இறைவன் உள்ளான் என்றும், வாழ்க்கைக்கான ஒழுக்கங்களையும், அறநெறிகளையும் போதிக்கும் எந்தவொருச் சமயத்தினைச் சேர்ந்தவர்களும், அவரவர்கள் விருப்பப்பட்டத் தெய்வங்களை கோவில்/பள்ளிவாசல்/மாதாக்கோயில்/தேவாலயம்/குருத்வாரா போன்ற பொதுவிடங்களிலோ அல்லது வீடுகளிலோ, ஏற்படுத்தப்பட்ட/பழக்கப்பட்ட நியம நியதிகளைப் பின்பற்றி பூசிக்கும்/ஆராதிக்கும்/வேண்டும் முறையே வழிபாடு ஆகும்...
வழிபாடு என்பது மதம், குலம், நாடு, இடம், குடும்ப பழக்க வழக்கங்கள் முதலானவற்றின் அடிப்படையில் பலவேறு வழிமுறைகளில் பின்பற்றப்படுகிறது...
வழிபாடுகள் சமயாசந்தர்ப்பங்களுக்கு அனுசரணையாக அதாவது பண்டிகை, திருநாள்,உற்சவம், வீட்டு விசேடங்கள், தனிப்பட்ட பிரார்த்தனைகள்/வேண்டுதல்கள் ஆகிய நிகழ்வுகளுக்கேற்பவும் மாறுபடும்...
பெரும்பான்மை மக்கள் மன அமைதிக்காகவும், வாழ்க்கையில் கோரியதை அடைந்து இன்புற்றிருக்கவும், முற்பிறவிகளில் செய்த பாவங்கள் தொலைந்து நற்கதியை அடையவும் தெய்வ வழிபாடு அவசியம் எனக் கருதுகிறார்கள்.