சகுனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சகுனம்(பெ)
- பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மைதீமைக் குறி; நிமித்தம்
- பறவை
- கரணம் பதினொன்றில் தேய்பிறை சதுர்த்தசியின் பிற்பகுதியில் வருங் காலம்
- சகோரம் - நிலாமுகிப்புள்
- கிழங்கு
- பேரரத்தை - மருந்துச்செடிவகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- omen, as indicated by flight of birds, etc.
- bird
- (astrology) A division of time, the latter half of the 14th day of the dark fortnight
- cakora,the Greek partridge fabled to subsist on moon-beams, caccabis græca
- edible or other tuberous roots
- greater galangal; alpinia galanga
விளக்கம்
பயன்பாடு
- சகுனத்தடை - ill-omen
- சகுனசாத்திரம் - the science of omens; augury
- நற்சகுனம், சுபசகுனம் - a good sign or omen
- அபசகுனம்; துர்ச்சகுனம் - a bad sign or omen; ill-omen
- இருள் சூழத்தொடங்கிய அவ்வேளையில் கடற்கரை மின்சார விளக்குகள் பளிச்சென ஒளிவிட்டு எரியத் தொடங்கின. அதைக் கண்ட பாரதி பிள்ளைவாள், ""சக்திதுணை செய்வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்பொழுது மின்னொளியையும் பிரகாசிக்கச் செய்தது நம் அன்னை பராசக்தியே வாழ்க; இனிநம் முயற்சி வெற்றி எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான சுபசகுனம் இதுதான். வாழி அன்னை வாழி அம்மை சக்தி வாழி என்று ஆவேசத்தோடு வ.உ.சி.யிடம் கூறினார் பாரதி. (வ.உ.சி. கண்ட பாரதி, த. ஸ்டாலின் குணசேகரன், தினமணி, 11 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- நிமித்தமுஞ் சகுனமும் (பெருங்.இலாவாண. 18, 39).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சகுனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +