மடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

[[|thumb|200pxpx||மடம்:
-இது இந்தியா கொல்கத்தாவிலுள்ள பேலூர் இராமகிருஷ்ண மடம்]]

மடம்:
எனில் கோவில்--இது திருவரங்கம் அரங்கன் கோவில்
மடம்:
எனில் இரதம்--இது கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் இரதம்/தேர்

படிமம்:Tibet - Tsurpu Monastery 1.jpg

(கோப்பு)
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- मूढ--மூட4--பொருள் 1-5-- மூலச்சொல்
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--मठ--மட2--பொருள் 6-12-- மூலச்சொல்

பொருள்[தொகு]

 • மடம், பெயர்ச்சொல்.
 1. அறியாமை
  (எ. கா.) மடப்படலின்றிச் சூழுமதி வல்லார் (சீவக. 1927)
 2. மகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை
  (எ. கா.) . வாலிழை மடமங்கையர் (புறநா. 11)
 3. அழகு
  (எ. கா.) மடக் கணீர் சோரும் (சிலப். 17, உரைப்பாட்டுமடை)
 4. மென்மை
  (எ. கா.) தெளிநடை மடப் பிணை (புறநா. 23)
 5. இணக்கம்
  (எ. கா.) அஞ்சிறைய மடநாராய் (திவ். திருவாய். 1, 4, 1).
 6. முனிவர் வாழிடம் (பிங். )
 7. நைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம்
  (எ. கா.) சிருங் கேரி மடம், திருவாவடுதுறை மடம்..
 8. சத்திரம் (சூடாமணி நிகண்டு)
 9. சாவடி (உள்ளூர் பயன்பாடு)
 10. கோயில் (யாழ். அக. )
 11. இடம் (பிங். )
 12. இரதம் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. ignorance, folly
 2. simplicity, credulity, artlessness, one of four makaṭūu-k-kuṇam...மகடூஉக்குணம்
 3. beauty
 4. tenderness, delicacy
 5. acquiescence
 6. hermitage
 7. monastery, convent for celibate monks

choultry where pilgrims and religious mendicants are fed

 1. rest-house
 2. temple
 3. place
 4. temple car
 • இந்தி:
 1. मठ


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடம்&oldid=1884537" இலிருந்து மீள்விக்கப்பட்டது