விக்சனரி:ஆலமரத்தடி/2006

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
இது பழைய ஆலமரத்தடி உரையாடல்களின் தொகுப்பாகும். வராலாற்றுத் தொடர்ச்சிக்காக இங்கே பேணப்படுகின்றன. புதிய தலைப்புகளை ஆலமரத்தடியில் தொடங்கவும். இப்பக்கம் கவனிக்கப்படுவதில்லை.
தொகுப்பு

பரண்

2006 | 2007 | 2008-2009
2010/1 | 2010/2 | 2011
2012 | 2012/2 | 2013/1
2014/1 | 2015/1 | 2016/1
2017 | 2018 | 2019


ஆங்கிலம்-தமிழ் எளிய அகராதி[தொகு]

தமிழ் மட்டும் அறிந்தோர் ஆங்கிலம் அறிந்து கொள்ளும் வகையில் எளிய ஆங்கிலம்-தமிழ் அகராதியை உருவாக்க முனைந்துள்ளேன். அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இன்றியமையாத ஆங்கில சொற்களை ஒவ்வொரு நாளும் 20 சொற்கள் என்ற கணக்கில் பதியலாம் என்றிருக்கிறேன். பிற பயனர்களையும் என்னுடைய இந்த முயற்சியில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகிறேன். எடுத்துக்காட்டாக, money, food, green, chair போன்ற பதிப்புகளை பாருங்கள். நன்றி

I am totally confused. I followed your link for money and added another meaning "காசு" . If you look at the page, Money is the title and sub heading says "ஆங்கிலம்" with bulleted thamizh meanings. Shouldn't it say "தமிழ்", as in Money's "தமிழ்" meanings. Correct me if I am wrong. - Saru

மேலே, விக்சனரி தொடங்கிய காலத்தில் தினம் 20 சொற்கள் என்ற இலக்கு வைத்திருந்தேன். சொந்தக் கணினி, இணைய வசதி இல்லாதிருந்ததால் அதை நிறைவேற்ற இயலவில்லை. தற்பொழுது அந்தக் குறை இல்லை. தினம் குறைந்தது 30 சொற்கள், மாதம் ஒன்றுக்கு குறைந்தது 1000 சொற்கள் என்ற கணக்கில் பங்களிக்கத் தொடங்கி, மற்ற பயனர்களும் முனைப்புடன் பங்களித்தால் (சுந்தரின் தானியங்கியையும் சேர்த்து) தமிழ் விக்சனரியில் 10000 சொற்கள் என்ற இலக்கை ஆறு மாத காலத்தில் (மார்ச் 2007 தொடக்கம்) எட்டிப் பிடிக்கலாம் என்பது என் நம்பிக்கை. பார்க்கலாம். --ரவி 16:47, 20 ஆகஸ்ட் 2006 (UTC)

form creation discussion[தொகு]

 • I wonder whether we can implement an application where we can create a

form based submission process. For instance, just typing in the Tamil Word, Equivalent English word, Category, etc would automatically list the word in the proper place--user:Natkeeran

 • After briefly reviewing the English Wiktionary, I think even they have very basic setup and little

additional thought has been invested. I might be wrong. An extended categorization is not needed for Wiktionary. Major categories are sufficient.

We should perhaps evolve various pieces of information that need to be or can be included for a word. A criteria could be adopted from a well reputed dictionary, and then extended to include other language cases.

You could just make that as pull down menu or opition. A possible form field may be as follows:

Required Fields: Tamil Word, Major Category

The following fields optional: English Equivalent, Tamil Equivalent (s), Hindi Equivalent, Sinhalese Equivalent, Sanskrit Equivalent, Etc.

Other language equivalents and other word related information should be able to be manually edited.--user:Natkeeran

Natkeeran, whatever code we might write it should exhibit only the fileds which have been entered and not display the fields that are not entered. if it displays the incomplete fileds too then wiktionary will have an incomplete look. Not all users can fill all the optional language fields u have mentioned. so my suggestion for the form design is as follows:

1. page heading (compulsory field) 2. Tamil meaning (compulsory field) 3. Tamil meaning 2, Tamil meaning 3..etc., (optional filed) 4. Category (optional) 5. other language (optional filed) - equivalent word (optional field) 6. other language 2 (optional filed) - equivalent word (optional field) and so on for maximun 5 languages..if needed we can include more fileds for more languages later--ரவி (பேச்சு) 12:01, 23 செப்டெம்பர் 2005 (UTC)


Ravi: I agree that the page should not display any place holders and such. That is a matter of programming. I am not sure how involved this application could be. Interfacing with the Wikitionary may be the difficult part, but you have implemented similar application in Tamil Wikipedia, although not to this scope. I am assuming the page heading would be the Tamil Word. I am not sure requiring Tamil meaning would such a good idea, as many people may just may want to submit the English equivalents. Yes, category can be optional but, recommeded! Perhaps, we can settle upon a set of macro categories as a start. Natkeeran.

தாய் பகுப்புகளை மட்டும் உருவாக்கும் உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். தமிழ் விக்சனரியின் பணியே எம்மொழிச்சொல்லுக்கும் (தமிழ் சொல் உட்பட) தமிழில் பொருளும் விளக்கமும் தருவது தான் என்பதால், பக்கத்தலைப்பான சொல்லுடன் தமிழ் பொருள் தருவதும் மிக முக்கியம் தான். அப்புறம், பக்கத்தலைப்பு எம்மொழிச்சொல்லாகவும் இருக்காலாம். தொடக்கத்தில் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் அகராதிகளே உருவாக்கப்படும் என்பது எதிர்பார்க்கத்தக்கது தானெ என்றாலும் பன்மொழி அகராதியை உருவாக்குவது தான் இறுதி நோக்கம் என்பது தெளிவு. நீங்கள் சொல்லும் விடயங்களை சுந்தர் கருத்தில் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்--ரவி (பேச்சு) 13:05, 25 செப்டெம்பர் 2005 (UTC)

எத்தனை உள்ளீட்டுப் பெட்டிகள் இருக்க வேண்டுமென்பதை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். மொத்த மென்பொருளையும் தந்துவிடுகிறேன், தேவையானால் நீங்களே மாற்றிக் கொள்ளலாம். மற்றபடி, நீங்கள் பொதுவாகப் பயன்படுத்தும் கணனிகளின் மென்பொருள் மற்றும் வன்பொருள் திறனை அறிந்து அதற்கேற்றவாறு செய்யலாம். எடுத்துக்காட்டாக நான் லினக்ஸ் இயங்கு தளத்தில் பனிபுரிவதால், எனக்கு பெர்ள் நிரலாக்க மொழியில் நிரலாக்குவது எளிமையாகத் தோன்றுகிறது. அப்படி நான் செய்தால், நீங்கள் இலவசமாகக் கிடைக்கும் பெர்ள் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டியிருக்கும். இல்லையெனில், மைக்ரோசாஃடு டாட் நெட்டு மென்பொருள் நிறுவப்பட்டுள்ள ஒரு கணனியை யாராவது நன்பரிடம் இரவல் வாங்கிக் கொள்கிறேன். -- Sundar 08:54, 28 செப்டெம்பர் 2005 (UTC)

சுந்தர், perlஐ எங்கிருந்து இறக்குவது என்று தெரியப்படுத்தினால் அதை நானும் நற்கீரனும் முயன்று பாரத்து விட்டு உங்களுக்கு சொல்கிறோம். என்னுடைய அலுவலகக் கணினியில் administrator access கிடையாது. perlஐ நிறுவ அது தேவைப்பட்டால் வேண்டி வாங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். தற்பொழுது உங்களுக்கு எப்படி வசதியோ அப்படி எழுதித் தாருங்கள். பிறகு தொலைநோக்கில் அனைத்துப் பயனர்களின் வசதிக்கேற்ப வெவ்வேறு வடிவங்களில் நிரல் எழுதிக்கொள்ளலாம்--ரவி (பேச்சு) 11:14, 28 செப்டெம்பர் 2005 (UTC)

I'm also thinking of Java. By the way, to bypass all problems of admin access etc, there is a very good model. It's called a Javascript bookmarklet. The whole app resides in the browser itself. Rajesh developed one for the Tamil wiki. May be, we can contact him or I can learn from his code and write one for us. Leaving for the day. -- Sundar 15:56, 28 செப்டெம்பர் 2005 (UTC)
Please see here to know about the bookmarklet. Try to install and use. -- Sundar 16:01, 28 செப்டெம்பர் 2005 (UTC)

Thanks Sundar for the message. Greetings to other wikipedians. Unfortunately, I couldn't get the "requirement" in the first glance here. Would be nice, if someone could explain what you want to do actually. When specifying technical terms, please use English. Thanks. --Rrjanbiah 09:35, 29 செப்டெம்பர் 2005 (UTC)

Hi people. I was just reminded of the following.

Can Rajesh help in adding more fileds to this? -- Sundar 10:17, 29 செப்டெம்பர் 2005 (UTC)
Welcome, Rajesh. Thanks a lot for coming forward to help. In the above form, if we enter a word, for example, nation, then the above form does the function of opening a edit page of a new page titled nation. Then we have to manually enter wiktionary explanation for the word in that page.

Now , my requirement is that there should be many text input fields through which i should be able to enter the page title, the languages the word is present in, its corresponding meanings in Tamil. for example, see the page arm. I created that page manually entering meaning of that word in german and english. Now i want a form with needed text input fields which when i submit in one click should be able to create the exact page with all wiki mark ups. I don mind whether the form is inside wiki or desktop application so far as the job is done. But it would be better if running the application doesnt need administrator access in the computer..keeping in mind that many users might work from office. There are no sysops currently here, though i hope to apply for it and get it soon--ரவி (பேச்சு) 11:16, 29 செப்டெம்பர் 2005 (UTC)

sysop உரிமை[தொகு]

அதிகாரி தேர்தலில் ஓட்டெடுப்பிற்கு பின்னும் இது குறித்து என்னால் மெடா விக்கியில் விண்ணப்பிக்க இயலவில்லை. அதிகாரிகள், நிர்வாகிகள் அனுமதி தருவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள சில developerகள் பக்கத்தில் பதிந்துள்ளேன். யாராவது கவனிப்பார்கள் என்று நம்புகிறேன். சுந்தர், வேறு வழிகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்--ரவி (பேச்சு)


preloaded template pages for new article creation[தொகு]

preloaded template pages for new articles are created which i hope will make the job of creating new entries for english words very easy. See the page Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல். This page can be bookmarked and used while u visit wiktionary every time to create new word meanings. I sincerely request and solicit active contributions from all of you to kick start this project. Crossing 3000 entries before 2005 year end should be a possible target i hope. Currently we have around 250 entries here. Meanwhile, I hope rajesh and sundar will come up with the java code which will make our job more easy--ரவி (பேச்சு) 19:59, 12 அக்டோபர் 2005 (UTC)

அக்டோபரில் நிர்ணயித்த குத்துமதிப்பான இலக்கான 3000 சொற்களை அடைய இயலவில்லை :( 28% தான் இலக்கை எட்டிப் பிடித்து தற்பொழுது 1044 சொற்கள் (பின்னிணைப்பு பட்டியல்களையும் சேர்த்து) உள்ளன. எனினும் எதிர்ப்பார்த்த அளவு பயனர் வருகை இல்லாததும், வருகை தரும் பயனர்களும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட நேர்ந்ததால் சொற்களை பெருக்க இயலாமல் போனதும், சொற்களின் எண்ணிக்கையை விட அப்பக்கங்களின் தரம், கட்டமைப்பு ஆகியவற்றிலும் ஈடான கவனம் செலுத்தப்பட்டதும், அப்பயனர்களும் தம் பெரும்பகுதி பங்களிப்பு நேரத்தை தமிழ் விக்கிபீடியாவில் செலவழிக்க நேர்ந்ததும் முக்கியக் காரணங்களாகும். எனினும் விக்சனரியின் முக்கியத்துவம் உணர்ந்து அதன் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க முனைந்த வகையில் 2005 ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டாகும். இவ்வாண்டு சொற்களை உருவாக்குவதற்கான எளிமையான வார்ப்புருக்கள், படிவங்கள் உருவாக்கப்பட்டன. விக்சனரி இடைமுகத்தின் பெரும்பகுதி இற்றைப்படுத்தப்பட்டு தமிழாக்கமும் செய்யப்பட்டது. முதற் பக்கம் மறுவடிவமைக்கப்பட்டது--ரவி 00:25, 2 ஜனவரி 2006 (UTC)

இலக்கண உதவி தேவை[தொகு]

feed சொல்லுக்கான பக்கத்தின் வரலாறைப் பாருங்கள். நான் ஒரு குழப்பத்தில் உள்ளேன். முதலில் செய்வினை, செயப்பாட்டு வினை என்பன ஆங்கிலத்தின் Active voice, Passive Voice என்ற பாகுபாட்டிற்கோ அல்லது Transitive verb, Intransitive verb என்ற பாகுபாட்டிற்கோ இணையானவை அல்ல என்று இதைப் பார்த்து அறிந்தேன். இந்த நிலையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பக்கத்தில் இப்பாகுபாடு தேவையா என்று தெரியவில்லை. அதை விட வெட்கத்திற்குறிய விடயம் தமிழ் இலக்கணப்படி நான் முன்னர் செய்த பாகுபாடு சரியா என்று எனக்குத் தெரியவில்லை. :-(

எவரிடமாவது நல்ல தமிழ் இலக்கணப் புத்தகம் இருப்பின் அல்லது தாமாகவே அறிந்திருந்தால் விளக்கவும். மேலும் "A progressive grammar of the Tamil language" (Author:A. H. Arden) என்ற புத்தகம் இருந்தால் ஆங்கில இலக்கண மரபுச் சொற்களுக்கும் இவற்றிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்தவும். -- Sundar 04:24, 17 நவம்பர் 2005 (UTC)

ஆயிரம் சொற்கள்[தொகு]

சிவகுமாரின் அண்மைய சொற்பதிவுகள்மூலம் நாம் ஆயிரம் சொற்களைத் தாண்டி விட்டோம். -- Sundar 07:31, 22 நவம்பர் 2005 (UTC)

Sundar, TaWiktionary registered maximum growth rate (153%) among all the wiktionaries according to the recent statistics. Its good news and hope we can sustain the momentum. Unlike wikipedias, they are not using the number of articles to rank the wiktionaries. Instead they see the number of internal links(hope just the blue links), page size etc..Therefore, apart from adding tamil meanings for english words we also need to add tamil meanings for tamil words because most of the red internal links are for tamil words only. but at the same time we have to have a far fetched and wholistic view of tamil wiktionary development. at the end it should not look like we were competing with other wiktionaries and just focussed on the numbers instead of quality.For more explanation how they rank, please see the statistics page. Here is the exclusive recent stats page for tamil wiktionary. Also we are not really over 1000 words. There needs to be some clean up done by either deleting or moving the english word pages starting with caps and by moving the word lists and appendices to proper name spaces. Then we can requesthere to update the list of wiktionaries having 1000 words.--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 13:29, 23 நவம்பர் 2005 (UTC)

Ravi, you are right about the need for a comprehensive view about how to organize information about a word. We need a minimum or basic criteria of what kind of information to include about a word. Standard, and reputed dictionaries are certainly good guides, as well as English other Wikitionaries and dictionaries.


In contrast to a print dictionary, here we do NOT have the space limitation. Also, we must have a MULTILIGUAL prospective, as you have indicated many times previously.


What I suggest is that lets put together SAMPLE or MODEL word pages, so that we can understand or develop the criteria. The following dictionary has good approach.

க்கிரியாவின் தற்கால தமிழ் அகராதி: தமிழ் - தமிழ் - ஆங்கிலம். (1992). சென்னை. ISBN: 81-85602-57-3.

--Natkeeran 14:36, 23 நவம்பர் 2005 (UTC)

தமிழ் விக்சனரி ஆயிரம் பதிவுகளை எட்டியுள்ளதில், இதன் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன் என்ற வகையில் நானும் மகிழ்ச்சியடைகின்றேன். அதேவேளை இவ்வாறான மைல் கல்லொன்றை நாம் தாண்டுகின்றவேளை ரவி குறிப்பிட்டுள்ளது போன்ற சில குறைபாடுகளையும் நாம் கவனத்துக்கு எடுத்துக்கொண்டு அவற்றைத் தீர்க்க முயல்வதும் அவசியம் தான்.

முக்கியமாக இதன் நோக்கங்கள் பற்றித் தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். என்னைப் பொறுத்தவரை விக்சனரித் திட்டமானது தமிழில் அதி உயர்ந்த மட்ட அகராதியொன்றை உருவாக்கக்கூடிய வசதிகளையும், வாய்ப்புக்களையும் கொண்டிருக்கிறது. இடவசதிப் பிரச்சினை கிடையாது. குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துவிடவேண்டுமென்ற கட்டுப்பாடு கிடையாது. போதிய மனித வளத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் நிறையவே உண்டு. இது பன்மொழித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் பல மொழி விக்சனரிகளிலிருந்தும் உதவிகளையும் பெற்றுக்கொளும் வசதியும் உண்டு. எனவே அவ்வாறான அதி உயர் மட்டத்துக்குக் குறைந்த எதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆனாலும் மேற்சொன்னவாறான அகராதியொன்றை முழுமையாக்குவதற்குப் பல ஆண்டுகள் செல்லக்கூடும். அதுவரை சில நூறு சொற்களை மட்டுமே கொண்ட உயர்மட்ட அகராதியாக இருப்பதில் அதிகம் பயன் விளையாது. ஆகவே உயர் தரமான நோக்கத்தை அடையும் வழியில் படிப்படியாக முன்னேறுவதற்கு வசதியாகப் பல மட்டங்களிலும் இலக்குகளை அமைத்துக்கொள்வது நல்லது. ஆரம்ப கட்டங்களில் சட்டைப் பைகளுக்குள் வைத்துக் கொள்ளக் கூடிய அகராதிகளின் தரத்திலான ஆனால் பல ஆயிரக்கணக்கான சொற்களுக்கான பொருள்களைத் தரக்கூடிய மட்டத்தில் இலக்கை வைத்துக்கொள்வதில் தவறில்லை. இது அதிகம் பயனர்களைக் கவர உதவும். படிப்படியாக உள்ளடக்கத்தின் கனத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

இதற்கு ஆரம்பத்திலிருந்தே நமது இறுதி நோக்கத்தில் தெளிவாக இருக்க வேண்டும். சொற்கள் தொடர்பில் கொடுக்க விரும்பும் விபரங்கள் அடங்கிய, பக்கங்களுக்கான வார்ப்புருக்களை உருவாக்கிக் கொள்ளலாம். இது பங்களிப்பாளர்கள் அவரவர் நேர வசதிகளுக்கும், துறைசார் பரிச்சயங்களுக்கும் ஒப்ப விபரங்களை சேர்த்துக்கொள்வதற்கு வசதியாக அமையும்.

ஆங்கில விக்சனரியில் விளக்கப்பட்டுள்ளது போல் சொல், அதன் உச்சரிப்பு, பலவகையான பொருள்விளக்கம், சொற்பிறப்பு (வரலாறு), பல்வேறு இலக்கணநிலைப் பயன்பாடுகள், பேச்சுவழக்குப் பயன்பாடு, எடுத்துக்காட்டுகள் என்பன பற்றிய விபரங்களை உள்ளடக்ககூடியதாக வார்ப்புருக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக இவ்வாறான இறுதி இலக்கை அடைய நல்ல மொழியறிவு கொண்ட பலரது பங்களிப்புத் தேவைப்படும். காலப்போக்கில் இது கிட்டும் என்பது எனது நம்பிக்கை.

இன்னும் எழுத இருக்கிறது, ஆனால் இப்பொழுது போதிய நேரம் இல்லை. பின்னர் எழுதுகிறேன். Mayooranathan 15:00, 24 நவம்பர் 2005 (UTC)

I agree with the suggestions given by Mayooranathan and natkeeran and would like to say my preferences over the order in which they should be executed.

Unlike in Tamil wikipedia where we focus much on the quality and length of the content than the total number of articles, I would like Tamil wiktionary to focus (in the immediate future, may be for a year) more on quality in giving meaning for words and the total number of articles. Because there is a critical need for a basic multi lingual free user friendly dictionary in Tamil in the internet. So I would like to see a basic multi lingual free user friendly dictionary in Tamil in the near future and our ultimate goal shall be to create a comprehensive, advanced and content rich dictionary in the future.

I fear that if we focus too much on enriching the content of each page from the begining stage of wiktionary itself, then the progress will be very slow and it wont match the immediate necessity of tamil community. An average visitor's first motive to refer Tamil wiktionary will be just to know the word meaning. We should be resolved to fulfill this minimum requirement for as many advanced (or poetic or complex or technical) words in Tamil and simple, basic words in english and we should work to achieve this goal as soon as possible.

My vision for the english-Tamil dictionary in the next one year shall be as follows: I hope I have written this post in simple english and my immediate goal shall be to make a blue link for each word in this post which would give the simple and most important meanings of those words in Tamil so that an average school educated Tamilian will not be handicapped in understanding a simple english text.

Even after six months in germany, I didnt feel the pressure to learn german much because i could always depend on google translation or other online dictionaries for understanding german through english. Thus, while I could understand german easily, I didnt have the need to learn a new language. If we could come up with a good advanced multi lingual- Tamil dictionary in the future, such translation tools can also be developed for Tamil also using the meanings given in wiktionary to form a database for automatic translation. user:Sarutv has also mentioned about such applications in his user page. Thus any tamilian can survive in any non-tamil environment without the need to learn a new language or english. By understanding everything in english, we have lost the habit of thinking in Tamil. I envision a future for Tamil community wherein just knowing Tamil is enough to understand any language and gain knowledge in any field. The development of tamil Wiktionary and Tamil Wikipedia can be a big tool to realise this vision.

Summarising, I list my vision and priorities as follows. My contribution to wiktionary in the next one year will be guided by this personal preference. As always wiki policies are open and flexible and I dont instruct my priorities as the action plan for wiktionary. But I would be very happy to get as many users to share my vision and appreciate the logic in it and the necessity for it.

Priorities (for next one year):

 • Increase the number of words in English-tamil, Tamil-Tamil dictionaries as much as possible. But one should be clear that this is not done in order to enter in a competition for interwiktionary ranking. A better interwiktionary ranking can only be a side effect while we work towards fulfilling the basic need for Tamil community
 • Appendix word lists for English-Tamil, Tamil- english technical words by each field
 • Transfering all technical glossary info from Tamil virtual University database to here.
 • Focus to be given to basic, simple english words and complex, poetic, technical tamil words

opinions:

 • Its enough to give the most important,simple and frequent meanings alone. This will encourage more users to contribute without hesitation. Adding etymology, pronunciation , word usages, examples, proverbs shall be left to wiktionarians who may have an interest in lingusitics. It is a welcome contribution to any page but not a mandatory contribution
 • Just giving englsih translation in pages with tamil title shall not be encouraged as it should be kept in mind always that wiktionary is multilingual-Tamil dictionary and not a Tamil-English dictionary. Giving tamil explanation or meaning in any page shall be made mandatory or highly advised
 • Giving multi lingual translations shall be done in pages with tamil title only. because pasting the same translation word list in pages of same meaning is waste of time. For example, it is enough just to compile the translation of word கண் in that page itself. The same need not be compiled in page eye or any similar word in any other language. This seems logical and would reduce the work load of contributors in updating the lists.

Priorities after a year:

I hope that by this time (Dec 2006), we can succeed in creating basic, simple english-tamil dictionary and advanced tamil words-tamil dictionary. Then, the focus shall be for creating other languages-Tamil dictionaries and at the same time to expand and improve the quality and quantity of existing english-tamil, tamil-tamil dictionaries

Sorry for posting this in english. Its becoming very hard these days to spend as much time as i would like to spend in wiki projects. Its very heartening to see that all the active contributors from wikipedia have landed here. In my opinion, in the near future, Tamil wiktionary has a more siginificant role to play in Tamil computing, Tamil internet when compared to Tamil wikipedia--ரவி 20:20, 24 நவம்பர் 2005 (UTC)

Following are few of my immediate thoughts, after reaeding the above posts.

 • I am still very much confused about the format, and layout for the Tamil Wikitionary pages. I feel there must be some CONSISTANCY about it. That is why I suggested SAMPLE or MODEL pages. In developing the sample or model pages, the structure and design should anticipate the details that may be added later. Only by anticipating can we maintain a consistency. Thus, at least few pages should be developed to be comprehensive sample pages. I must stress that CONSISTANCY is desired property, eventhough, we can not expect that from all users. In short we should produce a basic sample page that can be used in creating word pages, which can be extended to a comprehensive word pages in the long term. If we are going to develop or use the form based input system, then we should also keep CONSISTANCY in mind there as well.
 • For technical words, we should be able to list them in the right category just by including their category, just like any Wikipedia article.
 • We should not consider ourselves with English-English-Tamil, only English-Tamil, as any user who wants English equivalents can easily go to English Wkitionary . Also, now, I understand why you want to encourage Tamil-Tamil-English.
 • Other people are interested in developing a web based, stand alone dictionary as well based on XML interface and data base. I have encouraged them to join Wikitionary, I am yet to hear form them.

--Natkeeran 01:00, 25 நவம்பர் 2005 (UTC)

விக்சனரியில் கட்டுக்கோப்பான நடையை கொண்டு வரும் பொருட்டு மாதிரிப் பக்கங்கள் உருவாக்க வேண்டியது அவசியம் தான். நற்கீரனின் கருத்தில் உடன்படுகிறேன். இந்தப் பக்கத்தில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள தமிழ் அகரமுதலிகளின் மிக முக்கியமான குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அக்குறைகளை களையும் பொருட்டு தொலைநோக்கோடு விக்சனரியை உருவாக்க விரும்புகிறேன். தமிழர் பிற மொழிகளை முழுமையாகக் கற்கவும் பிற மொழியினர் முறையாகவும் முழுமையாகவும் கற்கவும் விக்சனரி கருவியாகத் திகழ்தல் வேண்டும். விரைவில் நேரம் கிடைக்கும் போது மாதிரிப் பக்கம் ஒன்றை கூட்டு முயற்சியில் உருவாக்குவோம். அண்மையில் மயூரநாதன் உருவாக்கி வரும் வார்ப்புருக்களும் இவற்றுக்கு உதவும் என நம்புகிறேன்.

நான் தேடிப் பார்த்த வரையில் onlineல் கிடைக்கும் தமிழ் அகரமுதலிகளுக்கான இணைப்புகளை சமுதாய வலைவாசலில் சேர்த்து உள்ளேன். தமிழ் கலைக்களஞ்சியங்களுக்கான கூட்டு முயற்சியை விட அகரமுதலிகளுக்கான கூட்டு முயற்சிகள் அதிகமாய் காணக்கிடைக்கின்றன. எனினும் அவை பெரும்பாலும் தொடக்க நிலையிலும் கட்டமைப்பு இல்லாமலும் இருக்கின்றன. --ரவி 14:53, 2 டிசம்பர் 2005 (UTC)


தமிழ் விக்சனரியில் "ஒருசீர்த்தன்மை"யைக் கொண்டுவருவதற்கு அடிப்படையில் நிறைய வேலை செய்யவேண்டியிருக்கிறது என நான் கருதுகிறேன். நற்கீரன் குறிப்பிட்டிருப்பது போல மாதிரிப் பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்தான். நான் முன்னரே குறிப்பிட்டது போல் எங்களுடைய நீண்டகால இலக்குப் பற்றிய தெளிவான விளக்கம் எங்களுக்கு இருக்க வேண்டுமென்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். அவ்வாறான ஒரு இலக்கு இருந்தால் தான் ஏற்கெனவே செய்த வேலைகளின் மீதே புதிய மேம்பாடுகளை ஏற்படுத்தி விக்சனரியின் பயன்பாட்டைத் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லமுடியும். இவ்வாறான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் மாதிரிப் பக்கங்களையும் உருவாக்கவேண்டும்.
அகரமுதலியொன்று தொடர்பான அடிப்படைகளைப் பொறுத்தவரையில் ஆங்கிலத்துக்கும், தமிழுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. தமிழில் பெயர்ச் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேரும் போது ஒவ்வொன்றும் வேறுவேறான தனித்தனிச் சொற்களாகின்றன. எடுத்துக்காட்டாக மாடு என்ற சொல், மாட்டை, மாட்டால், மாட்டுக்கு, மாட்டின், மாட்டினது, மாட்டிடம், மாடே என உருமாறுகிறது. தமிழர் அல்லாத அல்லது தமிழ் அதிகம் அறியாதவர்களைப் பொறுத்தவரை மாடு என்னும் சொல்பற்றி மட்டும் விளக்குவது போதாது. இது போலவே வினைச் சொற்களும் காலம், பால் மற்றும் இடம் காட்டும்போது பல வெவ்வேறான சொற்களாக உருவாகின்றன.ஆங்கிலத்தில் இந்த நிலை கிடையாது. ஆனால் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் தமிழையொத்த சில வேறுபாடுகள் உள்ளது போல் தெரிகிறது. எனவே அத்தகைய மொழிகளின் விக்சனரிகளிலிருந்தும் மாதிரிப் பக்கங்களுக்கு idea க்களைப் பெற்றுக்கொள்ள முடியும். முன் எடுத்துக் காட்டியவற்றைவிட பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் வேறுபாடும் தமிழை ஆங்கிலத்திலிருந்து வேறுபடுத்துகின்றது.
தமிழர்கள் ஆங்கிலம் அறிந்து கொள்ளப் பயன்படுவது மட்டுமன்றி, பிற மொழிகளைப் பேசுபவர்கள் தமிழை அறிந்துகொள்ளவும், தமிழர்கள் பழந்தமிழ் இலக்கியங்களை வாசித்துப் புரிந்து கொள்ளவும், பல்வேறு பிரதேசத் தமிழ் மொழி வழக்குகளைப் பற்றி ஏனைய தமிழர்கள் அறிந்து கொள்ளவும் தமிழ் விக்சனரி பயன்பட வேண்டும். மேற்படி பொதுவான தேவைகளுக்கு மட்டுமன்றி, ஆய்வுத் தேவைகளுக்கும் பயன்படத்தக்கதாகக் காலப்போக்கில் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமென்பதே எனது கருத்தும், விருப்பமுமாகும். மிகப் பழங்காலம் தொடக்கம் பல்வேறு கால கட்டங்களிலும் புழக்கத்திலிருந்த தமிழ்ச் சொற்களைத் தனித்தனியாகத் தொகுத்து வைத்தல் சொற்பிறப்பும் வளர்ச்சியும், பிறமொழிக் கலப்பு, கலைச் சொல்லாக்கம் போன்ற துறைகளில் ஆய்வுத் தேவைகளுக்குப் பயன்படக்கூடும். சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், தேவாரங்கள், ஆரம்பகாலச் செய்திப் பத்திரிகைகள் போன்ற பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த தமிழ் இலக்கிய மற்றும் பிறவகை நூல்களிலுள்ள சொற்களைத் தனித்தனியாகத் தொகுத்தல் மூலம் இவ்வாறான ஒரு நோக்கத்துக்கு உதவ முடியும்.
விக்சனரிப் பக்கங்களில் ஒருசீர்த்தன்மையைப் பேணவும், உள்ளீடு செய்தலை இலகுவாக்கவும், வார்ப்புருக்களையும், form based உள்ளீட்டு முறைமைகளையும் உருவாக்க முயலவேண்டும். நான் இப்பொழுது விக்சனரிப் பக்கங்களில் உள்ளடக்கப் படக் கூடிய விவரங்கள் பற்றியும், அவற்றை வார்ப்புருக்களாக உருவாக்குவது பற்றியும் சில சோதனைகளச் செய்து வருகிறேன். நான் ஒரு கணினித்துறை நிபுணன் இல்லை என்பதால் trial and error முறையில்தான் இது நடைபெறுகிறது. டிசம்பர் 7 தொடக்கம் ஜனவரி முதல் வாரம் வரை UAE இல் இருக்க மாட்டேன். அது வரை எனது சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டியுள்ளது. Mayooranathan 20:14, 2 டிசம்பர் 2005 (UTC)

மயூரநாதன், விக்சனரியின் இறுதி நோக்கம், பயன்பாடு குறித்த உங்கள் அனைத்துக் கருத்துக்களுடனும் உடன்படுகிறேன். மேம்போக்காக பார்த்த போது விக்சனரிக்கான பங்களிப்புத் தேவைகள் குறைவாகத் தோன்றியது. ஆனால், இப்பொழுது பொறுப்பை உணரும்போது செய்யப்பட வேண்டிய பணியின் அளவு மலைப்பூட்டுகிறது. எனினும் இவ்வாறான முதல் முழுமையான தமிழ் அகரமுதலியின் காலம் தாண்டிய பயன்பாட்டையும் தேவையையும் கண்முன்னிறுத்திப் பார்ப்பதே, இப்பணியைச் செய்து முடிப்பதற்கான போதுமான உத்வேகத்தை தரும் என்று நம்புகிறேன்.--ரவி 15:25, 3 டிசம்பர் 2005 (UTC)

விக்கி நூல்கள் , விக்கி மூலம்[தொகு]

 • விக்கி நூல்கள் தளத்தில் நிர்வாக ரீதியாக சரிசெய்யப்பட வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. ஏற்கனவே உள்ள அதிகாரி அணுக்கம் உள்ள பயனரான ஸ்ரீஹரியை வெகு நாட்களாக காணவில்லை. எனவே என்னை சுய நியமனம் செய்துள்ளேன். ஆதரவு தருமாறு வேண்டுகிறேன். வாக்கெடுப்புப் பக்கம் இங்கே.
 • விக்கி மூலம் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டிய பல நூலகள் தவறுதலாக விக்கி நூல்கள் திட்டத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் விக்கி மூலம் தொடங்குவதற்கான உடனடி தேவையை இது வலியுறுத்துகிறது. தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். தவறாமல் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். --ரவி 21:46, 22 ஜூலை 2006 (UTC)

தானியங்கி சொல் ஏற்றும் திட்டம்[தொகு]

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பல கலைச்சொல் பட்டியல்களை இங்கு வெளியிட்டுள்ளது. அவற்றைத் தாமாக பதிவிறக்கி எழுத்துரு மாற்றம் செய்து இங்கு பதிவேற்றும்தானியங்கி ஒன்றை எழுதும் திட்டம் உள்ளது. இதைப் பதிவேற்றுவதற்குத் தேவையான வார்ப்புருக்களை உருவாக்க வேண்டுகிறேன். நம்மிடம் உள்ள தகவல்கள்:

 • த.இ.ப. தரும் துறைவாரி பொருள்
 • ஆங்கில விக்கியிலிருக்கும் சொற்களுக்கு இலக்கணக் குறிப்பு
 • ஐ.பி.ஏ. குறியீட்டில் ஒலிப்பு விளக்கம்

இது மற்றும் இது போன்ற வேறு ஏதாவது தளத்தில் தகவல்கள் இருந்தாலும் சேர்க்க முடியும். கருத்துக்களைத் தெரிவியுங்கள். -- Sundar 09:43, 26 ஜூலை 2006 (UTC)

வார்ப்புரு உருவாக்கப் பரிந்துரைகள் தேவை. மேலும், தன்னொற்றிரட்டல் முதலிய தமிழ் இலக்கண நெறிமுறைகளைப் பயன்படுத்தி தாமாகவே மயூரநாதன் குறிப்பிட்ட வேற்றுமை விகுதிகளைச் சேர்க்கும்படி தானியங்கி எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது! இதற்கு பலகாலம் பிடிக்கும். -- Sundar 14:49, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
சுந்தர் பார்க்கவும் வார்ப்புரு:சுந்தரின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தானியங்கி மற்றும் வார்ப்புரு பேச்சு:சுந்தரின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தானியங்கி--ரவி 16:47, 8 ஆகஸ்ட் 2006 (UTC)


2000 சொற்கள்[தொகு]

தமிழ் விக்சனரியில் உள்ள சொற்கள் எண்ணிக்கை 2000த்தை தாண்டியுள்ளது. இதற்கு உதவிய அனைவருக்கும், குறிப்பாக அசுர வேகத்தில் சொற்களை சேர்த்து என்னையும் உத்வேகப்படுத்திய பயனர்:Omanickam, என் வாழ்த்துக்களும் நன்றிகளும். கடைசி 1000 சொற்களை சேர்க்க எட்டு மாத காலம் ஆகியிருந்தாலும், பெரும்பாலான சொற்கள் கடைசி ஓரிரு மாதங்களில் தான் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைவான பங்களிப்பாளர் எண்ணிக்கையும், அவர்களும் வேலைப்பளு மற்றும் இன்ன பிற காரணங்களால் பங்களிப்பு வேகம் குறைவாக இருப்பதும் தான், இச்சுணக்கத்திற்கு காரணம். தமிழ் விக்கிபீடியா கவனிக்கப்பட்டு வருவது போல் தமிழ் விக்சனரி பல தளங்களில், குறிப்பாக கலைச்சொல்லாக்கம் செய்வோர் இடையில், அறியப்பட்டு வருகிறது. இது தமிழ் விக்சனரிக்கு பல புதிய பயனர்களை இட்டு வரும் என நம்புகிறேன். தமிழ் விக்சனரியின் அடுத்த கட்ட இலக்காக 5000 சொற்களை வைக்கலாம் என்றிருக்கிறேன். இதன் மூலம் அடிப்படையான பல ஆங்கிலச் சொற்களை உள்ளடக்க முடியும். அதன் பின் தமிழ் விக்கிபீடியாவை பல களங்களிலும் அறிமுகப்படுத்தியது போல தமிழ் விக்சனரியையும் பரப்பலாம். தற்பொழுது பன்மொழி விக்சனரிகளில் சொல் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் 35ஆவது இடத்தில் உள்ளது மகிழத்தக்க விடயம்.(தமிழ் விக்கிபீடியா 68ஆவது இடத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.) இந்திய மொழி விக்சனரிகளில் தமிழே முதலிடத்தில் உள்ளது. விவரங்களுக்கு சமுதாய வலைவாசலில் உள்ள புள்ளவிவரப் பட்டியலில் மேல் விக்கி ஒப்பீடுகளைப் பார்க்கவும்.--ரவி 19:25, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

இந்த 2000 சொற்களில் பாதிக்கு மேல் ரவியின் பங்களிப்பாகத்தான் இருக்கும்! ரவி, உங்கள் பங்களிப்புக்கும், உற்சாகத்திற்கும் நன்றி! --Omanickam 20:07, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி மாணிக்கம். சிவாவும் நிறைய சொற்களை சேர்த்து உள்ளார். தற்பொழுது விக்கிபீடியாவில் மூழ்கி விட்டார் :) திரும்ப அழைத்து வரப்பார்க்கிறேன் --ரவி 20:54, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழா குழுவின் விக்சனரி ஆர்வம்[தொகு]

தமிழ் கணினித் துறையில் அரும்பங்காற்றும் தமிழா குழுவினர் தமிழ் விக்சனரியின் குறித்து எழுதியுள்ள வலைப்பதிவு இங்கே. இது போன்ற நுட்பியல் வல்லுனர்களின் பார்வையில் தமிழ் விக்சனரி விழுவது நம் தளத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்--ரவி 18:02, 11 ஆகஸ்ட் 2006 (UTC)


பலுக்கல் வார்ப்புருக்கள்[தொகு]

தற்பொழுது புது சொற்களை உருவாக்குவதற்கான வார்ப்புருக்களுடன், பலுக்கலுக்கான (உச்சரிப்புக்கான) வார்ப்புருக்களையும் சேர்த்திருக்கிறேன். விக்கிமீடியாவில் இவ்வொலிக் கோப்புகள் இருந்தால் தானாகவே இவை நீல இணைப்புகளாகத் தெரியும். இல்லையென்றால், நீங்கள் அவற்றை அப்படியே விட்டு விடலாம். ஆர்வமுடையவர் இவ்வொலிக் கோப்புகளை பதிந்து விக்கிமீடியா பொதுவில் பதிவேற்றலாம். இது குறித்த உதவிக் குறிப்புகளை விரைவில் பதிகிறேன். வேறு விக்கித் திட்டங்களைச் சேர்ந்த எவரும் பின்னாளில் இக்கோப்புகளை பதிந்தாலும், இணைப்புகள் நீலமாகும். எனவே, சிகப்பு இணைப்புகளை நீக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். விக்கிமீடியாவில் பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்க பலுக்கல் கோப்புகளே காணப்படுவதால், அதை வார்ப்புருவில் தந்துள்ளேன். தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை. மற்றபடி, வேறு நாட்டுப் பலுக்கல் கோப்புகள் கிடைத்தாலும், அவற்றை நீங்கள் கட்டுரைப் பக்கத்தில் சேர்க்கலாம். ஏற்கனவே தமிழ் விக்சனரியில் உள்ள பக்கங்களில் ஒலிக்கோப்புகளை சேர்க்க விரும்பினால், {{subst:பலுக்கல்}} என்ற வார்ப்புருவை இடவும். எடுத்துக்காட்டுக்கு இந்த மாற்றத்தை பார்வையிடவும். ஆங்கில விக்சனரியில் ஒலிக்கோப்பு உள்ள பக்கங்களைத் தேட {{audio}} என்ற குறிச்சொல் கொண்டு தேடவும். வார்ப்புரு:பலுக்கல் ஐக்கிய அமெரிக்க ஆங்கிலப் பலுக்கலைக் குறிக்கும். தேவைப்படும் பொழுது பிற நாட்டுப் பலுக்கல்களுக்கும் வார்ப்புருக்களை உருவாக்கலாம். இது போன்று தமிழ் சொற்களுக்கும் ஒலிக்கோப்புகளைப் பதிந்து ஏற்றலாம். என்னுடைய தமிழ் பலுக்கலின் மீது எனக்கே சில சமயங்களில் உறுதி இல்லாததால், இந்த முயற்சியை நான் தொடங்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் யாராவது, தமிழாசிரியர்களின் உதவி கொண்டு இதற்கு கைகொடுக்கலாம். கோப்புகளை பதிவது, வலையேற்றுவது எளிமையான முறை தான். இது குறித்த உதவிக்குறிப்புகளையும் விரைவில் வலையேற்றுகிறேன். இந்த ஒலிக்கோப்பு சிறப்பு அம்சத்தை தமிழ் அகரமுதலி எழுத்துலகில் அறிமுகப்படுத்துவதன் மூலம், தமிழ் விக்சனரிக்கு ஒரு தனித்த இடத்தைப் பெறலாம் என்பது என் நம்பிக்கை.--ரவி 23:05, 17 ஆகஸ்ட் 2006 (UTC)


பன்மைப் பெயர்த் தலைப்புகள்[தொகு]

ஆங்கில விக்சனரியில் en:birds, en:flowers என்ற பன்மைப் பெயர்த் தலைப்புகளுக்கு தனிப்பக்கங்களே வைத்திருக்கிறார்கள். dictionary.com தளத்தில் இப்பக்கங்களை ஒருமைப் பெயர்ப் பக்கங்களுக்கு வழிமாற்றுகிறார்கள். தமிழ் விக்சனரியில் என்ன நடைமுறையைப் பின்பற்றலாம் என்பதை தெரிவியுங்கள். தனிப்பக்கங்கள் வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பக்கங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாய் காட்டத் தான் இது பயன்படும். வழிமாற்றுப் பக்கங்கள் உருவாக்குவதும் வேலையை அதிகரிக்கச்செய்யும். எனினும், leaves என்பது leafன் பன்மை வடிவம் என்பது கூடத் தெரியாத தொடக்க நிலை பயனர்களுக்கு எவ்வாறு நம் தளத்தை பயன் மிகுந்ததாய் மாற்றலாம்?--ரவி 16:15, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

நீங்கள் கூறியது போல் பன்மை பெயர்ச் சொற்களுக்கு தனிப்பக்கங்கள் அமைப்பது சரியல்ல. leaf=>leaves போன்ற பொது விதிக்கு மாறான பன்மைகளுக்கு, leaves என்ற பக்கத்தை leaf என்ற பக்கத்திற்கு வழி மாற்றலாம் (redirect). அதேபோல் ஒரு வினைச் சொல்லுக்கு ஒரே பக்கம்தான். அதன் கால வேறுபாடுகளுக்கு தனிப்பக்கங்கள் அமைப்பது சரியல்ல. எடுத்துக் காட்டு: walk - இதற்குத் தனிப்பக்கம். walked - இதற்கு தனிப்பக்கம் தேவையில்லை. --Omanickam 01:51, 6 செப்டெம்பர் 2006 (UTC)

வழக்கத்துக்கு மாறான வினைச்சொல் வடிவங்களுக்கு மட்டும் வழிமாற்றுப் பக்கம் உருவாக்கலாமா? எடுத்துக்காட்டுக்கு, buy-bought, see-saw போன்றவை? பிறகு நிகழ்கால வடிவ வினைச்சொல் பக்கத்தை முதன்மையாகக் கொண்டு அங்கு பிற கால வடிவங்களை அட்டவணையாகவோ வேறு முறையிலோ தரலாம். ஆங்கில விக்சனரியில் வழிமாற்றுகள் உருவாக்காமல் தனித்தனிப் பக்கங்களே சேர்க்கிறார்கள். இதிலும் எனக்கு உடன்பாடில்லை --ரவி 10:00, 6 செப்டெம்பர் 2006 (UTC)

3000 சொற்கள்[தொகு]

3000 சொற்களை தாண்டிவிட்டோம்! விக்சனரிப் புயல் பயனர்:உமாசுதன் அடித்த சூறாவளியில் கடைசி 1000 சொற்கள் ஒரே மாதத்தில் சேர்க்கப்பட்டன. உமாசுதன் - பாராட்டுக்கள்! உங்கள் பங்களிப்பு தொடரட்டும்! இதே வேகத்தில் போனால் ரவி வைத்த 5000 சொற்கள் இலக்கை இந்த வருடக் கடைசிக்குள் அடைந்து விடலாம். --Omanickam 02:11, 6 செப்டெம்பர் 2006 (UTC)

மாணிக்கம், சொற்கள் சேரும் வேகத்துக்கு, இனி ஆயிரம் ஆயிரமாக எண்ணாமல், இரு மடங்காக (1000, 2000, 4000, 8000..) எண்ணலாம் என்றிருந்தேன்..பரவாயில்லை.. சந்தோஷம் தான்..உமாசுதன் அடித்த சூறாவளியில் பழைய பங்களிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள் ;) நிச்சயம், இந்த ஆண்டு இறுதிக்குள் 5000 சொல் இலக்கை அடையலாம். மார்ச் 2007ல் 10000 சொற்கள் என்று பேராசைத்தனமான இலக்கை வைத்துள்ளேன் :) பார்க்கலாம். இணையத்திலும் அச்சிலும் உள்ள பல தமிழ் அகரமுதலிகள் ஓரிரு வார்த்தைகளில் பொருள் தருவதுடன் நிறுத்திக்கொள்வது போல் இல்லாமல், நாம் அனைவரும் ஒவ்வொரு பக்கத்தையும் இயன்ற அளவு விரிவாக எடுத்துக்காட்டு வாசகங்களுடன் தர முயன்றால், தமிழ் விக்சனரி தனித்துவமும் சிறப்பும் கூடுதல் பயன்பாடும் மிக்கதாய் இருக்கும். எண்ணிக்கை, தரம் ஆகிய இரண்டிலும் தமிழ் விக்கிபீடியா சம கவனம் செலுத்துகிறது. அதே வழிகாட்டலை நாம் இங்கும் பின்பற்றலாம்--ரவி 09:38, 6 செப்டெம்பர் 2006 (UTC)

விக்சனரி கூகுள் குழுமம்[தொகு]

தமிழ் கலைச்சொல்லாக்கத்துக்கும் தமிழ் விக்சனரி தள செயல்பாடு, பங்களிப்புக்கும் ஏதுவாக தமிழ் விக்சனரி கூகுள் மடலாடற்குழு தொடங்கப்பட்டுள்ளது. முகவரி - http://groups-beta.google.com/group/tamil_wiktionary இம்மடலாடற்குழுவில் நீங்கள் இணைவது மூலம் தமிழ் கலைச்சொல்லாக்க உரையாடல்களில் ஈடுபடலாம். இக்குழுவில் எழும் கருத்தொத்த பரிந்துரைகள் தமிழ் விக்சனரியில் ஆர்வமுடைய பயனர்களால் அங்கு சேர்க்கப்படும். தற்போது, கணினி மற்றும் தொடர்பாடல் நுட்பச்சொற்கள் மட்டும் உரையாடப்பட்டு வந்தாலும் இக்குழுவின் பயனர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வருங்காலத்தில் பல துறை உரையாடல்களும் நிகழ்வது உறுதி.--ரவி 03:51, 17 அக்டோபர் 2006 (UTC)