கங்குல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கங்குல் (பெ)

  1. இரவு
  2. இருள்
  3. எல்லை
  4. பரணி நட்சத்திரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. night
  2. darkness
  3. ridge, boundary
  4. The second nakṣatra
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க! - திருவெம்பாவை. விளக்கம்: இரவும் பகலும் எங்கள் கண்கள் நின்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக.(திருவெம்பாவை - பாடல் - 19, தினமணி, 09 சன 2012)
  • கங்கு லும் பகலுங் கண்டுயி லறியாள் (திவ். திருவாய். 7, 2, 1)
  • போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி (திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு), தொண்டரடிப் பொடியாழ்வார்)
  • கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே! (குறுந்தொகை)
  • இயங்கிடை யறுத்த கங்குல் (சீவக. 1360)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கங்குல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :இரவு - கங்கு - எல்லை - இருள் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கங்குல்&oldid=1081257" இருந்து மீள்விக்கப்பட்டது