அபசாரம்
Appearance
பொருள்
அபசாரம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sacrilege, disrespectful conduct, irreverence, desecration, incivility - தெய்வம், பெரியோர், அல்லது தெய்வீகப் பொருட்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ இழைக்கும் தவறு அல்லது அவமரியாதை; மரியாதை தவறிய செயல்; நிந்தனை; தெய்வகுற்றம்
பயன்பாடு
- தாயே! குடிசைக்குள்ளே வந்தருள வேண்டும். இங்கேயே தங்களை நிறுத்தி வைத்திருப்பது நான் செய்யும் அபசாரம்! (பொன்னியின் செல்வன்) - Oh Mother, please come into the hut. It would be irreverence if I make you wait outside)
- ஏதாவது அபசாரமாக நான் பேசியிருந்தால் மன்னிக்க வேண்டும் (பொன்னியின் செல்வன்) - Please excuse me, If I have spoken anything disrespectfully)
- நீ தெய்வ அபசாரம் செய்வதையும் கடவுள் மன்னிப்பார் (பொன்னியின் செல்வன்) - God will forgive even your sacrilege