மணிக்கூடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மணிக்கூடு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- belfry-stand; bell-tower
- clock-tower, clock-house
- clock case
- clock, as containing a bell
- clepsydra; hour-glass
- a plant used in dyeing
விளக்கம்
பயன்பாடு
- எங்கள் கிராமத்தில் ஒரேயொரு வீட்டில் சாவி கொடுத்தால் ஓடும் கடிகாரம் இருந்தது. பிள்ளை பிறக்கும் சரியான நேரம் தெரியவேண்டும் என்பதால் ஐயா அந்த மணிக்கூட்டை இரவல் வாங்கி வருவார். .. பிள்ளை பிறந்த அடுத்த நாள் மணிக்கூடு போய்விடும். (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
- எங்களுடைய சாதகங்கள் இரவல் மணிக்கூடு காட்டிய நேரப்படி கணித்து எழுதப்பட்டவை. (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
- மணிக்கூடு வருவதற்கு முன்னர் ஐயாவின் காலத்தில் எப்படி சாதகம் கணித்தார்கள் என்று அவரிடம் நான் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன். பகலில் பிள்ளை பிறந்தால் ஒருவர் தன் நிழலை காலால் அளந்து சரியாக நேரம் கூறமுடியும். நான் சிறுவனாக இருந்தபோது அப்படி ஒருவர் தன் நிழலை அளந்து சரியாக மணி சொன்னதை கண்டிருக்கிறேன். இரவு நேரமாக இருந்தால் நட்சத்திரங்களின் நிலையை வைத்து நேரம் சொல்பவர்கள் கிராமங்களில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கணித்து கொடுத்த நேரத்தை வைத்து சாதகம் எழுதிவிடுவார்கள். (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மணிக்கூடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கடிகாரம் - கடியாரம் - கோபுரம் - நாழிகை - வட்டில் - மணிக்கூண்டு