வறுவல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வறுவல், பெயர்ச்சொல்.
- எண்ணெய் அல்லது நெய்யிற் பொரித்த கறி (நாமதீப. 403.)
- எண்ணெயில் ஆழப்பொரித்தெடுத்த காய் அல்லது கிழங்கு வகைகளின் மெல்லியச் சீவற்துண்டுகள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- உணவுக்கு அதிகச் சுவை/கவர்ச்சியூட்ட, பக்க வெஞ்சனமாகவோ அல்லது அவ்வப்போது கொரித்துத் தின்ன சிற்றுணவாகவோ தயாரிக்கப்படும் உணவுவகை வறுவல்...வாழைக்காய் போன்ற காய்வகைகளையும் மற்றும் உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளையும், மிக மெல்லியதாகச் சீவி/நீளத் துண்டுகளாக்கி கொதிக்கும் எண்ணெயிலிட்டுப் பொரித்து/வறுத்தெடுத்து, உபரி எண்ணெயை வடித்தப் பிறகு உப்புப்பொடி, மிளகாய் அல்லது மிளகுப்பொடியை அதன்மீதுத் தூவி உண்பர்..கரகரப்பாகவும், உபயோகித்த காய்கறிகளின் சுவையோடும், குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைவராலும் மிகவிரும்பி உண்ணப்படும் உணவு வறுவல் ஆகும்...சம்பிரதாயமாக மேற்குறிப்பிட்ட காய்கறி வகைகளையே வறுவலுக்குப் பயன்படுத்துவர்...தற்காலத்தில் பாகற்காய், செங்கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு, செம்முள்ளங்கி, பலாப்பழம் போன்ற இன்னும் பற்பல காய்கறி/கிழங்கு/பழ வகைகளில் வறுவல் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிட்டன...மேனாடுகளில் இன்னும் பல்வகை வறுவல்கள் புசிக்கக் கிடைக்கின்றன...
-
வறுவல்-உருளைக்கிழங்கு-Potato
-
வறுவல்-வாழைக்காய்-Plantain
-
வறுவல்-செம்முள்ளங்கி-Carrot
-
வறுவல்-பலாப்பழம்-Jackfruit
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +