தேசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தேசி:
எனில் பெரிய குதிரை
தேசி:
எனில் எலுமிச்சை
தேசி:
எனில் ஒளிரும் அழகுள்ளவள் --படம்:மோநாலிசா
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- देशी--தே3ஶி--பொருள் 2& 3க்கு மூலச்சொல்
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- तेजस्--தே1ஜஸ்--பொருள் 4,5,6க்கு மூலச்சொல்

பொருள்[தொகு]

 • தேசி, பெயர்ச்சொல்.
 1. பெரிய குதிரை
  (எ. கா.) 'தேசிநடை கொள்ளிற் பலம்பரவும் (பதார்த்த. 1294)'.
 2. ஓர் இராகம்
  (எ. கா.) 'சாதாரிதேசி நாமக்ரியை முதல் கோலாலநாதகீத (திருப்பு. 327). ( Mus. )
 3. கூத்துவகை (சிலப். 3, 12, உரை.)(நடனம்)
 4. அழகு (அரு. நி.)
 5. ஒளிரும் அழகுள்ளவள்
  (எ. கா.) தேசியைச் சிறையில் வைத்தான் (கம்பரா. அங்கத. 4)
 6. காண்க...எலுமிச்சை (மலை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. big horse
 2. A specific melody-type--( Mus. )
 3. A mode of dancing --(நடனம்)
 4. beauty
 5. woman of sparkling beauty
 6. acid lime


சொல் வளப்பகுதி[தொகு]

தேசிக்காய், தேசிகன், சுதேசி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேசி&oldid=1444768" இருந்து மீள்விக்கப்பட்டது