ஓய்
Appearance
ஓய் (பெ)
- ஒருவரை அழைக்கும்போது கூறப்படும் விளியுருபு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- an interjection used in calling attention
ஓய் (வி)
- முடிவுறு. மழை ஒய்ந்தது
- தளர். கை ஒய்ந்து போயிற்று
- இளைப்பாறு. ஓய்ந்தவேளை
- அழி
- மாறு
- முன்நிலை சுருங்குதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- cease; come to an end
- become tired, weary, weak, infirm, as a limb of the body
- rest
- expire, perish
- change
- diminish; be reduced; become small
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- செய்வினை யோயற்க. (பரிபாடல். 10, 128)
- ஊனை யானிருந் தோம்பு கின்றேன் கெடுவேனுயி ரோ யாதே (திருவாசகம். 5, 38).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஓய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி