பிறன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிறன் , (பெ)
- வேறொருவன்; மற்றையான். பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் (குறள், 142)
- அன்னியன்
- அடுத்தவன், அயலான்
- மனம் வேறுபட்டவன். பிறன்பெண்டிர் (கலித். 84)
- பகைவன்; பகைஞன். பிற ரகன்றலை நாடே (புறநா. 7).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பிறன் மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்பதுதான் ராமாயணத்தில் சொல்லப்படும் கருத்து. (ராமர் காட்டும் ராமராஜ்யம், சின்னக்கருப்பன், திண்ணை)
- தன் வீட்டுக்குள்ளேயே பிறன் குழந்தைகள் வளர்கின்றன. டாக்டர் சந்தானத்தின் வீட்டில் கம்பவுண்டரின் குழந்தை[வீடு],தண்டபாணியின் வீட்டில் சிவசுவின் குழந்தைகள்[அம்மா வந்தாள்], பழனி வீட்டில் வையன்னா குழந்தை[மலர்மஞ்சம்]. ஜானகி ராமனின் கதைகளில் பிறன் குழந்தைகளாக சொந்த வீட்டுக்குள் வேர் விட்டவை,இன்றும் பிறன் விதைப்புகளாகக் குடும்பங்களுக்குள் மனசின் வெறுப்புகளாக அலட்சியங்களாக வெறிகளாகப் பிறந்து வளர்ந்து தான் விடுகின்றன.(தி.ஜானகிராமனின் பெண்கள்,ஆண்கள்,கிழவர்கள், மாலதி, திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
- வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிறன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி