கழை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெயர்ச்சொல்
- நட்பினால், பிறரின் வருத்தத்தைத் தாங்குதல்
- மூங்கில். (திவா.)
- மூங்கில் குழாய்
- பெய் தீந்தயிர் (மலை படு. 523)
- வேய்ங்குழல், புல்லாங்குழல்
- கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து (சிவப். பிரபந். வெங்கையு. 98)
- ஓடக்கோல்
- கழைநிலை பெறாஅக் காவிரி நீத் தம் (அகநா. 6)
- குத்துக்கோல், அங்குசம்
- கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை (திருக்கோ. 111)
- கரும்பு. (திவா.)
- தண்டு
- நெடு வரை யாடுகழை யிருவெதிர் (அகநா. 27)
- புனர்பூசம் என்னும் விண்மீன். (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To partake voluntarily in another's sufferings through friendship
- Spiny bamboo
- bamboo bottle
- Musical bamboo-pipe, flute
- Pole used for propelling boats
- Elephant-goad
- Sugarcane
- Stem of sugar-cane; shaft of a bamboo
- The seventh nakṣatra
( மொழிகள் ) |
சான்றுகள் ---கழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி