ஓய்வு
Appearance
பொருள்
ஓய்வு (பெ)
- வேலை முதலியவற்றிலிருந்து ஒழிவு/களைப்பாறுதல்; அமைதி
- பணியிலிருந்து வயது முதலிய காரணமாக விடுப்பு
- தளர்வு
- முடிவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- rest from work, relaxation, cessation, ceasing, relinquishment
- retirement
- weariness
- termination
விளக்கம்
பயன்பாடு
- ஓய்வெடு - take rest
- மதிய உணவிற்குப்பின் சற்று படுத்து ஓய்வு எடுத்தார் (siesta).
- ஓய்வு பெற்ற நீதிபதி - retired judge
- சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்! - பெரியார்
- நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு
- மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு (திரைப்பாடல்)
- பணியில் தொடரும் போது இயல்பாக வருகின்ற இறுக்கம் மற்றும் பதைபதைப்பு ஒரு புறம் இருக்க; பணியில் இருந்து ஓய்வு கிடைத்த பின்னர் என்ன என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனைகளும், கற்பனைகளும் ஓய்வு பெறுகின்ற தேதிக்கு ஒரு வருடம் முன்பிலிருந்தே பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களை தொற்றிக்கொள்ளுகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஓய்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +