கரகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கரகம் (பெ)
- தலையில் நீர் நிறைத்த, பூவால் அலங்கரித்த உலோகக் குடத்துடன் அது கீழே விழாமல் நையாண்டி மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனம்
- பிரார்த்தனையாக எடுக்கும் பூங்குடம்
- கமண்டலம்
- ஆலங்கட்டி
- நீர்த்துளி
- நீர்
- கங்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a folk dance in which the dancer dances with a decorated, water-filled brass pot on his or head to the rhythmic music of Naiyaandi Melam.
- decorated water-pot carried in procession in propitiation of certain gods or goddesses, either when an epidemic prevails, or when an auspicious ceremony is to take place in the family (Colloq.)
- ewer, pitcher, water-vessel, jug with a spout
- hailstone
- drop of water
- water
- the Ganges
விளக்கம்
பயன்பாடு
- காற்றைப் பிடிக்கவும் கரகத் தடைக்கவும்
- கட்டிவைத் தருள் புரியவும்
- கரகந்தனைக் காற்று உருத்தி உடையாமலுங்
- காப்பாற்றி அருள் புரியவும்
- (கரகம் – மட்குடம்) (குணங்குடியார் பாடற்கோவை, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நூலே கரக முக்கோன் மணையே (தொல். பொ. 625)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கரகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கரகாட்டம் - நையாண்டி மேளம் - குடம் - கமண்டலம் - நடனம்
±