குருதட்சணை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குருதட்சணை, .
- சீடன்/மாணவன் தன் ஆசிரியருக்குச் சமர்ப்பிக்கும் தட்சிணை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- குருதட்சணை = குரு + தட்சணை
- குருதட்சிணை என்பதன் பேச்சுவழக்கு,
பயன்பாடு
- ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளியேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொடுப்பது வழக்கம்... துரோணரிடம், நேரடியாக வில்வித்தை பயிலவில்லை ஏகலைவன். அவரைப் போல ஒரு பிம்பம் செய்து, அதை குருவாக பாவித்து, தானாகவே வில்வித்தை பயின்றான். ஒரு சமயம், தன்னை குருவாக பாவித்து, வில் வித்தையில் தேர்ச்சி பெற்றிருப்பதை அறிந்த துரோணர், ஏகலைவனிடம் குருதட்சணை கேட்டார். "எதை வேண்டுமானாலும் கேளுங்கள்; தருகிறேன்...' என்றான். "உன் வலது கட்டை விரலை குரு தட்சணையாக கொடு...' என்றார் துரோணர். சிறிதும் தயக்கமின்றி, தன் வலது கை கட்டை விரலை வெட்டி, குரு தட்சணையாக கொடுத்தான் ஏகலைவன். (குருதட்சணை முக்கியமா? வாரமலர், ஜூலை 24,2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- குரு - தட்சிணை - குருகுலம் - குருகுலவாசம் - பரிசு - அன்பளிப்பு - காணிக்கை - பாதகாணிக்கை - நன்றிக்கடன்
( மொழிகள் ) |
சான்றுகள் ---குருதட்சணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற