உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
பத்தி
  • பத்தி, பெயர்ச்சொல்.
  1. வரிசையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    பத்தியிற் குயிற்றிய... (சீவகசிந்தாமணி-83)
  2. வகுப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  3. செய்தித்தாள் முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    செய்தித்தாளில் இரண்டு பத்திகளில் உரை அச்சிடப்பட்டுள்ளது.
  4. பாத்தியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  5. முறைமையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  6. அலங்கார வேலைப்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    பத்திப் பல்வினை... (பெருங்கதை-இலாவாண காண்டம், 6, 55)
  7. வீட்டிறப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    வீட்டில் பத்தியிறக்கினார்கள்.
  8. தூண்களின் இடைவெளியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  9. யானையின் நடை வகையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    வினைதகு வட் டமும் வீதியும் பத்தியும்... (சீவகசிந்தாமணி-1839)
  10. கடவுள் முதலியோரிடத்திலுள்ள பற்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப் பவன்... (திருவாசகம்-2, 119)
  11. வழிபாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  12. ஒழுக்கத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  13. ஒரு தேரையும் ஒரு யானையையும் மூன்று குதிரைகளையும் ஐந்து காலாட்களையும் கொண்ட சிறிய படைப் பிரிவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  14. நம்பிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  15. அன்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. row, train, column, rank, range, file, colonnade, series
  2. class, arrangement, division
  3. mode, method, order, way, plan, manner
  4. service, worship
  5. piety, faith
  6. love, affection


இலக்கிய மேற்கோள்கள்

[தொகு]
  • கம்பராமாயணம்: பல்பெரும் பதாகைப் பத்தி
  • திருவாசகம்: பத்திநெறி அறிவித்துப் பழவினைகள்
  • தேவாரம்: பத்தி தருவது நீறு
  • நீலகேசி: பத்தி யினா னென்னா லுரைக்கப் படுகின்றதொன் றீங்குளதே
  • மணிமேகலை: பத்தி வேதிகைப் பசும்பொற் றூணத்து


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்தி&oldid=1128011" இலிருந்து மீள்விக்கப்பட்டது