கூடல்
Appearance
பொருள்
கூடல் (பெ) |
பொருளுக்குரிய இலக்கியம் |
---|---|
1)பொருந்துகை | |
2) புணர்ச்சி | கூடற்கட் சென்றதென் னெஞ்சு (திருக்குறள், 1284) |
3) அடர்த்தியான தோப்பு | |
4)தேடுகை. (பிங்), | |
5)மதுரை | கூடனெடுங்கொடி யெழவே (கலித்தொகை. 31) |
6) ஆறுகள் ஒன்றோடொன்று இணையும் இடம் | |
7)ஆற்றின் முகத்துவாரம்(ஆரம்பப் பகுதி) | மலியோகத் தொலிகூடல் (பட்டினப். 98) |
8)தலைவனைப் பிரிந்த மகளிர் அவன் வரும் நிமித்தமறியத் தரையில் சுழிக்குஞ் சுழிக்குறி. |
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
1) joining,
2) sexual union,
4) seeking,
5)madurai,
6) confluence of rivers,
7)mouth of a river
8) loops drawn on sand by a love-lorn lady for divining the safe arrival of her lord
விளக்கம்
:*இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.