பசை
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
பசை (பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (பெ)
- stickiness, tenacity, adhesiveness - ஒட்டும் நிலை, பற்றுமை
- glue, paste, cement - பிசின். பத்தல் பசையொடுசேர்த்தி (மலைபடு. 26)
- glutinous substance in fruits, roots, etc.; sap; juice - சாரம் பசைநறவின் (கம்பரா கங்கைப். 5)
- moisture - ஈரம். வேரொடும் பசையற (கம்பரா. தாடகை. 3)
- devotion - பக்தி, பத்தி பரமனை நினைபசையொடு (தேவாரம் 833, 11)
- love, affection - அன்பு.
- desire, attachment - பற்று (யாழ். அக. )
- compassion, mercy - இரக்கம். பசையற்றாள் (கம்பரா. கைகேசி. 42)
- gain, profit - பயன். வியாபாரத்திற் சிறிதும் பசையில்லை.
- property, possession - செல்வம். அவனிடத்திற் பசையுண்டா?
- strength, vigour, vigor - கொழுப்பு. அவன் உடலிலே பசையில்லை.
- paste applied to a drumhead to improve the sound - முழவின் மார்ச்சனைப் பண்டம்.
பயன்பாடு
- பிசுபிசுன்னு இருக்கும் அந்தபசையை, எடுத்துத் தா.
- அவன் நல்ல பசையுள்ள குடும்பத்தில் பிறந்தவன்.
(இலக்கியப் பயன்பாடு)
- வீறிலேன் பசையினாற் றுஞ்சி - அன்பு(சீவக சிந்தாமணி 1814)
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +