வரட்டி
Appearance
பொருள்
வரட்டி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஏழெட்டு வீடுகளில் மாடு கவனிக்கிறான். அதிகாலையில் கிளம்பிப் போனால் தொழுவை சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி தண்ணீர் வைத்து, பால் கறப்பவர் கறக்கின்ற வேளையில் சாணங்களை வரட்டி தட்டி காயப் போட்டு, பின் மேய்ச்சலுக்கு மாடுகளைப் பற்றிச் சென்றால் பொழுது சாயத்தான் திரும்ப முடிகிறது (இரத்த பாசம், ராமலக்ஷ்மி, திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- வரட்டியுங் கேழ்வரகு ரொட்டியும் போலவே(தனிப்பா.).
- வட்டமதி போலிருக்கும்; வன்னிக்கொடி தாவும்
- கொட்டுவார் கையினின்றும் கூத்தாடும் - சுட்டால்
- அரகரா என்னுமே அம்பல சோமாசி
- ஒருநாள் விட்டேன் ஈது உரை
- கம்பரின் வீட்டைப் பெருக்கி, சாணி கூட்டி வரட்டி தட்டிப் பணிசெய்யும் கம்பருடைய வீட்டு வேலைக்காரி புலவர் அம்பல சோமாசியிடம் புதிராகக் கேட்ட இவ்வெண்பாவுக்கு விடை: வரட்டி (வெள்ளாட்டி சொன்ன வெண்பா!, தமிழ்மணி, 27 மே 2012)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வரட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +