கும்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கும்கி(பெ)

  • பிற அடங்காத / காட்டு யானைகளை ஆற்றுப்படுத்தும் பயிற்சி பெற்ற யானை
  • காட்டுக்குள் இருந்து ஊர்ப்பக்கம் வருகிற யானைகளை விரட்டியடிக்கப் பழக்கப்பட்ட யானை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • elephant trained to scare away invading wild elephants
விளக்கம்
பயன்பாடு
  • இரண்டு ஆண்டுக்கு முன், காட்டு யானைகளை ஒடுக்க, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, சாடிவயல் மலைவாழ் கிராமம், இருட்டுபள்ளம் வனத்துறை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டன. யானைகளை விரட்டியடிக்க, கும்கிகளை பாகன்கள் அழைத்து சென்றபோது, காட்டு யானைகளின் ஆவேசம், கோபத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கி விட்டன. சாடிவயலில் கட்டி வைக்கப்பட்டிருந்த, கும்கி யானையை காட்டு யானை தாக்கி விட்டு சென்ற சம்பவமும் நடந்துள்ளது. இங்குள்ள சீதோஷ்ண நிலை, உணவுகள் கும்கி யானைகளுக்கு ஒத்து வராமல், சோர்வாகி விடுகின்றன. இதனால், காட்டு யானைகளை முழுவீச்சில் விரட்டியடிக்க முடியாது. (தினமலர், 6 ஜூலை 2011)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கும்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

யானை - களிறு - குமுக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கும்கி&oldid=1014883" இலிருந்து மீள்விக்கப்பட்டது