களம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

களம், பெயர்ச்சொல்.

 1. இடம்(கூடுமிடம், ஒரு செயல் நடக்குமிடம்).
 2. போர்க்களம்- போர் நடக்குமிடம்.
 3. தேர்தல் களம்- தேர்தல் நடக்குமிடம்.
 4. ஆடுகளம்- விளையாடுமிடம்.
 5. பூக்களம் - பூக்களால் வடிவமைக்கப்பட்ட இடம்.
 6. உடற்கூறியல் - உணவுக்குழாயின் ஒரு பகுதியைக் குறிக்கின்றது. இப்பகுதி உணவை தொண்டையில் இருந்து இரைப்பைக்கு கடத்தும் பகுதியாகும் (இலங்கை).
மொழிபெயர்ப்புகள்
 1. ஆங்கிலம்
 • field
 1. ...இந்தி
விளக்கம்
 • களம் என்ற சொல் 'இடம்' என்ற பொருள் தந்தாலும், இடம் என்ற சொல் ஒரு விரிவான பொருளில் நீளமும் அகலமும் உள்ள எதையும் குறிப்பது போல், இச்சொல் அனைத்து இடங்களிலும் பயன்படுவதில்லை. இச்சொல் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் 'வீட்டைக்' குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது; 'வாங்க, களத்துக்குப் போய்ட்டுப் போகலாம்' என்று வீட்டிற்கு அழைக்கும் நடைமுறையும் பல இடங்களில் இருந்தது. தோட்டத்தில் கூரை வேய்ந்த வீடுகளுக்கு, 'களத்துச் சாலை' என்றும் வழங்கப்பட்டது. 'களத்து மேடு' என்ற பயன்பாடு வேளாண் விளைநிலங்களில் கதிரடிக்கப் பயன்படுமிடங்களைக் குறிக்கும்.
பயன்பாடு
 • ...
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...

சொல்வளம்[தொகு]

களம்
களப்பணி, களப்பலி, கள நிலவரம், களத்துமேடு
களமாடு, களமிறங்கு, களமிறக்கு
ஆடுகளம், போர்க்களம், தேர்தல் களம், வணிகக்களம், அரசியல் களம்
பாரம்பரியக் களம்


( மொழிகள் )

சான்றுகள் ---களம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

 1. ஆய்விடம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=களம்&oldid=1901993" இருந்து மீள்விக்கப்பட்டது