மச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மச்சம்:
என்றால் திருமாலின் மச்சாவதாரம்
மச்சம்:
என்றால் இறைச்சி/மாமிசம்
மச்சம்:
என்றால் மீன்
மச்சம்:
என்றால் மீனராசி---மீனராசியின் மேலைநாட்டுச் சின்னம்
ஒலிப்பு
(கோப்பு)

பொருள்[தொகு]

  • மச்சம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- मत्स --மத்1ஸ = மச்சம் மீன் என்னும் அர்த்தத்திற்கு,
  1. இறைவன் திருமால் எடுத்த முதல் அவதாரம்.(விவரங்கட்கு காண்க...மச்சாவதாரம்)
  2. உடம்பிலுண்டாம் புள்ளி
  3. இறைச்சி, மாமிசம் இலங்கைத் தமிழ் வழக்கு
  4. அதிர்ஷ்டம்
  5. மீன்
  6. மச்சப்பொன்
  7. சுவடு, ருசு
  8. மீனராசி
  9. பங்குனி மாதம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. first avatar of lord mahavishnu, a hindu god, as fish
  2. mole on the skin
  3. meat
  4. luck, fortune
  5. fish
  6. piece of gold kept as a sample
  7. trace, clue
  8. pisces of the zodiac
  9. the month of panguni, a Tamil month

வாக்கியப் பயன்பாடு[தொகு]

  1. அவனுக்கு கண் அருகே மச்சம் இருக்கிறது...(mole near the eye)

இலக்கியப் பயன்பாடு[தொகு]

  1. அம்மா மச்சம், மாமிசம் சேர்ப்பது கிடையாது (மோகவாசல், ரஞ்சகுமாரின் சிறுகதை)
  2. அவள் மோவாயின் வலதுபுறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம் (ஜெயகாந்தனின் சிறுகதை0


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மச்ச வெடுக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மச்சம்&oldid=1281581" இலிருந்து மீள்விக்கப்பட்டது