பயனர் பேச்சு:தகவலுழவன்/2017 to 2020

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பக்கத்தை நீக்குதல்[தொகு]

வணக்கம் ஐயா,

தமிழ் விக்சனரியில் ஒரே அர்த்தங்களை கொண்ட சில பக்கங்கள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன அதை நீக்க வேண்டும். அதை இங்கு குறிப்பிட்டுள்ளேன். தேவையான நடவடிக்கயை எடுக்கவும். நன்றி! - -Aadhipkesavan (பேச்சு) 19:18, 30 மே 2017 (UTC)[பதிலளி]

பட்டியலிட்டமைக்கு மிக்க நன்றி. 4-5வருடங்களுக்கு முன் அவை உருவாக்கப்பட்டவை. விக்சனரியில் துப்புரவு ப்பணியை செய்ய வேண்டும் என்று சில மாதங்களாக எண்ணி வருகிறேன். அதனைச் செய்ய தூண்டியமைக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியதில் முதலில் உருவானதை பேணி, இரண்டாவது சொற்களை நீக்க உள்ளேன். மேலும் வழிகாட்டுதலை அவ்வப்போது தரக்கோருகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:33, 31 மே 2017 (UTC)[பதிலளி]
@Info-farmer: நன்றி ஐயா. நான் ஆலமரதடியில் நீக்கப்பட வேண்டிய சில பக்கங்களை சேர்த்துள்ளேன். தேவையான நடவடிக்கயை எடுக்கவும். நான் உங்களிடம் ஒன்றை கேட்க வேன்டும். மற்ற Wikiகலில் உள்ளது போல ஏன் இந்த wikiயில் Request for deletion பக்கம் இல்லை ? இது போன்ற செயல்களுக்கு அப்பக்கம் மிகவும் உதவிகரமான ஒன்றாயிட்றே. நன்றி! - -Aadhipkesavan (பேச்சு) 12:09, 31 மே 2017 (UTC)[பதிலளி]
{{நீக்குக}} ஒரு வேண்டுகோள். ஐயா என்றெல்லாம் அழைக்க வேண்டாம். உழவன் என்று அழைத்தால் மகிழ்வேன். மற்றொன்று நீங்கள் பட்டியலிட்ட, சில பக்கங்களைப் பாருங்கள்.. அந்த மாற்றங்களை நீங்களும் செய்யலாம். சொல்லப்போனால், அதைவிட மேலானவற்றை மேம்படுத்தி, பிறகு நீக்குக வார்ப்புரு இடுங்கள். முதலில் உருவாக்கிய சொல்லைப் பேணி, இரண்டாவது உருவானதை நீக்குக என்பதற்குள் அடக்கலாம்.--தகவலுழவன் (பேச்சு) 17:05, 31 மே 2017 (UTC)[பதிலளி]
வழிகாட்டுதலுக்கு நன்றி உழவரே -Aadhipkesavan (பேச்சு) 10:27, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]

TamilBOT பற்றிய சந்தேகம்[தொகு]

வணக்கம் உழவரே TamilBOT சில சொற்களின் பன்மைகளை புதிய பக்கங்களாக உருவாக்கிவுள்ளது எடுத்துக்காட்டாக,

  1. wage rate-wage rates
  2. wage differential-wage differentials

இவை வழிமாற்றிகளாக உருவாக்கபட்டிருக்கலாமே?

நண்பரே! TamilBOT மட்டுமல்ல அதற்குமுன் இயக்கிய, சுந்தர் தானியங்கி முதல் பல சொற்களில் துப்புரவு பணிகள் செய்ய வேண்டியுள்ளன. அவற்றை ஆலமரத்தடியில் பட்டியல் இடுக. அதற்குரிய தானியக்கப் பணிகளைச் சொல்லித் தருகிறேன். உங்களது அலைப்பேசி எண் தருக. உரிய வழிமுறைகளைச் சொல்லித்தருகிறேன். இங்கு முன்பு வெற்றிடம் இருந்தது. அதில் தற்போது உள்ளவைகளில் பல மேம்பாடு செய்ய வேண்டியுள்ளன என்பதே நிலவரம். எனவே, மதிப்பீடு செய்வதோடு, அதன் மதிப்பை உயர்த்த திட்டமிடுங்கள். உங்களோடு இணைவேன். ஏனெனில், விக்சனரி அனைவருக்கும் உரியது. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 13:45, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் உழவரே! விக்சனரியின் மீது உங்களின் ஈடுபாட்டை கண்டு மகிழ்ச்சியுருகிறேன். தங்களுக்கு உதவுவதில் எனக்கும் ஈடுபாடு உள்ளது உழவரே. ஆனால் தானியங்கியை உருவாக்கும் செயலில் எனக்கு ஈடுபாடு இல்லை. நீங்கள் கூறியது போல இதுபோன்ற பக்கங்களை பட்டியலிடுவதில் என்னால் ஆன உதவியை செய்கிறேன்.Aadhipkesavan (பேச்சு) 18:04, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

நீக்குக[தொகு]

நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் பகுப்பில் நிறையப் பக்கங்கள் நிலுவையில் உள்ளன. அவற்றைக் கவனியுங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 01:35, 28 சூன் 2017 (UTC)[பதிலளி]

பகுப்பு:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் என்பதில் பயனர் பெயர்கள், சில படங்கள் தவிர சரிபார்த்து நீக்கப்பட்டன.--தகவலுழவன் (பேச்சு) 02:16, 28 சூன் 2017 (UTC)[பதிலளி]

தானறி[தொகு]

உழவன், Artificial Intelligence (AI) என்ற பதத்திற்கு தானறி என புதிய வார்த்தையை சேர்க்கலாமா என்பது குறித்து தங்கள் கருத்தை கோருகிறேன். --எஸ்ஸார் (பேச்சு) 07:28, 28 ஏப்ரல் 2018 (UTC)

உங்களை இங்கு காண்பதிலே மகிழ்ச்சி. நேரம் இருக்கும் போது, எனது எண்ணுக்கு அழையுங்கள். நாம் உரையாடி, பல நாட்கள் ஆகின்றன. அறி என்பது வினைச்சொல். நீங்கள் வினவுவது பெயர். 'தான்' என்பதை விட, 'சுயம்பு' என்று சொல்வார்களே, அதனைப் பயன்படுத்தலாம். எனவே, வேறு சொல்லை ஆக்கச் சிந்தியுங்கள்.--தகவலுழவன் (பேச்சு) 14:58, 28 ஏப்ரல் 2018 (UTC)
தானாகவே தன்னை அறிவூட்டி செறிவூட்டிக்கொள்ளும் இயல்பு உள்ளதால் தானாக அறிந்துணர்ந்து செயலாற்றுபவன் என்ற பொருளில் அவ்வாறு முன்மொழிந்தேன். தவிர, பால் வேறுபாடு, திணை வேறுபாடு என எதனையும் இங்கே புகுத்த முடியாது என்பதால் அறி என்றே குறிக்க முனைந்தேன். உணர் --> உணரி என்ற வரிசையில் அவ்வாறு 'இ'கரத்தில் முடிகிறது. தங்களால் ஏதேனும் பரிந்துரைக்க முடியுமா உழவன். --எஸ்ஸார் (பேச்சு) 08:24, 2 மே 2018 (UTC)[பதிலளி]

@எஸ்ஸார், தகவலுழவன்: எஸ்ஸார்: Artificial Intelligence என்பதற்கு செயற்கை அறிவுத்திறன் என்று விக்கியில் ஒரு கட்டுரை உள்ளது. எனவே, நீங்களும் அதே சொல்லைப் பயன் படுத்தலாம். Paramesh1231 (பேச்சு) 23:52, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]


Significant long-term spam on this project[தொகு]

Hi, apologies for English, I do not speak your project's language - I have seen reports of spam pages on this project, such as this page. Please consider patrolling for spam pages and delete them. Thank you! :-)

ஹாய், ஆங்கிலத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன், உங்கள் திட்டத்தின் மொழியை நான் பேசவில்லை - இந்த திட்டத்தில் ஸ்பேம் பக்கங்களின் அறிக்கைகளை நான் கண்டிருக்கிறேன் this page. ஸ்பேம் பக்கங்களுக்கான ரோந்து பார்க்கவும் அவற்றை நீக்கவும். நன்றி! :-)

Kind regards/வகையான குறித்து There'sNoTime (பேச்சு) 19:10, 30 சூன் 2018 (UTC)[பதிலளி]

Hi, I am new to wikitionary. I saw a list where-in it had the list of words which needs to be checked for translation. I visited the page and under the {checktrans-top} tag, I saw an entry with t-check for a particular language. I am a native speaker of the language and confirm it is correct. Now should i just remove an entry from this tag or do I need to do anything else as well? --Cyarenkatnikh (பேச்சு) 14:28, 25 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

Thanks for asking. what is your native language? Which language you want to check?//Now should i just remove an entry // If you want to remove anything, first inform its talk page please. Then only i can inform fellow contributors.--தகவலுழவன் (பேச்சு) 15:31, 25 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

ta.viktionary.org ஐ பயன்படுத்துவது.[தொகு]

வாழ்க தமிழ். வெல்க தமிழர்.

நான் இந்த பக்கத்திற்கு புதுசு. இதை எப்படி பயன்படுத்துவது என்று ஒவ்வொரு படியாக விளக்க முடியுமா?

நிரலர்[தொகு]

எனக்கு செய்நிரல் (program) எழுதுவதில் பயிற்சி உண்டு. ஏதேனும் செய்ய வேண்டுமாயின், என்னால் ஆனதைச் செய்ய இயலும். நன்றி. Paramesh1231 (பேச்சு) 00:07, 1 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Paramesh1231: ஓ.. மிக்க மகிழ்ச்சி. எந்நிரல் மொழி எழுதுவதில் உங்களுக்கு விருப்பம்.--தகவலுழவன் (பேச்சு) 00:57, 2 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@தகவலுழவன்: C, Java, JavaScript ஆகியனவற்றில் நிரலிகள் (programs) பல நாட்கள் முன்பு எழுதிய பழக்கம் உண்டு. வேறு கணின மொழி கற்றுக்கொள்வதாயினும் சிக்கல்கள் இல்லை. எது போன்ற பணிகள் செய்யவேண்டி இருக்கின்றன எனத் தெரிந்தால், என்னால் எது எதைச் செய்ய முடியும் எனக் குறிப்பிட ஏதுவாக இருக்கும். நன்றி. Paramesh1231 (பேச்சு) 23:41, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

Your bot in German Wiktionary[தொகு]

Hi Info-farmer,

please stop your bot immediately in German Wiktionary.

Please note, that in German Wiktionary a bot may not be used without bot flag and without the permission of the Communty.

Best regards --Udo T. (பேச்சு) 11:18, 16 சனவரி 2019 (UTC)[பதிலளி]

i did few manual edits (not bot) to understand and i will follow your notification.--தகவலுழவன் (பேச்சு) 11:21, 16 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மெய்ப்பு[தொகு]

@Info-farmer https://ta.wiktionary.org/s/7rog இல் உத்தரவுத் சீட்டு என்பதை உத்தரவுச்சீட்டு என்று மாற்ற விழைகிறேன். எழுத்துப்பிழை, கவனிக்க விழைகிறேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 08:21, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சமற்கிருதம்[தொகு]

அதிர்ஷ்டசாலி போன்று நன்கு சமற்கிருதம் என்றே தெரிந்தச்சொற்களை தரவேற்றம் செய்யவேண்டுமா?--Thamizhpparithi Maari (பேச்சு) 08:25, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அடிப்படை பகுப்பு மட்டுமே செய்துள்ளேன். வடிவமிடல், படமிடல் பங்களிப்பை செய்வதில்லை. நமது சொல்லினை விரிவு செய்வதே என் நோக்கம். பிற மொழிச்சொற்களை வளப்படுத்துவதும், ஒழித்து வைப்பதும் எனது பங்களிப்பாக இராது. வளப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை ஆலோசனை செய்ய எப்பொழுது வேண்டுமானாலும் அழையுங்கள்--தகவலுழவன் (பேச்சு) 03:23, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]

Vandal[தொகு]

Please see Special:Contribs/121.211.121.137. Thank you, Vermont (பேச்சு) 22:22, 29 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அதிகாரி அணுக்கம்[தொகு]

தங்களுக்கு அதிகாரி அணுக்கம் தர பரிந்துரைத்துள்ளேன். ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:59, 23 ஏப்ரல் 2019 (UTC)

படம்[தொகு]

இப்படத்தை தாங்கள் எடுத்தீர்களா? அல்லது வேறு இடத்திலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? அதன் விவரங்கள் அங்கு கொடுக்கப்படவில்லை. சரியான விவரங்கள் இல்லாத பட்சத்தில் அப்படம் நீக்கப்படும். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:16, 2 சூலை 2019 (UTC)[பதிலளி]

10 ஆண்டுகளுக்கு முன் பொதுவகத்தின் ஒரு கோப்பில் இருந்து இது மறு உருவாக்கம் செய்யப்பட்டது. எந்த கோப்பு என அறிந்து சொல்ல சிறிது காலம் தேவை. இதனை இங்கு பேணுவதால் ஏதேனும் சட்டச்சிக்கல் உள்ளதா? Fair use என்பதன் கீழ் வராது எனில் தெரிவிக்கவும்--தகவலுழவன் (பேச்சு) 02:43, 3 சூலை 2019 (UTC)[பதிலளி]
ஆம் சிக்கல் உள்ளது. நியாயப் பயன்பாடு என்று இருந்தாலும் அப்படம் எங்கிறது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட வேண்டும். பொதுவகத்தில் இக்கோப்பு இருந்தால் அதையே பயன்படுத்தலாம். இங்கு local copy வேறு பெயரில் தேவையில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:47, 4 சூலை 2019 (UTC)[பதிலளி]

Wikimedian-in-Residence at Tamil Virtual Academy[தொகு]

Hello. I am updating the table on the page outreach:Wikimedian in residence and converting it into wikidata. Is there a URL that describes the wikimedia work done at Tamil Virtual Academy in 2015? Also, when did the position finish? You can see the wikidata item at wikidata:Q69050394#P106. Thank you! Evolution and evolvability (பேச்சு) 23:29, 30 செப்டம்பர் 2019 (UTC)

கவனத்திற்கு[தொகு]

    • தற்போதைய நிலையில், விக்கியாக்கத்தில் 5 நிலைகளில் கால் பதித்துள்ளேன். அவ்வளவே.நன்றி!

Helppublic (பேச்சு) 05:45, 26 சூலை 2020 (UTC)[பதிலளி]

காணொலிகள் குறித்து[தொகு]

  1. File:Wikt-ta-adding text to a existing word.webm
  2. File:Wikt-ta-adding text to a new word.webm

நான் முனைவர் த.சத்தியராஜ். கோயமுத்தூர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்து வருகின்றேன். எங்கள் கல்லூரியில் மாணவர்களுக்காக விக்கித்திட்டங்களின் பயிற்சியை வழங்குவதற்கு நீச்சல்காரன் அவர்களிடம் கேட்டபோது திருமிகு தகவலுழவன் அவர்களை அறிமுகம் செய்தார். அவர்களுடன் விக்கித்திட்டம் குறித்த தகவல்களைக் கேட்டபொழுது தனக்குத் தெரிந்தவற்றை ஒளிவுமறைவுமின்றிச் சொல்லித் தந்தார்கள். அவர்கள் மேற்கண்ட இவ்விரு காணொலிகளின் சுட்டிகளை அனுப்பி விக்கிமூலத்திலிருந்து விக்சனரி உருவாக்கும் பயிற்சியைக் கற்கலாம் என்று புலனத்தில் அனுப்பி வைத்தார்கள். இவ்விரு காணொலிகளும் பயன்தரத்தக்க வகையில் எளிமையான கற்பித்தலுடன் அமைந்துள்ளன. இக்காணொளிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, கணித்தமிழ் ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாய் அமையும். அவர்கள் விக்கி பற்றிய அனைத்துச் செயல்பாடுகளையும் செயல்முறைவழிக் கல்வியைக் காணொலி மூலமாகத் தந்து உதவவேண்டும்--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 02:55, 12 ஆகத்து 2020 (UTC).[பதிலளி]

உங்கள் தொடர்புக்கு நன்றி. உங்கள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் செயலாற்ற விரும்புகிறேன். தேவைகளை நீங்கள் கூறியபடி நானோ, பிறரிடம் இருந்தோ பெற்றுத் தருவேன்.உழவன் (உரை) 06:02, 15 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

நிகழ்படப் பதிவுகள்[தொகு]

வணக்கம் ஐயா!

கடந்த சில மாதங்களாக விக்கித் திட்டங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்ப்பதற்காக நிகழ்படப் பதிவுகளை டெலிகிராம் செயலி வழியாக அனுப்பி உதவுகிறீர்கள். அவை மிகவும் பயனளிக்கின்றன. விக்கித் திட்டங்களில் அயராது பணிபுரிவதுடன், எமக்கும் வழிகாட்டுகிறீர்கள். தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்.

Fathima rinosa (பேச்சு) 05:20, 12 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

நன்றி.--உழவன் (உரை) 05:57, 15 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

விக்கிமூலச் சொற்கள்[தொகு]

வணக்கம் தகவல் உழவன் விக்கிமூலத்தில் மெய்ப்பு செய்து முடிக்கபட்டுள்ள தமிழ்ச் சொல்லாக்கம் என்ற நூலில் பல வடமொழி சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் உள்ளன. இவற்றை விக்னசரியில் ஏற்றினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தச் சொற்களை விக்னசரியில் ஏற்ற தங்களுடைய ஆலோசனை தேவை. நன்றி--Arularasan. G (பேச்சு) 02:54, 15 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

நீங்கள் ஏற்கனவே சொன்னதை மறக்கவில்லை. துப்புரவு செய்து ஏற்ற வேண்டும். இன்னும் சிலரது உதவி தேவை. இம்மாதத்தில், கலந்துரையாடி முடிவு செய்து, அனைவரும் பதிவேற்றத்தைத் தொடங்கலாமென்று எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 05:59, 15 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

பின்னூட்டம்[தொகு]

ஐயா வணக்கம், தங்களது வழிகாட்டல் மிகவும் எங்களுக்கு தேவை. ஐயா விக்சனரியில் எப்படி ஒரு சொல்லுக்கான பக்கம் இருக்க வேண்டும் என்று பொதுவான ஒரு வடிவம் கிடைத்தால் விரைவாக வார்த்தைகளின் பொருள்களை அது சான்றுகளையும் பதிவிட வசதியாக இருக்கும். விரைந்து வழங்கினால் நன்றாக இருக்கும். மேலும் அது மட்டுமன்றி நான் திறன்பேசியில் தான் திட்டங்களில் பங்களிப்பதால் திறன் பேசிக்கு ஏற்றார் போல் சில மாற்றங்களை செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் --Aarlin Raj A (பேச்சு) 13:03, 27 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

எந்த மொழிச்சொல்லை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்களோ அதற்கொப்ப வடிவம் மாறுபடும். திறன் பேசி நான் அதிகம் பயன்படுத்துவது இல்லை. எனவே, திறன்பேசி குறித்த வினாக்களுக்கு பிறரிடம் கேட்டு விடைபெறுவோம். எனக்கும் அதுகுறித்து அறிய ஆவல்--உழவன் (உரை) 23:33, 27 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக ஐயா அது மட்டும் அல்ல ஐயா விகிதியங்களில் என் மொத்த பங்களிப்புகளை காண அவலாக உள்ளேன். எனவே எனக்கு அதை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும் ஐயா--Aarlin Raj A (பேச்சு) 03:12, 28 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

தகவல் உழவன் என்று அழைத்தாலே போதும். ஐயா என்று அழைத்தல் வேண்டாம்.விக்கியில் அனைவரும் சமமே. Raj A அனைத்துவிக்கிமீடியத்திட்டங்களில் உங்களது பங்களிப்பு,விக்சனரியில் உங்களது பங்களிப்பு விரிவாக.. பல செயற்பாடுகள் உள்ளன. இங்கு தூய்மைப்படுத்தும் பணி உள்ளது. உங்களுக்கு செய்ய விருப்பம் எனில், ஒரு சில நண்பர்களுடன் கூகுள் மீட் உருவாக்கவும். அரைமணி நேரம் போதும். இதுபோல பல கூடுகை செய்து மேன்மையுறுவோம். ஒன்றிலேயே உங்கள் ஆற்றலை குவிக்காதீர்கள். இந்த இணைய உரலியின் இறுதியில் வேறு பெயரை இட்டால், அவரது புள்ளி விவரங்கள் வரும்.--உழவன் (உரை) 06:33, 28 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக தகவல் உழவன்...தெளிவுப்படுத்தியதற்கு நன்றி -- Aarlin Raj A (பேச்சு) 18:08, 29 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

விக்சனரி முதற்பக்கம் மேம்படுத்தம்[தொகு]

  1. வணக்கம். தமிழ் விக்சனரி முதற்பக்கத்தை இன்னும் மேம்படுத்தினால் உதவியாக இருக்கும். சான்றாக, பெயர், வினை, இடை, உரி, தற்சமம், தற்பவம், தேசியம், கிராமியம்(வட்டாரம்), தொகைச்சொல் எனப் பல்வேறு வகைகள் உள்ளன. அதன் அடிப்படையில் முதற்பக்கம் இருப்பின் இன்னும் சிறப்புப் பெறும்.--த.சத்தியராஜ் (பேச்சு) 23:35, 7 செப்டம்பர் 2020 (UTC)

ஆம். உங்கள் எண்ணங்களை நானும் கொண்டுள்ளேன். இருக்கும் சொற்களை வகைப்படுத்திய பின்பு மாற்றலாம். உங்கள் வழிகாட்டல் தேவை.--உழவன் (உரை) 06:10, 13 செப்டம்பர் 2020 (UTC)

Speedy deletion requests[தொகு]

Hello,

Could you please take a look at பகுப்பு:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் and delete whichever entries have no value? Lots of these have been tagged for deletion for multiple months. I deleted ones I was sure about, but since I don't speak Tamil I can't competently assess the others. One I wasn't sure about, for example, was பட்டிணம். PiRSquared17 (பேச்சு) 22:09, 12 செப்டம்பர் 2020 (UTC)

done. 90% remain later. Thanks--உழவன் (உரை) 06:35, 13 செப்டம்பர் 2020 (UTC)


படிமங்கள் ஏற்ற அனுமதி வேண்டும்[தொகு]

அண்ணே வணக்கம். நான் இங்கு என்னுடைய கணினியில் இருந்து படிமங்களை ஏற்ற விரும்புகிறேன். ஆனால் என்னால் ஏற்ற முடியவில்லை. அது ஏனென்று தெரிந்து கொள்ளலாமா? (பெரும்பாண்டியன்2) 7:07 pm, 30 ஐப்பசி 2020 (EST)

விக்கிமூலத்தில் நடைபெறும் இந்திய அளவிலான மெய்ப்புப்போட்டியில் கலந்து கொண்டு தமிழ் முதலிடம் வர பங்களிப்பு செய்யுங்கள். நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை நடைபெற உள்ளது. எப்படி செய்ய வேண்டும் என்று அங்கேயே சிறு சிறு திரைப்பதிவுகளை இணைத்துள்ளேன். ஓரிரு நிமிடத்தில் கற்கலாம். உங்களை ஆஙலுடன் அங்கு எதிர்பார்க்கிறேன். இப்போட்டி காலம் முடிந்தவுடன், இங்கு பங்களிக்கலாம்.--உழவன் (உரை) 10:59, 31 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]