பேடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


படிமம்:xx
பேடு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பேடு   (பெயர்ச்சொல்)

  1. நடுவிரல்
  2. அலி (ஆணுமல்லாமல் பெண்ணும் அல்லாமல் உள்ள நிலை)
  3. ஊர் (ஊர்ப்பெயர்)
  4. பயனற்றது, உள்ளீடற்றுப் பயனற்று இருப்பது
  5. பெண்
  6. பறவைப்பெண் (பெட்டை)
  7. சிறுமை
விளக்கம்
  1. அலி, நடுவிரல் முதலியன ஒருபக்கமும் சேராத என்னும் பொருளில் வருவன. பே என்றால் "இல்லை என்னும் பொருள்தரும் சொல்". இதன்வழி பயனற்றது, உள்ளீடற்றது என்னும் பொருள் பெறுகின்றது. பெண்குறியின் அமைப்பால் பெண்ணுக்கும், பெண்பறவைக்கும் இப்பெயர் வந்ததாகவும் கொள்ளலாம். சிறுமை என்னும் பொருளும் இன்மை, பற்றாமை பற்றி எழுந்ததாகக் கொள்ளலாம். பேடு என்னும் ஊர்ப்பெயர் "இடைப்பட்ட" ஊர் என்னும் பொருளில் வந்ததாகக் கொள்ளலாம்.
பயன்பாடு

{இலக்கியப் பயன்பாடு)
காங்கூ லம்மே கருதும் காலைச்
சுட்டும் பேடும் பெருவிரல் மூன்றும்
மொட்டின்முன் குவிய அநாமிகை முடக்கிச்
சிறுவிரல் நிமர்ந்த செய்கைத்(து) ஆகும்       (கூத்தியல் திரட்டு 3, 17)

மொழிபெயர்ப்புகள்
  • -
  • கழகத் தமிழ் அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேடு&oldid=1069814" இலிருந்து மீள்விக்கப்பட்டது