப்பு (வி)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. spread, as grain; lay out, as goods; diffuse, as odour - பரவச்செய் தல். நிதி பரப்பி (திருவாசகம் -8, 3)
  2. disseminate, as news; propagate, as opinions - செய்தி முதலியன பரப்புதல்
  3. distend; expand, as wings - விரித்தல். காலைப் பரப்பி நின்றான்
  4. place confusedly, as books on a table; ஒழுங் கின்றி வைத்தல். எல்லாம் பரப்பிக் கிடக்கின்றன.
  5. establish - நிலைபெறுத்தல். நான்மறையோர் புகழ்பரப்பியும்(பட்டினப். 202.6)
  6. give lavishly - பெருகக்கொடுத்தல். பெத்த முத்தியும் பரப்பு பெண்ணரசி (விநாயகபு. 2, 7)
விளக்கம்
பயன்பாடு

ஆதாரங்கள் ---பரப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பரப்பு - பரப்பளவு
மேற்பரப்பு, உட்பரப்பு, ஒலிபரப்பு, பாசனப் பரப்பு, நிலப்பரப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரப்பு&oldid=1968054" இலிருந்து மீள்விக்கப்பட்டது