கைநீட்டம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கைநீட்டம்(பெ)
- கொடை, ஆசி
- அன்றன்று கடை திறந்தவுடன் முதன்முதலாக விற்கும் பண்டத்திற்கு வாங்கும் ரொக்கத்தொகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கைநீட்டம் - கை நீட்டி கொடை வழங்கல்
- வருடப் பிறப்பு (சித்திரை) முதல் நாள் இரவு, பூஜையறையில் கனி வர்க்கங்கள், காய்கறிகள், பணக் குவியல்கள், நகைகள் என்று அலங்காரமாக வரிசைப்படுத்தி வைத்து விடிய விடிய விளக்குகளை எரியச் செய்வர். வருடப் பிறப்பு அன்று அதிகாலை குடும்பத்தினர் எழுந்து, கண்களைத் திறக்காமல் பூஜை அறைக்குச் சென்று, முதல் நாள் வைத்த சீர்வரிசை போன்ற கனி வர்க்கங்களையும் நகைகளையும் பார்த்தபின் வணங்கிச் செல்வார்கள்.
- அன்று, சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்றுப் பரிசுகள் பெறுவார்கள். (பெரும்பாலும் நாணயங்கள்.) இதனைக் கைநீட்டம் என்று சொல்வர்.
- இந்த நிகழ்ச்சிகள் கேரளாவில் கொண்டாடப்படுவது போல் அதனையொட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் கொண்டாடப் படுகிறது. கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு காசு மற்றும் காய், கனிகள் வழங்கப்படுகிறது. செல்வந்தராக இருந்தாலும் பொறுமையாக வரிசையில் நின்று பிரசாதமாகக் கைநீட்டம் பெறுகிறார்கள். கோவிலில் கைநீட்டம் பெற்றால் ஆண்டு முழுவதும் பணம் குவியும்; செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை. (நக்கீரன், 1 ஏப் 2010)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சித்திரைக்கனி - புத்தாண்டு - பரிசு - கொடை - தானம் - ஆசி - #
ஆதாரங்கள் ---கைநீட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +