உதானன்
Appearance
பொருள்
உதானன்(பெ)
- தசவாயுக்களுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மக்கள் உந்தியிலிருந்து ஒரு காற்று எழுகின்றது; அதற்கு "உதானன்" என்பது பெயர். அக்காற்று மார்பிலும் மிடற்றிலும் மூக்கிலும் தங்கி நிற்கும்.
- மார்பினின்ற காற்று வெளிவரும்போதுதான் வல்லினமாகிய கசடதபற என்ற ஆறும் பிறக்கும். மிடற்றில் நின்ற காற்று வெளிவரும்போது, உயிரெழுத்துப் பன்னிரண்டும், இடையினமாகிய ய, ர, ல, வ, ழ, ள என்ற ஆறும் பிறக்கும். மூக்கில் நின்ற காற்று வெளிவரும்போது மெல்லினமாகிய ங, ஞ, ண, ந, ம, ன என்ற ஆறும் பிறக்கும் என்று இடப் பிறப்பை எடுத்துரைத்தனர் இலக்கண நூலாசிரியர். வாயைத் திறக்கு முயற்சியால் அ, ஆ, என்ற உயிர் எழுத்துப் பிறக்கும்; வாயைத் திறக்கு முயற்சியுடன் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்தினால் இ, ஈ, எ, ஏ, ஐ பிறக்கும்; உதடு குவிதலால் உ, ஊ, ஒ, ஓ, ஒü இவை பிறக்கும் என்று, எல்லா எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு முறையே கூறியது வியக்கத்தக்கதன்றோ!(வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 31 தமிழ் இலக்கணச் சிறப்பு! தமிழ்மணி, 11 மார்ச்சு 2012)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---உதானன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி