ஏற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உரிச்சொல்[தொகு]

பொருள்
 1. நினைவு
 2. துணிவு
இலக்கியம்
ஏற்றத்து இருந்தார் என்றக்கால் நினைத்திருந்தார் என்பதூஉம், துணிந்திருந்தார் என்பதூஉம் ஆம் - இளம்பூரணர் விளக்கம்
இலக்கணம்
"ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்" - தொல்காப்பியம் 2-8-40
மொழிபெயர்ப்பு[தொகு]
ஆங்கிலம்
 1. think
 2. daring

பெயச்சொல் & வினைச்சொல்[தொகு]

பொருள்
 1. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் ஏற்றமரம்
  ஏற்றம்
 2. மேல் ஏறுகை
 3. மேடு
 4. உயர்த்துகை
 5. அதிகப்படி
 6. புகழ்
 7. இடிமரம்
 8. துணிவு
 9. நினைவு
 10. மிகுதி
 11. மேன்மை
மொழிபெயர்ப்புகள்
 1. well sweep, picottah
 2. mounting, as a ladder, a horse; ascending; rise, climb, elevation
 3. ascent, acclivity
 4. hoisting, as a flag; raising up
 5. increase, increment
 6. praise, eulogy
 7. heavy wooden rammer set to a frame for pounding parched rice
 8. excess
 9. distinction, superiority, exaltation, preeminence
 10. thought, meditation
 11. confidence, boldness
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

 1. கொடியேற்றம் (hoisting of flag)
 2. விலை ஏற்றம் (price rise)

(இலக்கியப் பயன்பாடு)

 1. ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை ( நல்வழி, ஔவையார்)
 2. ஏரியும் ஏற்றத்தினாலும் பிறர் நாட்டு
வாரி சுரக்கும் வளன் எல்லாம், தேரின்
அரிகாலின் கீழ் உகூஉம் அந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரி சூழ் நாடு (பொருநர் ஆற்றுப்படை)

{ஆதாரங்கள்} --->


சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏற்றம்&oldid=1968201" இலிருந்து மீள்விக்கப்பட்டது