அமஞ்சி
Appearance
பொருள்
அமஞ்சி , (பெ)
- கூலியின்றி, இலவசமாகச் செய்விக்கும் வேலை
- வீண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அமஞ்சிக்கரை என்ற ஊரைத் திருத்தமாகச் சொல்லுபவர்கள் அமைந்தகரை என்று குறிப்பார்கள். கரை என்பது ஆற்றுக்கோ, குளத்திற்கோ மக்களால் அமைக்கப்படுவது. தானாகக் கரை அமையுமா? அமைந்தகரையோ, அமைக்கப்பட்ட கரையோ எதுவும் அங்கில்லை. அமஞ்சி எனும் சொல் பழைய கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இந்நாளில் இலவசம் என்று சொல்வதற்கு நிகரான சொல் இது. கரை என்பது சிற்றூர்ப் பகுதிகளையும் குறிப்பதுண்டு. யாரோ ஒரு வள்ளலால் பணம் பெறாமல் அமஞ்சியாகத் தரப்பட்ட இடமே இது என்று எண்ணத் தோன்றுகிறது (மொழிப் பயிற்சி - 17: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 5 டிச 2010)
- அமஞ்சியாள் - a workman without wages
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அமஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +