விக்சனரி:ஆலமரத்தடி/2010-2

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சொற்கட்டமைப்பு[தொகு]

அனைத்துச் சொற்களுக்கானவை[தொகு]

 1. மொழியைக் குறிப்பிடும் தலைப்பு(மிக நீண்ட கலந்துரையாடல்களும், கருத்துக்கணிப்பும் அடங்கியப் பகுதி)

ஆங்கில சொற்களுக்கானவை[தொகு]

விவாதிக்கப்படும் ஆங்கிலச் சொற்கள்[தொகு]

 1. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளுக்கான ஆய்வுச் சொல் -dove ( அதன் உரையாடல்)
 2. thou / பேச்சு:thou முதல் வரி (மொழிப்பட்டை) குறித்தவை.
 3. பேச்சு:spelling bee
 4. bookmarklet

bookmarklet = புத்தக குறிப்பு நிரல்; நூற்குறிப்பு நிரல்.

இது சரியானதா ? --Inbamkumar86 03:48, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

applet என்றால் சிறுநிரல் என்றே பொருள் தரும். எனினும் இங்கே நூற்குறிப்பு நிரல் நல்லாகவே உள்ளது.

--Natkeeran 02:43, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

செல்வா பரிந்துரைத்த சொற்கள் குறிநிரல், குறிசி. நினைவி,பதிநிரல் ஆகியவை. அவரது உரையாடல் பக்கத்தை காண்க. நான் குறிநிரல் என்பதை சேர்க்கலாம் என்று உள்ளேன்.--Inbamkumar86 12:32, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

குறிநிரல் சரியாக இருக்கும். நற்கீரன் ஏன் நூற்குறிப்பு ? நூலுக்கும் இதற்கும் தொடர்பில்லை. ஆனால் நம் கற்பனை வளத்தால் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். படிக்கும் நூலில், கடைசியாக படித்த பக்கத்தை அடையாளப்படுத்த முற்காலத்தில் ஒரு பஞ்சுநூல், மெல்லிய கயிறு போல் தட்டையாக இருக்கும் ஒன்றை வைப்பார்கள். அது நூலுக்கு (பொத்தகத்துக்கு) வெளியே நீட்டிக்கொண்டிருக்கும், அந்த நூல் (பஞ்சுநூல்) குறிப்பு நிரல் எனலாம் :) ஆனால் இதெல்லாம் தேவை இல்லை. குறிநிரல் போன்று நூல் என்னும் சொல்வராமல் இருப்பதே பொருத்தமானதாக இருக்கும். நூற்குறிப்பு என்பது நேரடியான மொழிபெயர்ப்பு (இங்கு பொருள்ள் தராதது). --செல்வா 13:04, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

தமிழ் சொற்களுக்கானவை[தொகு]

 • முன்பிருந்த சொற்கட்டமைப்பானது மேம்படுத்தப்பட்டுள்ளன. அதற்குரிய கருத்துக்களை, தேர்ந்தெடுக்கப் பட்ட கீழ்கண்ட சொல்லின் உரையாடற் பகுதியில் தெரிவிக்குமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். த*உழவன் 19:28, 21 பெப்ரவரி 2010 (UTC)
 • தமிழுக்கானச் சொற்களை, பின் வருமாறு வகைப்படுத்தலாம்;-
 1. ஒரே பொருள்,பல சொல் (ஒருபொருட்பன்மொழி) - யானை (அதன் உரையாடல்)
 2. ஒரு சொல் பல பொருள் (பல்பொருள் ஒரு மொழி)- அரி, பசை - ( அதன் உரையாடல்)
 3. ஒருசொல் சில பொருள்(பகுப்பு:தொகைச் சொற்கள்) - (ஐம்பெருங் காப்பியங்கள்)(அதன் உரையாடல்)
 4. ஓரிருச் சொல்(பகுப்பு:இணைச் சொற்கள்) - (அக்கம்பக்கம்)(அதன் உரையாடல்)
 5. (பகுப்பு:புறமொழிச் சொற்கள்)- (சன்னல்)(அதன் உரையாடல்)

ஒரு சொல், பல வடிவம்: குழப்பங்கள்[தொகு]

ஒரே சொல் வினையாகவும் பெயராகவும் இருந்தால் அவற்றிற்குத் தனித்தனி பதிகை வேண்டும் என்று விக்சனரி நெறியில் பார்த்ததாக நினைவு. அதுவே பொருத்தம் என்பது என் கருத்து. ஆயினும் தற்போது விக்சனரியில் பல சொற்கள் வினையும் பெயரும் உரியும் ஒரே பதிகையில் உள்ளன. ஒருசில எடுத்துக்காட்டுகள் தேடிப்பார்த்தேன். இதோ:படி; கரை; கல்; ஓடு; நாடு; ஆறு; கூறு

வேறு பதிவுகள் இந்த வினை-பெயர் வேறுபாடு சுட்டவில்லை. ஒருவகை மட்டுமே உள்ள சொற்கள் சில: படை;உடை; முளை; களை.

ஆக, ஒரு பெரிய குழப்படி உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறேன். இதை எப்படி சரிசெய்வது? இது பற்றி விக்கி நெறி உள்ளதா? நீங்களும் த*உழவனும் வேறு சிலரும் பல சொற்களை இடுகை செய்வதால் உங்களிடம் இந்த ஐயப்பாட்டை எழுப்புகிறேன்.

 1. பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் இடுகைகள் தனித்தனியாக இருந்தால் நன்றாயிருக்காதா?
 2. அப்படியே, ஒரே இடுகையில் எல்லா வகைகளையும் ஏற்றினால், அவற்றை எப்படிப் பிரிப்பது? அதற்கான வார்ப்புரு உள்ளதா?
 3. "ஏசு" போன்ற சொற்கள் மிகவும் வேறுபட்ட அடிகளிலிருந்து பிறக்கும் சொற்களாக இருப்பதால் (எ.டு.: ஒலி, ஒளி, ஒழி) அவற்றை ஒரே இடுகையில் தராமல், வெவ்வேறு பதிவுகளாகத் தருவதன்றோ நன்றாயிருக்கும்?

உங்கள் (மற்றும் பிறரின்) கருத்து அறிய அவா.--பவுல்-Paul 15:50, 11 ஆகஸ்ட் 2010 (UTC) --பவுல்-Paul 16:02, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

 • பவுல், நன்றி. வெவ்வேறு பக்கங்களாக வருவதே சிறப்பு என்பது என் கருத்தும். எனினும், எப்படிப் பக்கங்களைப் பிரித்துக்காட்டுவது என்பதன் குழப்பம் காரணமாக இவ்வாறு இட்டுவருகிறோம். பக்கவடிவ மாற்றத்தின்போது கவனிக்க வேண்டிய ஒன்று. பழ.கந்தசாமி 16:16, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
 • தமிழ் விக்சனரி, குழந்தையாகவே இதுவரை இருந்தது. இனி பவுல், கந்தசாமி, செல்வா, செந்தி போன்றவர்களால் நடக்கத்துவங்கி விட்டது கண்டு என்னுள் பேரானந்தம். பவுல் பல நுணுக்கமான தொலைநோக்குள்ள இலக்குகளை அடையாளமிட்டுள்ளார். அவருக்கு என் நன்றிகளும், வணக்கங்களும்.

ஒரு சொல் பெயர்,வினை,உரி என்று தனித்தனியாக இருந்தால் நல்லது தான். இருப்பினும் ஒன்றாக இருந்தால் அவற்றின் வேறுபாடுகளை உடன் கண்டறிய முடியும். ஒப்பிட்டு கற்கும் முறையே அனைத்திலும் உயர்ந்ததாக நான் கருதுகிறேன். தனித்தனியாக இருந்தால் ஒன்றைப் படித்துவிட்டு அடுத்ததை படிக்காமல் சென்று விட வாய்ப்புண்டு. அது ஒரே இடத்தில் இருக்க, அமைப்பியலில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதில் நம் கவனத்தை குவிக்க வேண்டும் என்பதே என் அவா--த*உழவன் 16:49, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

அச்சு அகராதிகளிலும் ஒரு தலைச்சொல்லின் கீழேயே பல்வேறு இலக்கண வகைப்பாட்டில் அடங்கும் பொருள்களைக் குறிக்கின்றனர். நாம் முதல் வரியில் வேண்டுமானால், இச்சொல் பெயராகவும் வினையாகவும் வழங்கும், கீழே பார்க்கவும் என்று ஒரு சொற்றொடரை சாய்வெழுத்துகளில் எழுதிக்கட்டலாம். பக்க வடிவமைப்பின் வழி பல இலக்கண வடிவங்களுக்கும் பொருள் தரலாம். என்ன ஒன்று, மொழிபெயர்ப்புகள் நீளமாக அமைந்தாலோ, பெயர்ச்சொல் வடிவிலேயே மிகப்பல பொருள்கள் கொண்டிருந்தாலோ, அடுத்து வரும் இலக்கண வடிவங்கள் மிகவும் தள்ளி கீழே வரும். இன்னொரு மாற்றுமுறையையும் கைக்கொள்ளலாம். அடை என்று ஒருசொல் இருந்தால் அச்சொல்லுக்கான பக்கத்தில் பல்வேறு இலக்கண வடிவங்களுக்கான உள்ளிணைப்புகள் மட்டும் இருக்கலாம் (எ.கா அடை (வினை); அடை (பெயர்)). உள்ளிணைப்பு-வழி இழுத்துச் செல்லும் பக்கத்தில் பொருள்கள் தரலாம், அதே நேரத்தில் இழுத்துச் சென்று சேர்ந்த பக்கத்தின் மேலேயே வேறு இலக்கண வடிவங்களுக்குமான தனிப் பக்கங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி இணைப்புகளும் தரலாம். --செல்வா 18:14, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

பிற மொழிகளுக்கானவை[தொகு]

ஒரு சொல்லாக்கத்திற்குரிய பிரிவுகள்[தொகு]

பொருள் விளக்கம்[தொகு]

பேச்சு:வரை என்னும் பக்கத்தில் நான் கூறிய கருத்தை இங்கும் பதிவு செய்கின்றேன். அங்கே நான் கொடுத்துள்ள விளக்கம் நான் புரிந்து கொண்டதின் அடிப்படையில் எழுதியுள்ளேன். இவை எல்லாம் original research - புதிய கண்டுபிடிப்பாக, புத்தாய்வாய்வாகக் கருதுவார்களா எனத் தெரியாது. கூடாது எனில் நீக்கிவிடலாம். தமிழில் ஒரு சொல்லுக்கான எல்லாப் பொருளும் ஆழமான உட்தொடர்புகள் கொண்டவை. பல்வேறு நிலைகளில் உட்பொருள் நுண்ணிதின் உணர்த்துபவை. இவற்றை எல்லாம் பகிர்ந்துகொள்ளாமல் போவதால் இழப்புதானே ஏற்படும் என நினைக்கத் தோன்றுகின்றது. எனினும், இவை தக்கார் (மொழியியல் வல்லுநர்கள்) ஏற்பு தர வேண்டும், அதன்பின்தான் இங்கு பதிவு செய்யலாம் என்னும் முறை இருப்பது நல்லதே, ஆனால் தமிழ்ச்சூழலில் இப்படியான களங்கள் இல்லாமல் இருப்பது பெருங்குறையாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான கருத்துகள் பதிவு பெறாமலே போகின்றன. அறிவாளிகளின் மன்றம், சங்கம் என்று நிறுவி கருத்துகளை முன் வைத்து (முன்மொழிந்து) கருத்தாடி ஏற்பு, திருத்தத்துடன் ஏற்பு, மறுப்பு என்னும் நிறுவு வழிமுறைகள் தமிழ்ச்சூழலில் உருவாக வேண்டும். --செல்வா 20:20, 6 மே 2010 (UTC)

 • செல்வா, பொருத்தமான விளக்கம், சம்பந்தப்பட்ட பொருளுடைய சொற்கள் எனத் தோன்றினால், நீங்கள் செய்ததுபோல இங்கே பதிவு செய்துவிடலாம். சொல்லுக்குச் சம்பந்தமான விளக்கங்கள் இருந்தால், வல்லுனர்கள் விக்சனரிக்கு ஈர்க்கப்பட வாய்ப்புண்டு; அவர்கள் அதைப் பேச்சுப்பக்கத்தில் விவாதிக்க வாய்ப்புண்டு. ஏற்கவாய்ப்புண்டு. பழ.கந்தசாமி 21:26, 6 மே 2010 (UTC)
 • பழ.கந்தசாமி, உங்கள் கருத்துக்கு நன்றி.--செல்வா 22:35, 6 மே 2010 (UTC)

சொற்பொருள் துல்லியம்[தொகு]

பல சொற்களுக்கு மிகவும் தவறுதலான பொருள்கள் தரப்பட்டுள்ளன. அகரமுதலி போன்றவற்றில் மிகவும் அக்கறையுடன் பொருள்கள் தருதல் வேண்டும். இதுபோலவே படங்களும் பல இடங்களில் தவறாகவோ, தவறான சாய்வு கொண்டதாகவோ, சரியான தேர்வு இல்லாமலோ இடப்படுகின்றன. திட்டத்தின் நலன் கருதி, இவற்றை பயனர்கள் யாவரும் கூர்ந்து நோக்கி பிழைகளைக் களையவும், பக்கங்களை மேம்படுத்தவும் வேண்டுகிறேன். அண்மையில் பால் என்னும் பக்கத்தில் அது வினை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நோக்கினேன். இது தவறு என்பது என் கருத்து. வினையாகப் பயன்படுத்துவதற்குத் தக்க சான்றுகோள்கள் தருதல்வேண்டும். செந்தி அவர்களும் இப்படி சில கண்டுபிடித்துள்ளார். எனவே அக்கறையுடன் சீர் செய்ய வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 18:57, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

பிறமொழிப் பெயர்ப்புகள்[தொகு]

எல்லா மொழிச்சொற்களுக்கும் தமிழ்வழி பொருள் சொல்வதே முதன்மையான பணி. தமிழ்ச்சொற்களுக்குப் பிறமொழிகளில் உள்ள ஈடான சொற்களைத் தரலாம், ஆனால் அவை ஆங்கிலத்தில் மட்டும் தருதல் சரியான முறை அல்ல. ஒரு தமிழ்ச்சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தால், ஒவ்வொரு பொருளுக்கும் ஈடான பிறமொழிச்சொற்களைத் தனியாக கீழே மொழிபெயர்ப்புகள் என்னும் பகுதியில் தருவது பொருந்தும் அட்டவணை இட்டு ஒரு மொழிக்கு மட்டும் மொழிபெயர்ப்பு தருவது சரியல்ல. ஆங்கிலத்தில் மட்டும் ஏன் பொருள் சொல்ல வேண்டும்? ஏன் சீனத்தில், இந்தியில், மலையாளத்தில் சொல்லக்கூடாது? ஆங்கிலத்தில் பொருள்வாரியாக பல மொழிகளில் பெயர்ப்புகள் தருகின்றார்கள். ஆனால் இவை எல்லாம் தனியான தலைப்பின் கீழ் வருவன. முதலில் பொருள் தமிழில் தருதல் வேண்டும் (எம்மொழிச் சொல்லாயினும்). அங்கே பிறமொழிகள் பெயர்ப்புகள் வருதல் சரியல்ல. --செல்வா 05:32, 9 மே 2010 (UTC)

மொழிபெயர்ப்புகள் கடைசியாக இருக்க வேண்டியவை[தொகு]

மொழி பெயர்ப்புகள் கடைசியாக இருக்க வேண்டியவை. தமிழில் பொருள், விளக்கம், இலக்கியக் குறிப்புகள், எடுத்துக்காட்டு சொற்றடர்கள், சொற்பிறப்பியல் ஆகிய யாவும் தந்தபின் பிற மொழியில் உள்ள ஈடான மொழிபெயர்ப்பு சொற்கள் தருதல் முறை. பிற மொழி விக்கிகளையும் பாருங்கள். எடுத்துக்காட்டுக்கு ஆங்கில விக்கியைப் பாருங்கள். இடாய்ச்சு மொழி விக்கியைப் பாருங்கள். இடாய்ச்சு மொழி விக்கியில், எல்லா விளக்கங்களும் தந்தபின்தான் Übersetzungen என்னும் மொழிபெயர்ப்புகளைத் தருகின்றார்கள் (பார்க்க: Geld (பணம்). மொழிபெயர்ப்புகளைக் கடைசியாக இட வேண்டுகிறேன்.--செல்வா 16:17, 18 மே 2010 (UTC)
 • அகரமுதலி என்பது மொழிபெயர்ப்புக்கு தானே? அதற்கு பின்னிடம் தருவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே அதற்கு முன்னிடம் தந்தேன். மற்ற மொழிகளை தமிழ் பின்பற்ற வேண்டுமா?த*உழவன் 16:32, 18 மே 2010 (UTC)
இல்லை. அகரமுதலி என்பது ஒரு மொழியில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கமான பொருள்களை அம்மொழியில் அகரவரிசைப்படி தரும் ஒரு நூல். மொழிபெயர்ப்புகள் தரவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. விக்சனரிகள் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவில் பன்மொழியில் ஈடுசொற்களைத் தரும் ஓர் அரும் அகரமுதலி (இருமொழி, மும்மொழி அகரமுதலிகளும் உண்டு). உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் முறை என்றும், குறிக்கோள்கள் என்றும் சில உண்டல்லவா? பிறமொழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை, அதில் ஓர் ஒழுக்கம் உள்ளது, பிறபல மொழிகளிலும் பின் பற்றுகிறார்கள் என்று காட்டவே கூறினேன். --செல்வா 16:41, 18 மே 2010 (UTC)

பலுக்கல் எதிர் உச்சரிப்பு[தொகு]

உச்சரிப்பு என்பதே வழக்கத்தில் இருக்கும் நல்ல தமிழ் சொல். அதைப் வார்ப்புருக்களில் பயன்படுத்திலா நன்றாக இருக்குமே. --Natkeeran 01:37, 20 ஜூலை 2010 (UTC)

 • இத்தளத்திற்கு வந்தது முதல் நானும் அங்ஙனமே எண்ணுகிறேன். விரைவில் பக்கவடிவக் கலந்தாய்வு நடைபெறும். தெரிவிக்கிறேன்--த*உழவன் 01:48, 20 ஜூலை 2010 (UTC)
 • பலுக்கல் என்ற வார்த்தையை நான் முதலில் பார்த்தது தமிழ் விக்சனரியில்தான். அது என்ன என்று புரிந்துகொள்ளக் கொஞ்ச காலம் ஆனது. உச்சரிப்பு என்பது பொதுவழக்கில் அல்லதால் அதைப் பயன்ப்டுத்துதலே சிறந்தது என்பது எனது கருத்தும். பழ.கந்தசாமி 06:19, 20 ஜூலை 2010 (UTC)
உச்சரிப்பு என்ற சொல்லே அதிக பயன்பாட்டில் இருக்கிறது. கூகிளைப் பாக்கவும். இது பற்றிய உரையாடல் முன்னரும் நடைபெற்றதாக ஞாபகம். --Natkeeran 22:21, 20 ஜூலை 2010 (UTC)
 • பலுக்கல், உச்சரிப்பு, ஒலிப்பு, மொழியோசை என்பது கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவதால், dictionary-இல் உள்ளபடி பயன்படுத்தலாமென்று எண்ணுகிறேன்.--த*உழவன் 05:33, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
 • தமிழ்விக்சனரியில் பலுக்கல் என்ற சொல் அதிக சொற்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதற்கு மாற்றாக ஒலிப்பு என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்று இங்கு பலர் வாக்களித்துள்ளனர். அதன்படி அனைத்துச் சொற்களையும் மாற்றிவிடலாமா?--த*உழவன் 01:56, 8 டிசம்பர் 2010 (UTC)
ஒலிப்பு என மாற்றாலாம். [பலுக்கல் என்றால் சொல்லைத் திருத்தமாக ஒலிப்பது. இதனை தேவநேயப்பாவாணர் பரிந்துரைத்தார். மொழியியல் துறையிலும் பிறபல துறைகளிலும் அவ்வவ் துறையறிஞர்கள் பரிந்துரைத்த சொல்லை ஏற்றுப் பயன்படுத்தும் முறைமை தமிழில் என்று வருமோ?! ஆங்கிலத்தில் etymology என்னும் சொல் நமக்கும், படித்த சிலருக்கும் தெரிந்திருந்தாலும், ஆங்கிலேயர்களில் பொதுமக்களுக்கு அவ்வளவாகத் தெரியாத சொல். ஆனால் முதன்முறையாக படிக்க நேர்ந்தால் கற்றுக்கொள்வார்கள், அப்படியே இல்லாவிடினும், தக்கச் சொல்லான அச்சொல்லை ஆங்கிலேயர்கள் ஒருபோதும் விடமாட்டார்கள்.]--செல்வா 03:33, 8 டிசம்பர் 2010 (UTC)
 • அகரமுதலி என்பது ஆரம்ப நிலை நூல் என்பதால் எளிமையாக இருந்தால்நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். ஏற்கனவே, தமிழோடு ஆங்கில கலப்பு அதிகமாகி விட்டது.பலுக்கல்-உயர்வான சொல் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. எனினும், எளிமையானச் சொல் தான் நிலைக்கும்.ஆகவே, இது குறித்து உரையாடினோம்.--த*உழவன் 02:29, 10 டிசம்பர் 2010 (UTC)
 • முதலாவது அகரமுதலி என்பது "ஆரம்ப நிலை நூல்" அல்ல. குழந்தைகளுக்கும் ஏற்ற எளிய அகரமுதலிகளும் உண்டு, கற்றவர்கள் மேலும் கற்க உதவும் அல்லது மொழியில் உள்ள சொற்களை விரிவாக பட்டியலிட்டு விளக்கும் உயர்நிலை அகரமுதலிகளும் உண்டு. நானும் எளிமையைத்தான் வரவேற்கின்றேன். ஆனால் குண்டுசட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிராமல் சற்று விரிவுபடுத்திக்கொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டும். அண்மையில் சில பல்கலைக்கழக மாணவர்களிடம் etymology என்றால் என்ன என்று கேட்டதற்கு அவர்களிடம் இருந்து தெளிவான உறுதியான பொருள் வரவில்லை. ஆனால் விக்கியில் etymology என்றுதான் எழுதுகிறார்கள். word origin அல்லது அதுபோன்ற சொற்களால் எழுத முற்படுவதில்லை. இங்கே ஒலிப்பு என்பது வேண்டாம் என்று சொல்லவில்லை. அடிமட்ட சொற்களை மட்டுமே வைத்துக்கொண்டு, விரிவுபடுத்தக்கூடாது, பாமரத்தனம் மட்டுமே இருக்க வேண்டும் (பாமரர்களுக்குப் புரியாது) என்று கூறிக்கொண்டிருப்பதால் நன்மைகள் பல இல்லை. தெரியாத சொல்லைப் பல வழிகளிலும் விளங்குமாறு எழுதியும், படம் இட்டுக்காட்டியும், சொற்றொகுதியைப் பெருக்க வேண்டும். ellipse என்றால் ஆங்கிலேயப் பாமரனுக்கு ஒன்றும் விளங்காதுதான். ஆனால் படத்தைப் பார்த்தோ, விளக்கத்தைப் பார்த்தோ புரிந்துகொள்வர். கூடியமட்டிலும் ஏதேனும் ஒருவகையில் அறிந்த ஒரு சொல்லை அல்லது சொற்பகுதியை உறவுபடுத்தி சொற்கள் இருப்பது நல்லது என்பதே என் கொள்கையும். ஆனால் அறிவார்ந்த முறையில் விரிவுநோக்கியும் நகர வேண்டும். அப்பொழுதுதான் அதிகமான கருத்துப்புலத்தை ஆளமுடியும். இவற்றை எல்லாம் நீங்களோ மற்றவர்களோ ஏற்கவேண்டும் என்பதில்லை. யாருக்கேனும் பயன்படும் என்று நினைத்தே பதிவு செய்கிறேன். இது பற்றி மேற்கொண்டு தொடரும் ஆவலும் இல்லை. --செல்வா 03:08, 10 டிசம்பர் 2010 (UTC)

எந்த மொழிக்கு என்ன மொழிப் பட்டி(கொடி பற்றி..)[தொகு]

 • ஒரு மொழிக்கு இவைதான் நாடுகள் என்று நாம் எப்படித் தீர்மானிக்கலாம்?
 • அலுவல் மொழி என்று பார்த்தால், நாடு இல்லாத மொழிகளுக்கு எந்தக் கொடி வைப்பது?
 • மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், ஆங்கில மொழியை அதிகம் பேசுபவர்கள் ஐ.அ அடுத்தப்படியாக இந்தியாவிலும், பாகிசுத்தானிலும் இருக்கிறார்கள்.
 • ஒரு தமிழ்ச் சொல்லுக்கு விளக்கத்தை எந்த மொழியில் முதல் தருவது? அதாவது மொழி வரிசை என்ன?

--Natkeeran 22:20, 20 ஜூலை 2010 (UTC)

இது குறித்து முன்பு உரையாடல் / கருத்துக் கணிப்பு நடந்தது என்று நினைக்கிறேன். யாராவது அதற்கான இணைப்பைத் தந்தால் மேல் விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி--ரவி 12:14, 22 ஜூலை 2010 (UTC)
இரவி, இப்பக்கத்தில் கருத்துப்பகிர்வுகள் உள்ளன. ஆலமரத்தடியில் கருத்துகள் பதிவாகும் பொழுதும், சீராக ஒன்றன் பின் ஒன்றாக வராமல், பல இடங்களில் கருத்துகள் வெவ்வேறு காலங்களில் சொருகப்பட்டு மிகவும் குழப்பம் தருவதாக உள்ளது. பரணில் இடும் பொழுதும், பல இடம் மாற்றியும் பதிவாவது ஆவணப்படுத்துவதிலும் குழப்பம் த்ருகின்றது. முன் பதிவாகிய தலைப்பு என்றால் அதற்கு சுட்டு தந்துவிட்டு சீரான காலத்தொடர்ச்சியாக பதிவாவதே நல்லது. ஏற்கனவே இட்ட கருத்துரைகளை மீஇண்டும் தரவேண்டும் என்பது நேர விரயத்தோடு அலுப்பு தட்டுவதாகவும் உள்ளது. எனினும் தருகிறேன், என் செய்வது!! --செல்வா 13:55, 22 ஜூலை 2010 (UTC)
மொழிப் பட்டையில் ஒரு ஐரோப்பிய மைய, அல்லது சார்பு உள்ளது. ஆங்கில மொழிக்கு ஏன் தனியே ஆங்கிலோ-சக்சன் நாட்டு கொடுகள் மட்டும் தர வேண்டும் என்பற்கான விளக்கம் இல்லை. இந்தியாவிலும் ஆங்கிலம் அலுவல் மொழி, தொகையான மக்கள் பேசும் மொழி. --Natkeeran 02:28, 28 ஜூலை 2010 (UTC)
 • //வெறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொடிகளுக்கு ஏன் முழு வரியையும் அடைக்கவேண்டும

சாதாரணப் பயனராக நான் விக்சனரிக்கு அதிகமகா வருவது பொருள் தேடித்தான். அதனால் அது பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா அல்லது எந்தெந்த நாடுகளில் உபயோகிக்கப்படுகிறது போன்றவை அடுத்த கட்டத்திற்கு தான் வருகிறது. அதனால் கொடியை சொல்லின் முதல்வரியில் கொடுப்பதை தவிர்க்கலாம்.//காண்க:[கொடி பற்றி மாகிரின் கருத்துக்களைக் (த.இ.ப பக்கத்தில்7 த. இ ப சொற்கள் பதிவேற்றத் திட்டத்தில் கொடி தொடர்பான எனது பரிந்துரை - மாகிர் என்பதிலுள்ள உரையாடல்கள்)]

 • தமிழக அரசாலும், தமிழகத்தினைச் சார்ந்தவர்களாலும் விக்சனரியின் வளமைக் கூடியுள்ளது. தமிழகத்தில் இணைய வசதி சரிவர கிடைப்பதில்லை. அதனால், படங்களை ஒவ்வொரு சொல்லிலும் குறைவாக கையாள வேண்டும் என்று கருத்து மிகவும் ஏற்புடையது ஆகும்.
  ஆலமரத்தடி/2010-2:
  இணைய வேகத்தால் தோன்றும் தடை

முடிந்தவரை அனைத்துச் சொற்களிலும்,சில நாடுகளை மட்டும் குறிக்கும் கொடிப் படங்களை இடுதலை கைவிடுதல் நன்று. வேறுபாட்டினை உணர்த்த வேண்டிய இடங்களில் மட்டும், சொற்களுக்கு பதில் கொடிகளை இடலாம். அமெரிக்க உச்சரிப்பு, ஐக்கிய இராச்சிய உச்சரிப்பு என்பதனை வேறுபடுத்த குறிக்கலாம்.(எ. கா.) dictionary. வெவ்வேறு மொழிச்சொற்கள் இருக்கும், இலத்தீனிய எழுத்துக்களை வேறுபடுத்த ஒரே ஒரு கொடி இடலாம். (எ. கா.) dove .

ஆங்கிலம் உலகஅளவில் பெரும்பாலும் பயன்படும் மொழி. நம் தளத்தில் கூட, வேறு மொழிகள் இதுவரை இல்லை. வேறுமொழிகளில் எழுதப்படுபவை, தமிழ் சொற்களுடன் இணைக்கப்படுதலே இல்லை. அங்ஙனம் இணைக்காமல், கொடி இடுதல் சிறப்பன்று.
பல இணைய தளங்களிலும், அகரமுதலிகளிலும் கொடியை அழுத்தினால் அது அவற்றிற்குரிய மொழிபெயர்ப்பைக் காட்டும். அங்கு கொடி, அத்தளத்தின் வளமையைக் காட்டுகிறது. இங்கு அந்நோக்கமும் இல்லை. அத்தகைய வளமையும் இல்லை என்பதே உண்மை.
வளமையை அதிகரித்த பின்பு, அழகு கூட்டுதல் நன்று. அனைத்துச் சொற்களிலும் கொடிகள் தெரிய வேண்டிய தேவை ஏற்படும் போது, அதனை சில நிமிடங்களுக்குள் அனைத்து சொற்களிலும் தோன்ற செய்ய வார்ப்புருக்கள் உதவும். எனவே, கொடி வேண்டுமென்போர், மேலே கூறியவைகளை எண்ண வேண்டுகிறேன். இப்போதைக்கு கைவிடுங்கள். நன்றி. வணக்கம்--த*உழவன் 17:24, 4 செப்டெம்பர் 2010 (UTC)

விக்சனரி முதற்பக்க வடிவமைப்பு மாற்றிட வேண்டல்[தொகு]

விக்சனரி முதற்ப்பக்க வடிவமைப்பில் சிறு மாறுதல் செய்து தினம் ஒரு சொல் பகுதியைச் சேர்க்கலாம். அதிலும் மூன்று பிரிவாக செய்து தினம் ஒரு அறிவியல் சொல், தினம் ஒரு பேச்சு வழக்கு சொல், தினம் ஒரு மரபு சொல் என்றவாறு அமைக்கலாம். மேலும் முதற்ப் பக்கத்தில் உள்ள தேடல் இயந்திரம் கொண்ட வார்ப்புரு கோட்டை எழுத்தில் பெரிதாக இருக்கிறது. அதன் அளவை சற்று குறைக்கலாம். அறிவியல் சொல் தினமும் தமிழர்கள் தேடும் சொற்களாகும். அறிவியல் சொற்கள் பலர் பல சொற்களை சொல்வதால் நாம் அதனை தினம் ஒன்றாக முதற்ப் பக்கத்தில் இடுவதால், இதுதான் என்று அடித்து சொல்ல உதவும் என்று நினைக்கிறேன். பேச்சு வழக்கு சொல் அந்த அந்த வட்டார மக்களின் ஈர்ப்பை விக்சனரிக்கு கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் மேலும் விடுபட்ட அவர்கள் வாட்டார வழக்கு சொற்களை சேர்க்கவும் அது உதவும். மரபுச் சொல் மறக்காமல் இருக்கவும், தமிழின் வளம் அறியவும் உதவும்.--இராஜ்குமார் 18:51, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

நல்ல கருத்துகள் இராச்குமார்! கட்டாயம் செய்வோம். முதல் பக்க வடிவமைப்பும் வெகுவாக மாற்றப்பட வேண்டும் என்பது என் கருத்து. இது நெடுநாளைய நினைப்பு. --செல்வா 22:34, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

மொழிபெயர்ப்பு[தொகு]

தமிழ்ச்சொற்களின் பொருள்களுக்கு அருகாமையில் ஆங்கிலத்தில் பொருள் தருவது நல்ல முறை அல்ல. ஆங்கிலத்திலே head என்னும் சொல்லைப் பாருங்கள். அதற்கு 40 பொருள்கள் தந்துள்ளார்கள். அவற்றில் 13 சொற்களுப் பல மொழிகளில் இருந்த்னு மொழி பெயர்ப்புகள் தந்துள்ளார்கள் இங்கே பார்க்கவும். தமிழில் தரும் ஒவ்வொரு சொற்பொருளுக்கும் ஏன் ஆங்கிலத்தில் மட்டும் பொருள் தர வேண்டும்?! உண்மை, பலர் இதற்காக வரலாம், ஆனால் இந்தி இணைச்சொல்லுக்காகவும், பிறமொழி இணைச்சொல்லுக்காகவும் வருவார்கள். மேலும் பழ. கந்தசாமி சொல்லும் //ஆங்கிலம் பெரும்பாலோருக்குப் பாலமாக அமைந்து அவர்களுக்குத் தமிழ்ச்சொல்லின் பொருளைத் தெளிவுபடுத்தமுடியும் // என்னும் தொடர் இன்னும் மிகுந்த கவலை தருகின்றது. தமிழ்ச்சொல்லைப் புரிந்துகொள்ளவும் தெளிவுபடுத்தவும் ஆங்கிலமா?! தமிழ்ச்சொல்லின் பொருளுக்கு ஈடான ஆங்கிலச்சொல்லைத் தருவதை எல்லோரையும்போல நானும் வரவேற்கிறேன் ஆனால் தமிழ் லெக்ஃசிக்கன், கிரியா அகராதிகள் போல் இல்லாமல் தமிழ் விக்சனரி நடுநிலையில் நின்று கூடியமட்டிலும் பல மொழிகளுக்கு இணையான சொற்களைத் தரும் ஓர் அகராதியாக இருக்க வேண்டும். கட்டாயம் இயலும். இதற்கு இன்னொரு வழியையும் முயன்று பார்க்கலாம். முதலில் தமிழில் பொருள்களைத் தந்த பின்பு, கீழே மொழிபெயர்ப்பு என்னும் பகுதியில், ஒவ்வொரு சொற்பொருளும் தந்து அவற்றுக்கான பல்மொழி பெயர்ப்புகளைத் தரலாம் (ஆங்கிலத்தில் head, hand என்பதில் தந்துள்ளவாறு). மொழிபெயர்ப்புப் பட்டியலில் அழுத்தமான எழுத்துகளில் தமிழில் உள்ள பொருளை முதலில் தரலாம். ஓர் எடுத்துக்காட்டுச் சொல்லைக் கொண்டு விளக்கினால் நன்றாக இருக்கும். நான் முயலுகின்றேன். எடுத்துக்காட்டு சொற்றொடர்களிலும் ஆங்கிலத்தில் மட்டும் மொழி பெயர்த்து எழுதுவதும் சரியில்லாதது போலவே உள்ளது (எனினும் இப்போதைக்கு இவை இருக்கட்டும்; தமிழில் மட்டுமே எடுத்துக்காட்டு தர வேண்டும். ஏன் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்பது விளங்கவில்லை. எனினும் இருக்கட்டும். பின்னர் பிறமொழியறிந்தவர், ஆர்வம் உடையவர் வந்து பின்னர் ஏதும் செய்யக்கூடும்).--செல்வா 01:28, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

எளிய முறையில் ஒவ்வொரு சொற்பொருளுக்கும் பற்பல மொழிகளில் இணையான சொற்கள் தருவதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டுக்குப் பால் என்னும் பக்கத்தைப் பார்க்க வேண்டுகிறேன்.மொழிகளின் பெயர் தானியங்கியாய் அங்கே இருக்கச் செய்யலாம். வெறும் ஈடான சொற்கள் மட்டும் தந்தால் போதும் (இப்பொழுது அப்படிச் செய்து காட்டவில்லை). பவுல், பழ. கந்தசாமி நீங்களும் பிற பயனர்களும் கருத்துத் தெரிவிக்கக் வேண்டுகிறேன். உள்ளே நிறத்தை மாற்றுவது போன்ற மெருக்கூட்டல்கள் எளிதாகச் செய்யலாம். --செல்வா 03:10, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

மொழிபெயர்ப்புகள்
மொழிபெயர்ப்புகளை, மிகவும் சீராகாவும், விரிவாகவும், மிகவும் எளிதாகவும் இப்பொழுது நம் தேவைக்கு ஏற்றாற்போல செய்ய இயலும். பால்2 என்னும் பக்கத்தைப் பார்க்கவும். மொழிபெயர்ப்பு என்னும் பட்டையின் அகலத்தையும் நிறத்தையும் வேண்டியவாறு பின்னர் மாற்றிக்கொள்ளலாம். பல்மொழி பெயர்ப்புகள், பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்பொருள்களுக்கும் உகந்தவாறு தருதல் இயலும். இவை இப்பொழுது நாம் முனைப்பாக செய்யவிருக்கும் தமிழ் இணைய பல்கலைக்கழகம் கொடையாகத்தந்த ஆங்கிலச்சொற்களை ஏற்றுவதற்கு முகன்மை இல்லை எனினும், தமிழ்ச்சொற்களுக்கு இவ்வடிவமைப்புகள் முகன்மையானதாக இருக்கும் என எண்ணுகிறேன். --செல்வா 14:56, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

 • வேலைப் பளு காரணமாக, பல நாள்கள் விக்சனரி உரையாடலில் கலந்துகொள்ள இயலவில்லை. செல்வா குறிப்பிட்ட பால் இடுகை பார்த்தேன். அமைப்பு நன்றாக உள்ளது. அங்கே, எண் 6-இல் தரப்படும் பொருள் (மட்டில்)பெயர்ச்சொல் என்பதற்கு மாறாக இடைச்சொல் என வரவேண்டும் என்று நினைக்கிறேன்.--பவுல்-Paul 00:34, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கம்[தொகு]

அனைவரின் பார்வைக்கும்! யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையும் சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT) கணினிச் சங்கமும் இணைந்து நடத்தும் கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கத்தைப் பற்றிய விவரங்களும் கட்டற்ற தமிழ்க் கணிமை தொடர்பான தலைப்புகளில் பங்களிக்க விருப்பமுள்ளோர் காண வேண்டிய இணைப்பும் இங்கு தரப்பட்டுள்ளன. த.வி.யில் பங்களிக்க / பார்க்க வருவோரிடம் இத்தகவலைச் சேர்ப்பிக்குமாறு இன்று வேண்டுகோள் நம்மிடம் விடப்பட்டது. சில முக்கிய தேதிகள்:

 • பங்களிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யக் கடைசி நாள்: 15 ஆகஸ்டு 2010
 • கலந்து கொள்வோர் பதிவு செய்யக் கடைசி நாள்: 26 ஆகஸ்டு 2010
 • உறுதி செய்யப்பட்ட தலைப்புகள் அறிவிக்கப்படும் நாள்: 18 ஆகஸ்டு 2010

மேலும் இந்த இணைப்பில் அனைத்துத் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன: [1] காணவும். --பரிதிமதி 18:21, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

அகத்திணை நூல்கள்[தொகு]

அகத்திணை நூல்கள் என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் உள்ள நூல்களை மட்டும் தகவல் உழவன் குறிப்பிட்டிருந்தார். காலத்தால் முந்திய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை தொகுப்பில் உள்ள நூல்களை அவற்றுடன் இணைத்தேன். பதிவாயிற்று. சேமிக்கப்பட்டது. பதிவிலும் நின்றது. முல்லைப்பாட்டு அகத்திணை என்று விளக்கினேன். பதிவு நின்றது. குறிஞ்சிப்பாட்டு பற்றி விளக்கினேன். பதிவு நின்றது. பின்னர் அழிந்துவிட்டது. கூடுதல் தகவல்கள் அழிக்கப்படும் என்றால், சரியான தகவல்கள் அழியும் என்றால், அகநானூறு, ஐங்குறு நூறு போன்றவை அகத்திணை நூல்கள் இன்று சுட்டிக் காட்டியது அழியும் என்றால், ... புரியவில்லை. ... மன்னிக்கவும். வாழ்க வளமுடன். --Sengai Podhuvan 22:54, 18 ஆகஸ்ட் 2010 (UTC)(த*உழவனால் இடமாற்றம் செய்யப்பட்டது.--த*உழவன் 23:58, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

 • உங்களது கருத்துக்கள் எனக்கு புரியவில்லை. நான் தமிழை அதிகம் கற்றவனல்ல. தமிழ் மேல் ஈடுபாடு கொண்ட ஒரு எழுத்தன். நான் கவனிக்க வேண்டிவற்றைக் கூறவும். அப்பகுதியின் வரலாற்றுப் பகுதியினைக் கண்டேன் எதுவும் அழிக்கப்பட்டதாகத் தெரியவில்லையே? நன்கு சுட்டவும். நன்றி.--த*உழவன் 00:07, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

Citations-தத்தல்[தொகு]

ஒவ்வொரு சொற்பக்கத்தின் மேலே இருக்கும், Citations- என்ற தத்தலில் எக்குறிப்புகளை எழுத வேண்டும்? ஆங்கில விக்சனரியையும் பார்த்தேன். அவர்களும் பயன்படுத்துவதில்லை.--த*உழவன் 06:32, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

தந்துகை(gadgets)[தொகு]

 • தமிழ்விக்கிப்பீடியாவின் என்விருப்பத்தேர்வுகளில்(gadgets) இருக்கிறது. இங்கு இல்லை. எங்ஙனம் நிறுவிக்கொள்வது? இதுபோல பல வசதிகள் த.வி.யில் உள்ளது. இங்கில்லை. அதைப்போலவே, இங்கும் செய்திட வேண்டுகிறேன்.--த*உழவன் 12:33, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவின் விருப்பத்தேர்வுகளில் gadgets என்ற பகுதியின் கீழ் hotcat உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இவை அனைத்தையும் இங்கு கொண்டு வர இயன்றால் நன்று--ரவி 12:35, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

மொழிபெயர்ப்புகளின் பட்டியல்[தொகு]

தற்போது வரும் அனைத்து மொழி மொழிபெயர்ப்புகளின் பட்டியல் மிக நேர்த்தியாக உள்ளது. மாகிர், செல்வா உங்களிருவருக்கும் நன்றி. சில கருத்துகள்.

 1. ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் வரும்போது அதை எவ்வாறு மொழிகளின் கீழ் எவ்வாறு பட்டியலிடப் போகிறோம்?
 2. ஆங்கிலம், இந்தி போன்ற முக்கிய மொழிகளின் மொழிபெயர்ப்பை வெளிப்படையாகக் காட்டுதல் தேவை. பெரும்பாலான பயனர்கள் அம்மொழிகளில் பொருள்நாடி இங்கு வருகின்றனர். அதனால், அவற்றுக்கு முக்கியத்துவம் தரல் அவசியம். இல்லையென்றால், மொழிபெயர்ப்பைப் பார்க்க, காட்டு என்பதை அழுத்தி, உள்ளே நடுவில் உள்ள ஆங்கில மொழியின் கீழ் பொருள் தேடவேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் விரைவில பொருள் நாடி வரும் பெரும்பாலான புதியோருக்கு மேலேயே இம்முக்கிய மொழிகளில் பொருளைப் பார்க்கும் வசதி செய்து தந்தால் நலலது.
 3. பெரும்பாலும் ஆங்கில மொழிபெயர்ப்புகள்தான் செய்து வருகிறோம். வேறு மொழிகளில் தொடராக்கம் செய்வோர் இன்னும் குறைவாகவே உள்ளனர். இக்காரணத்துக்காகவும் மொழிப்பட்டியல் பொருள் உள்ள மொழிகளின் ஏதாவது வரிசையில் பிரிக்கப்பட்டால் நல்லது என்றும் தோன்றுகிறது.
 • ஆங்கிலச் சாய்வு என்று கருதாமல், ஆங்கிலம் மிகப் பரவலான பயன்பாட்டில் உள்ள மொழி என்ற அடிப்படையில் முக்கிய மொழிகளுக்கு விரைவில் பார்க்கும் வசதியாக இதைச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். (We should think of this like a fast cache out on the main page rather than going inside the languages table to fetch. That will make it faster and easier for the majority of users) பழ.கந்தசாமி 18:33, 27 ஆகஸ்ட் 2010 (UTC)
ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் வரும்போது எல்லாவற்றையும் சேர்க்கவேண்டியதில்லை. மிகவும் நெருக்கமான சொல்லை மட்டும் சேர்க்கலாம்.

கண் பக்கத்தில் மொழி பெயர்களை தமிழில் தந்திருப்பது போன்று ஆங்கில Eye பக்கத்திற்கு மொழி பெயர்களை ஆங்கிலத்திலே தரலாம். அதேபோன்று இந்தி சொல் பக்கத்திற்கு மொழி பெயர்களை இந்தியில் தரலாம். எல்லா பக்கத்திற்கும் தமிழிலேயே தருவதை விட இவ்வாறு செய்யலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தியில் மொழிபட்டியல்களை தந்தால் நிரலை மேம்படுத்தி தருகிறேன். -- Mahir78 10:26, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

 • பழ. கந்தசாமி, செவி என்னும் பக்கத்தில் மொழிபெயர்ப்புகள் என்னும் பகுதியில் மொழிகளைப் பிரித்துள்ளவாறு செய்தால் பயனுடையதாக இருக்கும். ஆங்கில அகரவரிசையில் மொழிகளைத் தருவதால் பயன் இல்லை. மேலும் முதற்கண் ஆங்கிலம், பிரான்சியம், எசுப்பானியம்ம், இடாய்ச்சு, சீனம், நிப்பானியம், இந்தி, அரபி, கிசுவாகிலி ஆகிய மொழிகளுக்கு முதன்மை இடம் தருவது நல்லது. இதனாலேயே மொழிகளை, மொழிக்குடும்பம் வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு மொழிக்குடும்பத்திலும் 10 மொழிகளுக்கூ மிகாமல் பட்டியல் அளித்தேன். Breton, Gaelic போன்ற மொழிகளிலும் தரலாம் எனினும், அவற்றைத் தனிப் பட்டியலில்லோ, பட்டியலின் பிற்பகுதியிலோ தரலாம். பிறமொழிச்சொற்களின் ஒலிப்புகளும் அங்கேயே தருவது நல்லது. ஆன்கிலத்தில் முதலில் தரலாம், ஆனாலும் தனியாக வெளியில் தருவது தேவை இல்லை. செவி என்னும் பக்கத்தைத் திறந்து பாருங்கள் முதலில் தெரிவது ஆங்கிலச்சொல்தான். அதே போல இந்திய மொழிகளில் தேவை என்றால் இந்தியில் முதலிலும், வங்காளியில் இரண்டாவதுமாக என்பது போல் வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். இதனை ஒரு முறை செய்தால் போதும்.
 • ஒரு சொல்லுக்கு அதே பொருளைத் தரக்கூடிய பல ஆங்கிலச்சொற்கள் இருந்தால் அவற்றை இப்படியலில் தரலாம். தமிழில் கரை என்னும் சொல்லுக்கு shore, bank என்று இரண்டு ஆங்கிலச்சொற்கள் தரவேண்டும் எனில் கட்டாயம் தரலாம். ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கும் பொழுது ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு மொழி சுருங்கு அட்டவணை வடிப்பது மிக எளிது. பார்க்கவும் கண், பால்2. 10-20 வெவ்வேறு பொருள்கள் இருந்தாலும் அழகாக ஒவ்வொரு பொருளுக்கும் சுருங்கு அட்டவணை அமைத்து, ஒரே பக்கத்தில் மிகவும் நேர்த்தியாக அமைத்து விடலாம். இதுவே சிறந்தமுறை.
 • மாகிர், இது தமிழ் விக்சனரி என்பதால், இதில் எல்லா மொழிகளிலும் உள்ள சொற்களுக்கும் தமிழில் பொருள் தருவதே நோக்கம். ஆங்கிலத்தில் eye என்பதற்கான பிறமொழிச்சொற்களை ஆங்கில விக்சனரி தரும். இதே போல இந்தி விக்சனரி नेत्र என்னும் சொல்லுக்கு அவர்கள் பிறமொழி பெயர்ப்புகளை அங்கு தருவர். இப்படித்தான் எல்லா மொழி விக்சனரியர்களும் இயங்குகின்றார்கள். பிறமொழிச்சொற்களுக்குத் தமிழைத் தவிர பிற எந்த மொழியிலும் பொருள் தருவது நம் விக்சனரிக் கொள்கை அல்ல. எனவே மொழிபெயர்ப்புப் பட்டியல் அங்குக் கூடாது.

--செல்வா 20:12, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

மொழிப்பட்டியலை அகரவரிசையில் இடலாமே![தொகு]

 • செல்வா கூறியதுபோல, கண், செவி, காது, பால் ஆகிய சொற்களைப் பார்த்தேன். நிலப்பகுதி வாரியாக மொழிகளை வகைப்படுத்துவதில் இடர்ப்பாடு உளதால், அகரவரிசையைப் பயன்படுத்துவது நலம் என்பது என் கருத்து.
 • கண் என்பதற்கு இடத்தில், மாட்டில் என்றும் பொருள் இருப்பதைக் குறிக்கலாம். அவ்வாறு இடப்பெயராக, குறள் 1099 பயன்படுத்துவதைக் காண்க: காதலர்கண் (= காதல் உடையவர் மாட்டு).
 • தமிழ்ச் சொல்லுக்குத் தமிழில் பொருள் தருவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றே நானும் கருதுகிறேன். வணக்கம்!--பவுல்-Paul 00:31, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
கண் என்றால் இடம் என்னும் பொருள் இன்றும் வழக்கில் உள்ளது: எ.கா முதற்கண். கண் என்பதற்கு இன்னும் பல பொருள்கள் உண்டு அவை சேர்க்கப்பட வேண்டும். அகரவரிசையில் அமைப்பதைவிட மொழிக்குடும்ப வாரியாகவோ, நிலப்பகுதி வாரியாகவோ அமைப்பது நல்லது என்பது என் கருத்து ஏனெனில், தொடர்பான மொழிகள் ஒரு குழுவாக இருக்கும். சொற்களை ஒப்பிட்டுப் பார்ப்பதும் எளிது. தானியங்கியாய் அமைக்கும்பொழுது எந்த வரிசையிலும் அமைக்க ஏற்பாடு செய்யலாம். நிலப்பகுதி வாரியாக மொழிகளைவகைப்படுத்துவதில் என்ன இடர்ப்பாடு உள்ளது என்று அறிந்தால் ஏதும் தீர்வு சொல்ல இயலும். --செல்வா 02:19, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
 • இன்றைய உலகில் பல மொழிகள் உண்மையிலேயே பன்னாட்டு மொழிகளாக மாறிவிட்டன. ஆங்கிலம், எசுப்பானியம் போன்ற மொழிகள் நாடுகடந்த மொழிகளே. ஐரோப்பாவின் கீழ் மட்டுமே அவற்றை இடுவது சரியாகாதே. இலத்தீன் ஒரு செம்மொழி; நாடு கடந்த மொழி. இது முதல் இடர்ப்பாடு. இரண்டாவது, அகர வரிசை என்பது ஒரு பொது முறையாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட மொழியைத் தேடுபவர் உடனடியாகக் கண்டுபிடித்துவிடலாம். தொடர்பான மொழிகள் ஒரு குழுவாக இருக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதை நான் மறுக்கவில்லை. செவி என்பது தமிழுக்கும் மலையாளத்திற்கும் பொது; அதற்கு இணையாக கான் என்பது இந்தி, குசராத்தி, வங்காளம் ஆகியவற்றிற்குப் பொது. குழுவாக இருந்தால் இந்த ஒற்றுமை/வேற்றுமை காணல் எளிது என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் இந்தியா உட்பட்ட தெற்கு ஆசியாவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, பல மொழிக் குடும்பங்கள் உளவே (எ.டு.: Anglo-Saxon, Germanic, Slavic, Scandinavian...). அவற்றையெல்லாம் ஒவ்வொரு இடுகையிலும் பிரித்துக் காட்டுவது இயலாதே.
 • மேற்கூறிய காரணங்களை முன்னிட்டே அகரவரிசை நல்லது என்று கருத்துத் தெரிவித்தேன். பிரித்துப் போடுவது அதைவிட நல்லது என்று பெரும்பான்மையோர் கருதுவதாக இருந்தால் நான் உடன்போக அணியமாயுள்ளேன்.:) --பவுல்-Paul 03:29, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
 • நான் மொழிக் குடும்பம் என்னும் நோக்கில்தான் ஆங்கிலம் எசுப்பானியம் பிரான்சியம் என்பனவறை இந்திய-ஐரோப்பிய மொழிகள் என்னும் பொருளில் குறிப்பிட்டிருந்தேன். வட இந்திய மொழிகளை இந்திய-ஆரிய உட்குடும்பத்துக்குள்ளும், திராவிட மொழிகளைத் தனியாகவும் காட்டலாம்.
 • அகரவரிசையில் என்ன குழப்பம் என்றால், அது தமிழ் அகரவரிசையில் வருதல் வேண்டும் (மொழிப்பெயர்கள் தமிழில் இருக்குமாதலாலும், இது தமிழ் விக்சனரி என்பதாலும்). இதில் நாம் தேடும் மொழியைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். உள்பகுப்புகள் இருந்தால் 10 ஒவ்வொரு பகுப்பிலும் 10-12 மொழிகளுக்கு மிகாமல் இருப்பதால் கிடைப்பது எளிது. ஆங்கிலம் முதலில் இருக்கும்.
 • நிலப்பகுதியை மட்டும் அடிபப்டையாக வைத்து ஆக்க வேண்டும் என்று கூறவில்லை. மொழிக்குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலும் செய்யலாம் (ஒரு சிலவற்றை வேண்டும் என்றால் சிறிது மாற்றி நிலபப்ட அமைப்பை ஒட்டியும் செய்யலாம். எ.கா. பாரசீக மொழியை இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்துக்குள் இட வேண்டும். ஆனால் அதனை நடுகிழக்கு நாடுகளுடன், ஈராக், ஈரான், எபிரேயம், துருக்கி ஆகியவற்றுடன் இடுவது பொருத்தமாக இருக்கும். இது ஒரு கருத்துதான். இப்படி விதிவிலக்காக வருவன மிகச்சிலவே. துல்லியமாக மொழிக்குடும்பத்தின்படியேயும் இடலாம். பெரிய மொழிக்குடும்பங்கள் ஒரு 7 தான் இருக்கும் (மொத்தம் ஒரு 17 குடும்பங்கள் உள்ளன. ஆனால் எல்லா மொழிக்குடும்பங்களின் மொழிகளிலும் நாம் சொற்களை சேர்க்க பல பத்தாண்டுகள் ஆகலாம். உலகில் 6,000 மொழிகள் உள்ளன. நாம் குத்துமதிப்பாக ஒரு 30-40 மொழிகளில் உருவாக்கினாலே மிகப்பெரிய அருஞ்செயலாக அமையும் என்று கருதுகிறேன். இவற்றுள் ஒரு 10-12 மொழிகள் மிக முக்கியமானவை)

--செல்வா 20:38, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

 • செல்வா, ஆங்கில விக்சனரியில் we[2], you[3], music[4] போன்ற ஒருசில சொற்களுக்குத் தரப்படுகின்ற மொழிபெயர்ப்புகளைப் பார்த்தேன். அகரவரிசையில் அழகாக உள்ளது. தமிழ் விக்சனரியிலும் அவ்வாறே இருந்தால் நன்று. தமிழ் அகரவரிசை முறைக்கு ஏற்ப மாற்றியமைப்பது தவிர்க்கவியலாதது. ஆனால், சிறிது பழகிவிட்டால் எளிதாகிவிடும். மொழிக் குடும்பங்கள் அமைப்பு தனியார் விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப மாறக்கூடியது. அகரவரிசையோ தரப்படுத்தப்பட்ட முறை. எனவே விக்கி/விக்சனரி நடுநிலைப் போக்குக்கு அதிக இசைவானது. இது என் கருத்து. நீங்கள் குறிப்பிடும் முறை நல்லதென்றால் உடன்படுகிறேன்.--பவுல்-Paul 00:05, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
 • அகரவரிசையே சிறந்ததென்றால் நானும் ஏற்கிறேன், ஆனால் உள்பகுப்பு இல்லாமல் 30-40 மொழிகள், அகரவரிசையைத் தவிர வேறு எந்தவித உட்தொடர்பும் இல்லாமல் இருப்பது சிறப்பாக இருக்குமா என்பது என் ஐயம்.--செல்வா 00:36, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
 • ஒருவேளை, இந்தியத் துணைக்கண்ட மொழிகள், பிற மொழிகள் என்றொரு உட்பகுப்பு இருந்தால் எப்படி?--பவுல்-Paul 00:44, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

 • தமிழ் மொழியில் பொருள் முதன்மை இடம் என்பதில் அனைவரும் உடன்படுகிறோம்
 • மொழிகள் பட்டியலில் ஆங்கிலம், தமிழ் இரண்டுக்கும் முதன்மை இடமளித்து வெளியே கொடுத்துவிட்டு, மற்ற மொழிகளை உள்ளே இடலாம். பொருள் நாடி வருவோர் பெரும்பாலும் மொழிபெயர்ப்புக்கு வருகின்றனர், அவர்களுக்கு விரைவில் பொருள் காணுமாறு பக்கவடிவமைப்பதில் நமது வெற்றிக்கு வழிவகுக்கும். விக்சனரிக்குப் பழக்கப்படாதவர் பல வருனர்கள் பொருள் இல்லை 'காட்டு' பொத்தானை அழுத்தினால் உள்ளே பொருட்சுரங்கம் உள்ளதென அறியாமல் வெளியேறி, பின்னர் இங்கு வராமலேயே போய்விடலாம். தமிழில் ஏராளமான சொற்களுக்குப் பல்பொருள் என்பதால், இரண்டு முறை காட்டு என்பதை அழுத்தினால்தான் அவர்கள் பொருள் காண முடியும். அதனால், இவ்வாறான முக்கிய மொழிகளையாவது மேலே கொணர்தல் நன்மையும் வெற்றியும் பயக்கும் என்று கருதுகிறேன்,
 • பொருள்தராத பலமொழிகளைப் பட்டியலில் இடுதல், ஆங்காங்கே பொருள் இருக்கும் மொழிகளைக் காண்பதைக் கடினமாக்குகிறது, பழ.கந்தசாமி 07:32, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
 • பழ.கந்தசாமி, தமிழ்-ஆங்கிலம் பற்றி நீங்கள் கூறுவது உண்மையே. மிகப் பெரும்பாலான விக்கியர் தமிழ்வழி ஆங்கிலம், ஆங்கிலம்வழி தமிழ் என்பதோடு, தமிழில் பொருள் புரிந்துகொள்ளவும் விக்சனரிக்கு வருவோரே. பொருட்சுரங்கம் காணாமல் போவோரும் உண்டு. ஆக, உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.--பவுல்-Paul 10:50, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

பழ.கந்தசாமி, ஆங்கிலத்தில் முதலில் தரலாமே ஒழிய சுருங்கு அட்டவணைக்கு வெளியே தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆங்கிலத்துக்கு மட்டும் அப்படித் தருவது என்பது கடுஞ்சாய்வு. ஆங்கிலத்தின் முதன்மை பற்றியோ, தமிழர்களில் பலர் தமிழ்ச்சொல்லுக்கான ஆங்கிலச் சொல்லை அறிய முனைவர் என்பது பற்றியோ நன்கு அறிவேன். அதற்காக நாம் சுருங்கு அட்டவணைக்குள் முதலில் த்ரலாம் (நான் அப்படித்தான் அமைத்தேன்). வெளியே ஆங்கிலத்துக்கு மட்டும் தருவது சரியான போக்கு இல்லை என்பதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், உங்கள் கூற்றுப்படி ஆங்கிலச்சொல்லைப் பார்த்துவிட்டு இந்திச் சொல் இல்லை, இடாய்ச்சுச் சொல் இல்லை என்று தவறுதலாக நினைத்துத் திரும்புவர்தானே? மொழி பெயர்ப்புகளுக்கு விரியும் அட்டவனையைத் திறந்து பாருங்கள் என்று வேண்டுமானால் மொழிபெயர்ப்புப் பட்டையிலேயே, அதற்கு கீசே எழுதி அறிவிக்கலாம். மேலும் உங்களுடைய மற்றொரு கருத்தும் எனக்குச் சரியென்று படவில்லை. பல பொருள்கள் இருக்கும் பொழுது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு அட்டவணையைத் திறந்து பார்க்க வேண்டும் என்கின்றீர்கள். ஆமாம், அப்படித்தான் பிறமொழிகளும் செய்கின்றனர், அதுவே சிறந்த (ஒழுக்கமான) முறையும் ஆகும். ஏன் எனில், ஒரே இடத்தில் பல பொருள்கள் இருந்தால் (எதுக்கு எது என்னும்) பொருள் குழப்பம் வரும். மேலும், கூடுதலான பொருள்கள் சேர்க்க நேர்ந்தால், வரிசை மாறுபடும். மிகப்பெரும்பாலான சொற்களுக்கு 10-15 பொருள்களுக்கு மேல் தரத் தேவை இராது (பெரும்பாலும் இது 4-5 ஆகத்தான் இருக்கும்). விரியக்கூடிய அட்டவணையைத் திறந்து பார்க்க அறிவிப்பு இடலாம் என்பது என் பரிந்துரை.--செல்வா 13:49, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

By Default, மொழிப்பட்டியை திறந்தபடியே இருக்கும்படி செய்திடலாமா?. தேவைப்பட்டால் பயனர்கள் மறைத்துக்கொள்ளலாம். -- Mahir78 14:23, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
 • Mahir கூறுவதும் நல்ல கருத்தாகவே படுகிறது. ஆங்கில மொழிபெயர்ப்புகுச் சிறப்பிடம் கொடுப்பது பற்றி ஒத்த கருத்து உளதாகத் தெரிகிறது. கன்னட விக்கி அவ்வாறே செய்கிறது (காண்க: morning; dawn; sun). ஆனால் அங்கே சுருங்கு அட்டவணையோ, பிற மொழிபெயர்ப்புகளோ இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் விக்சனரி இதில் முன்னோடியும் வழிகாட்டியுமாக உள்ளது போற்றற்குரியது. எனவே, செல்வா, Mahir78 இருவரும் சொல்வதுபோல, default திறந்த பெட்டியும் செய்து, ஆங்கிலத்தைக் கன்னட விக்கி செய்வதுபோல் வெளியே கொடுத்தால் எப்படி? இதனால், தமிழ்-ஆங்கிலம் தேடுவோர் பெட்டியைத் தேடவேண்டாம்.:)--பவுல்-Paul 15:09, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

 • திறந்தவாறு தரலாம். அவ்வாறு தரும்போது, மொழிபெயர்ப்புத் தரப்படாத பெரும்பாலான மொழிகள் காட்டப்படாமல் இருப்பதும் சிறந்தது. மொழிபெயர்ப்பு கண்ணில் படுமாறு அமைத்தல் என்பது வருவோரை மீண்டும் வரவைக்கச் சிறந்த வழி. என்றோ மொழிபெயர்ப்பு தரப்படும் மொழிகளுக்கு நீளமான பட்டியல் அமைத்து இன்று பொருள்நாடி வருவோருக்கு மொழிபெயர்ப்பை அப்பட்டியலில் தேடிக் கண்டுபிடிக்க வைக்கவேண்டுமா?
 • திறந்தவாறு ஆங்கிலம், இந்தி என்ற இரண்டு மொழிகளைக் காட்டி மற்றவற்றைப் பார்க்கத் திறக்கவைக்கலாம். அவ்வாறு தரும்போது cut paste செய்து பொருள்பார்க்கவருவோரும் பொருளை மேலேயே 'காணலாம்'.
 • காட்டு பட்டியலில் default மொழி ஒன்றை அமைத்து அங்கே ஆங்கிலத்தை வைக்கலாம். வேறுமொழிகள் என்பதை show என்ற பொத்தான் வரும் இடத்தில் அமைக்கலாம். பயனர் விரும்பினால், அந்த default-ஐ வேறு ஒரு மொழிக்கு மாற்றிக்கொள்ளுமாறு (இயன்றால்) செய்யலாம். மாஹிர் இவ்வாறு செய்யமுடியுமா?
 • இவை அனைத்தையும் குறிப்பிட்ட மொழிக்கான சாய்வு என்பதைவிட பெரும்பாலான பயனர்களுக்கான ஒரு வசதி, அவர்களை வர/தக்கவைக்க ஒரு வழி என்பது என் கருத்து.
 • இறுதியாக javascript இல்லாதவர்களுக்குத் திறந்தபட்டியல் வருமா?

பழ.கந்தசாமி 15:51, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

திறந்தவாறு அட்டவணை இருப்பது பொருத்தமாக இராது. ஒரு சொல்லுக்கு 5-8 பொருள்கள் இருந்தால் (ஒவ்வொரு பொருளுக்கும் 20-30 மொழிபெயர்ப்புகள் இருந்தால்) மிக நீண்டதாக இருக்கும், பார்ப்பதற்கும் அழகொழுக்கத்துடன் இராது. மொழிபெயர்ப்பு அட்டவணையைப் பிரித்துப் பார்க்கவும் என்று எடுப்பான முறையில் ஒருவரி அறிவிப்பு இருப்பதே சிறந்தது. சுருங்கு அட்டவணைகளாக இருப்பதால், பக்க வடிவமைப்பு அடக்க ஒடுக்கமாகவும் நேர்த்தியாகவும் உள்ளன. ஆங்கிலம் இந்தி போன்ற மொழிகளை மட்டும் வெளியில் இடுவது சாய்வு மட்டுமல்ல அது சரியானதாக அழகானதாகத் தோன்றவில்லை (பிற மொழிகளுக்கு சுருங்கு அட்டவனையில் இருப்பதும், 5-6 பொருள்கள் வரும்பொழுது ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக வெளியே இரண்டு இரண்டு மொழிகளுக்கும் உள்ளே சுருங்கு அட்டவணையில் பிறமொழிகளுக்கும் இருப்பது அழகாகவோ, ஒழுக்கமாகவோ இராது). சுருங்கு அட்டவணையில் முதலில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தரலாம். அதுவே நாம் எளிதாக்ககூடிய ஒன்று. மற்றபடி ஆங்கில விக்கியில் உள்ளபடி, மொழிபெயர்ப்புகள் சேர்க்கும் மொழிகளில் மட்டும் வந்து அமருமாறும் செய்ய இயலும், ஆனால் இவை அகரவரிசையில் இல்லாமல் தானியங்கியாய் முன்பு வகைப்படுத்தப்பட்ட உட்பகுப்புகளுக்குள் வந்து அமருமாறு செய்ய வேண்டியிருக்கும். --செல்வா 21:07, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

அகரவரிசைமொழிபெயர்ப்பு பட்டியலும் , ஆங்கில விக்சனரி வசதியும்[தொகு]

en:Magellanic penguin அனைவரும் இதனைக் காண வேண்டுகிறேன். இப்பக்கத்திலுள்ள படி, நாம் அமைத்தால் நம் விக்சனரி சிறப்பாகவும், பிற இந்திய மொழி விக்சனரிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும். இதன் சிறப்புகளாக நான் கருதுவன வருமாறு;-

1) மொழிப்பெயர்ப்பு,ஒலிப்பெயர்ப்பு முதலியவற்றினை இடுதல் எளிது. அவை அவற்றிற்குரிய வரிசையில் தவறாமல், பிறலாமல் வரிசையாக அமையும். (எ. கா.) ஆங்கில விக்சனரியின் அப்பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.அதிலுள்ள மொழிபெயர்ப்பு பெட்டியிலுள்ள Add translation என்பதில் ta என்று மட்டும் தட்டுங்கள். பிறகு அடுத்துள்ள பெரிய பெட்டியில் பனிப்பாடி என்று இடுங்கள்.Transliteration: என்பதில் ஒலிபெயர்ப்பினை இட்டு preview translation என்பதனை அழுத்துங்கள். அப்பக்கத்தின் இடப்பக்க மேலே Page Editing தோன்றும் . மாற்றம் தேவையெனின் சேமிக்கலாம். வேண்டாமென்றால் அதிலுள்ள பெருக்கல் குறியின் மூலம் Page Editing என்பதனை மறையுமாறு செய்யலாம்.

2) மொழிபெயர்க்காத, விளக்கமில்லா சொற்களின் பட்டியல் குறைவாகும். பலர் மொழிபெயர்ப்பில் ஈடுபடும் போது எதை எங்கிடுவது என்ற குழப்பம் நீங்கும்.

3) மாஹீர் இப்பொழுதுள்ள மொழிபெயர்ப்பு பட்டியலை, மேற்கூறிய ஆங்கில விக்சனரி வசதியோடு ஒருங்கிணைப்பார் என நம்புகிறேன். படிவத்தினை விட படிவத்துள் இருக்கும் தகவல்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இதுவரை தமிழ், ஆங்கிலம் என்பதிலேயே நம் கவனம் இருந்துள்ளது. அவற்றிலேயே செய்யப்பட வேண்டியவை ஏராளம் நிலுவையில் இருக்கிறது.

எனவே, பல மொழிகள் அடங்கிய மொழிபெயர்ப்பு பெட்டி வசதி முழுமையாக இப்பொழுது தேவைப்படாது. பின்பு அது போல தோன்றவும் மேற்கூறிய ஒருங்கிணைப்பு தேவை.

த.இ.ப.சொற்களை பதிவேற்றுவதில் உங்கள் கருத்துக்கள் குவிந்தால் நன்றாக இருக்கும். அது குறித்த படிவ முடிவுகளைத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --த*உழவன் 16:19, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

Wiktionary namespace becomes விக்சனரி[தொகு]

இனி Wiktionary பெயர்வெளியை விக்சனரி என்று தமிழில் எழுதலாம். காட்டாக Wiktionary:ஆலமரத்தடி ஐ விக்சனரி:ஆலமரத்தடி என்று நேரிடையாக எழுதலாம். முன்பு விக்சனரி:ஆலமரத்தடி ஐ Wiktionary:ஆலமரத்தடிக்கு வழிமாற்று செய்யப்பட்டிருந்தது. [5] --Mahir78 23:58, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

 • இனி பெயர்வெளியை தமிழிலேயே எழுதலாம். இவ்வருட ஆரம்பத்தில் இதுபற்றி நற்கீரன் கூறியிருந்தார். நீங்கள் இதனை முடித்து வைத்துள்ளீர்கள். நன்றி! மாஹீர்.

--த*உழவன் 01:46, 1 செப்டெம்பர் 2010 (UTC)

கருத்துக் கணிப்பு[தொகு]

தகவலுழவன் பேச்சு:dado2 என்னும் பக்கத்தில் இட்டுள்ள கருத்துகள் பற்றி சில கேள்விகள் எழுதுள்ளன. அருள்கூர்ந்து இதனை முறைப்படி பயனர்கள் யாவரும் சேர்ந்து நடத்த வேண்டுகிறேன். --செல்வா 03:30, 5 செப்டெம்பர் 2010 (UTC)

விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம் என்னும் பக்கத்தில் நான் அண்மையில் இட்ட கருத்தைப் பார்க்கவும். --செல்வா 03:53, 5 செப்டெம்பர் 2010 (UTC)

பயனர்கள் வசதிக்காக மேலே குறிப்பிட்ட பகுதியைக் கீழே தந்துள்ளேன்:


கொடி குறித்து, இதற்கு முன் நடந்த கலந்துரையாடல்கள்[தொகு]

கொடி குறித்த கூறப்பட்டுள்ள மாற்றுக் கருத்துக்களைக் காணவும்(ஆலமரத்தடியில் 6.4 எந்த மொழிக்கு என்ன மொழிப் பட்டி(கொடி பற்றி..) என்பதிலுள்ள உரையாடல்கள்)}}). கொடியில் மட்டுமே இறுதி முடிவு மாற்றப்பட வேண்டும். மற்ற அனைத்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது.நன்றி.வணக்கம்.--த*உழவன் 01:18, 5 செப்டெம்பர் 2010 (UTC)

வேண்டாமெனக் கருத்திட்டவர்கள்;-
 1. நற்கீரன்
 2. இரவி
 3. மாகிர்
 4. த*உழவன்

தகவலுழவன், இப்படி சாய்வான கருத்துகள் இடுதல் சரியல்ல. கருத்து கணித்தபொழுது இரவியோ, நற்கீரனோ, மாகிரோ வாக்கு அளிக்கவில்லை. கொடியுடைய பட்டைக்கு நால்வர் ஆதரவாக வாக்கு நல்கினர். எதிர்த்து யாரொருவரும் வாக்கு அளிக்கவில்லை (நீங்களும் வாக்கு அளிக்காவிட்டாலும் ஒப்புக்கொண்டீர்கள்). இவற்றை இங்கே பார்க்கலாம். ஆலமரத்தில் நிகழ்ந்த உரரயாடல்களை பலவாறு மாற்றியும், பிரித்தும், பல்வேறு இடங்களில் பகுதிபகுதியாக பிரித்தும் சேர்த்தும் நீங்கள் பெருவாரியாக குழப்பியுள்ளீர்கள் (இவை ஒழுங்குபடுத்துதல் என்பது உங்கள் கருத்து என்பதனை அறிவேன்). எனவே எது எங்குள்ளது என்று கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. எனினும் இப்போதைக்கு நான் மேலே இட்டுள்ள தொடுப்பைப் பாருங்கள். முறைப்படி கருத்துக் கணிப்பு நடத்தியபோது எடுத்த முடிவைப் பாருங்கள். அப்படியே நீங்கள் மேலே கூறும் கருத்தைக் கூறவேண்டும் எனினும், வேண்டும் என்று யார்யார் கூறினர் என்பதனையும், நடுநிலை நோக்கிக் கூறுதல் வேண்டும். மேலே அனைத்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது என்று நீங்கள் கூறுவது முறையல்ல என்பதனைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். --செல்வா 03:51, 5 செப்டெம்பர் 2010 (UTC)


--செல்வா 03:57, 5 செப்டெம்பர் 2010 (UTC)

 • கருத்துக்களை அங்கு மாற்றியுள்ளேன்.காணவும். அப்படி மாற்றத பட்சத்தில் இது போன்று இடம் பெயர்க்கவும். ஏனெனில், இங்கும் மாற்ற வேண்டிய வேலைப் பளு வருகிறது. நீங்கள் கூறிய கருத்துக்களை, மேலும் சில இடங்களில் மாற்றியுள்ளேன். இருமுறை இட்டுள்ள மறுபதிவுகளையும் நீங்கள் தான் மாற்றவேண்டும். அப்படி மாற்றவில்லையெனில், என்னைப்பற்றிய தவறான கருத்துக்கு அடிகோலும். இனி இவ்விதம் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
நான் இங்கு கற்கிறேன்.பங்களிக்கிறேன். எனக்கு வழிகாட்டல்கள்,மாதிரிகள் தான் தேவை. மற்றவைகளை, விமர்சனங்களாகவே கருதுகிறேன். அவை கருத்துக்கள் அல்ல. எனக்கு அதில் உடன்பாடில்லை.இது போன்ற செயல்கள் என்னைச் சோர்வடையச் செய்கிறது. அன்றாட வாழ்வியல் பொருளிட்டவே அதிக நேரம் தேவைப்படுகிறது. இங்கு பொருளமைக்க கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நன்றி. வணக்கம்--த*உழவன் 02:04, 7 செப்டெம்பர் 2010 (UTC)
தகவலுழவன், நீங்கள் கூறுவது எனக்கு விளங்கவில்லை. கருத்துக்களை அங்கு மாற்றியுள்ளேன்.காணவும். அப்படி மாற்றத பட்சத்தில் என்கிறீர்கள். எங்கு என்று அருள்கூர்ந்து கூறுங்கள்? அப்படி மாற்றாத பட்சத்தில்?? எழுத்து வடிவில் நாம் உரையாடும் பொழுது சரியாக புரிந்து கொள்வது சில நேரங்களில் கடினமாகிவிடுகிறது. இதனை நாம் எல்லோருமே கருத்தில் கொள்ளவேண்டும். நீங்கள் கூறும் "இருமுறை இட்டுள்ள மறுபதிவுகளை" என்பதும் என்னவென்று விளங்கவில்லை? உங்கள் மற்ற கூற்றுகள் மிகுந்த வருத்ததையும் கவலையையும் தருகின்றன. நான் என்ன செய்ய முடியும் என்று எனக்கு விளங்கவில்லை. இப்படியான உணர்வுகளை முன்வைத்தால் எப்படிக் கூடி பணியாற்றுவது, கூறுங்கள்? --செல்வா 02:45, 7 செப்டெம்பர் 2010 (UTC)

முக்கியமான வேண்டுகோள் அல்லது முன்வைப்பு[தொகு]

ஆலமரத்தடியில் பதிவாகும் உரையாடல்களை அவ்வப்பொழுது பரணில் இடுதல் சரியே. ஆனால் அவற்றை வெட்டியும் பிரித்தும் வெவ்வேறு விதமாக சேர்ப்பது கூடாது. ஏனெனில் இவை காலவரிசைப்படி, அதற்கான சூழல்களுடன் நிகழ்ந்த உரையாடல்கள். இவை ஒரு வகையான வரலாற்றுப் பதிவுகள். சில நேரங்களில் சில உரையாடலின் சில பகுதிகள் கருத்துத் தொடர்ச்சிக்காக வேறோர் இடத்தில் இருந்தால் நன்றாக் இருக்கும் என்று யாரேனும் நினைத்தால், அப்பகுதிகளை ஒற்றி (படியெடுத்து, copy செய்து, வெட்டி அல்ல), தேவையான இடத்தில் இடலாம்; அப்படி இட்டாலும் இன்ன பகுதி ஒற்றி எடுக்கபட்டு பிறிதோர் இடத்தில் இடப்பட்டுள்ளது என்ற குறிப்பை எடுத்த இடத்தில் விடுதலும், சேர்த்த இடத்தில் இன்ன இடத்தில் இருந்து ஒற்றி எடுத்து இங்கு இடப்பட்டுளது என்ற குறிப்பும் இடுதல் வேண்டும். இது முறையான செய்கை. இவ்வேண்டுகோளுக்கான காரணம் அண்மையிலும் முன்னர் சில நேரங்களிலும் இப்படிச் செய்யாததால் ஏற்பட்ட குழப்படிகளே. --செல்வா 15:42, 5 செப்டெம்பர் 2010 (UTC)

 • dado2வில் கேட்டுக் கொண்டுள்ள படி சரியான முறையில் விரவிக்கிடக்கும் கருத்துக்களை ஒருங்கிணைப்பு செய்தால், இது போன்ற தவறுகள் வராது. அங்கு கேட்டுக் கொள்ளபடி இணையக் காத்திருக்கிறேன்.கொடி பற்றி கூறப்பட்டுள்ள விரவிக்கிடக்கும் கருத்துக்களை ஒருங்கிணைத்தால் அது பிறருக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கும். --த*உழவன் 01:52, 7 செப்டெம்பர் 2010 (UTC)
  • மேலே நான் குறிப்பிட்டவை பொதுக் கொள்கை சார்ந்த ஒன்று. வெட்டிப் பிரித்து இடமாற்றம் செய்தல் கூடாது (என்னும் கொள்கை), அப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் ஒற்றி வேண்டிய இடத்தில் ஒட்டி கருத்துத் தொடர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு செய்யலாம் (அப்பொழுது எடுத்த இடம், இடும் இடம் இவை குறிக்கப்பெறல் வேண்டும் (கொள்கை அளவில்). இவை என் தனி விருப்பு அல்ல, பொதுநலம் கருதி கொள்கையாக ஏற்கப் பரிந்துரை, முன்வைப்பு. அண்மையில் நிகழ்ந்தவாறு வெட்டிப் பிரித்து பல இடங்களில் இட்டதால் எது எங்கு போயிற்று என்ன ஆயிற்று என்று ஒன்றும் விளங்கவில்லை. எனவே அதனைக் குறிப்பிட்டேன். அது இந்த முன்மொழிவுக்கு உந்துகோலாக அமைந்தது. --செல்வா 02:07, 7 செப்டெம்பர் 2010 (UTC)

வேண்டிய பக்கங்கள்[தொகு]

பின்வரும் தரவுகள் இடைமாற்றைக் கொண்டுள்ளன, தரவுகள் கடைசியாக 10:51, அக்டோபர் 22, 2009 இல் இற்றைப்படுத்தப்பட்டன.
இப்பக்கத்துக்கான இற்றைப்படுத்தல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. இங்கே உள்ளத் தரவுகள் தற்சமயம் இற்றைப்படுத்தப்படமாட்டாது.


தகவலுழனுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் வணக்கம். இந்த வேண்டிய பக்கங்கள் பகுதி (மேலே குறிப்பிட்டச் செய்தியை காணவும்)கடந்த ஒரு வருட காலமாக நிகழ்வுநிலை (இற்றைப்) படுத்தாமல் இருக்கிறது. அதில் எந்த மாற்றம் செய்தாலும் --- அழித்தல் கோடுகள் தவிர மற்ற மாற்றங்கள் தெரிவதில்லை. மற்றும் தற்போதய நிலை தெரிவதில்லை. ஆகவே இப்பகுதியை நிகழ்நிலைபடுத்த வேண்டுகிறேன். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:13, 6 செப்டெம்பர் 2010 (UTC)

 • அண்மைய மாற்றங்கள் பக்கத்திலுள்ள எழுத்துப்பிழையினை (காண்க:கடைசி 50 | 100 | 250 | 500 மற்றங்களைக் காட்டு; ) பழ.கந்தசாமி குறிப்பிட்டிருந்தார்.இரவியிடம் கூறியுள்ளேன்.செய்கிறேன் என்று கூறினார்.திரும்பவும் ஞாபகப் படுத்த வேண்டும். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை? ஒரு வேளை இதில் கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.--த*உழவன் 01:47, 7 செப்டெம்பர் 2010 (UTC)
  • அண்மைய மாற்றங்கள் பக்கத்திலுள்ள மேற்குறிப்பிட்ட எழுத்துப்பிழையைத் திருத்தியுள்ளேன் பார்க்கவும். இவ்வாறான எழுத்துப் பிழைகளை "சிறப்புப் பக்கங்கள்" பகுதியில் "அனைத்து முறைமைகள் அட்டவணை" பக்கத்துக்குச் சென்று திருத்தலாம். --Mayooranathan 18:43, 8 செப்டெம்பர் 2010 (UTC)

பிரான்சியச் சொற்களின் பகுப்புகள்[தொகு]

பிரெஞ்சு மொழி என்னும் பகுப்பைப் பிரான்சியம் என்னும் பகுப்பாக மாற்றலாமா? அதன் உள்பகுப்புகளையும் மாற்றலாமா? --செல்வா 17:49, 8 செப்டெம்பர் 2010 (UTC)

 • பிரான்சியம் என்பது தமிழ் முறைக்கு ஒத்துவரும் என்பது என் கருத்து.--பவுல்-Paul 18:55, 8 செப்டெம்பர் 2010 (UTC)
  • கருத்துக்கு நன்றி பவுல். papillon என்னும் பக்கத்தில் உள்ளது போல பல மொழிகளிலும் செய்ய வேண்டியுள்ளது. ஒரு மொழி, அதனுள் அதன் பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், வினையடைகள் (அல்லது வினை உரிச்சொல்), பெயரடைகள் (அல்லது பெயர் உரிச்சொல்), இடைச்சொற்கள்... முதலான வருதல் வேண்டும். அவற்றுக்கு இணையாக பிற பகுப்புகளையும் சேர்க்கலாம். பிரான்சியம்-எண்ணுப்பெயர்கள், பிரான்சியம்-உடலுறுப்புப் பெயர்கள், பிரான்சியம்-ஆட்சிமொழிச்சொற்கள், பிரான்சியம்-மருததுவச் சொற்கள் என்று, ஒன்றன் கீழ் ஒன்றாக இல்லாமல், கூடுதல் பகுப்புகளாகவும் செய்ய வேண்டியிருக்கலாம். ஆகவே மொழியின் பெயரை சீராக எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி எழுதலாம். மாற்றுப்பெயர்கள் இட்டுத் தேடினாலும் கிடைக்கும் வசதியும் இருக்கும். --செல்வா 19:18, 8 செப்டெம்பர் 2010 (UTC)
 • தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு பயன்படுத்துகின்றனர்? பிரான்சியம் என்று குறிப்பிடுவது பற்றி நீங்கள் இருவரும் முன்பு உரையாடியதாக ஞாபகம். அது எங்கே என மறந்துவிட்டது. பழ.கந்தசாமி 19:27, 8 செப்டெம்பர் 2010 (UTC)
 • பழ.கந்தசாமி, பேச்சு:பிரான்சியம் என்னும் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் இப்பொழுது பல இடங்களில் பிரான்சியம் என்னும் சொல் பயன்பாடில் உள்ளது (ஆனால் பிரெஞ்சு என்பதும் பயன்பாட்டில் உள்ளது). எல்லா மொழிகளுக்கும் ஒரே சீராக பவுல் வடித்தது போல வழங்குவது நல்லது. இவற்றை சீர்தரமாக எல்லா இடத்திலும் பயன்படுத்துவது நல்லது. தேவையான இடங்களில் வழிமாற்றும், பிறைக்குறிகளுக்குள் பிற வழக்கங்களையும் குறித்து வரலாம்). பிரான்சு என்று நாட்டின் பெயரைக் குறிக்கும்மொழுது பிரான்சு மொழி என்றோ பிரான்சியம் என்றோ குறிப்பது முறையானதாகும். --செல்வா 19:54, 8 செப்டெம்பர் 2010 (UTC)
 • வழக்கில் இருந்தால், சீரான பயன்பாட்டுக்காகப் பிரான்சியம் என்று எழுதலாம் என்றே எனக்கும் தோன்றுகிறது, விக்கிப்பீடியாவில் இதற்கு மாறுபட்ட கருத்துகள் வந்தனவா? பழ.கந்தசாமி 20:12, 8 செப்டெம்பர் 2010 (UTC)
 • விக்கிப்பீடியாவில் எதிர்க்கருத்துகள் ஏதும் வந்ததாக நினைவில்லை. நற்கீரன், மயூரநாதன், இரவி ஆகியோர் இங்கும் இருப்பதால், அவர்களையும் கேட்டுப் பார்க்கலாம் (அவர்களுக்கு ஏதாவது நினைவிருக்கின்றதா என்று). --செல்வா 20:43, 8 செப்டெம்பர் 2010 (UTC)

மாதங்களின் பெயர்கள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் கருத்துக்கணிப்பு செய்து மாதங்களின் பெயர்கள் சீராக தமிழ் எழுத்துகளில் மாற்றப்பட்டுள்ளன. அண்மையில் தமிழ் இணைய மாநாட்டிலும் இன்னும் எத்தனையோ இடங்களிலும் தமிழ் முறைப்படி மாதங்களின் பெயர்களை சனவரி, சூன், சூலை, ஆகத்து, திசம்பர் என்று எழுதுகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கருத்துக் கணிப்பு செய்தது போலவே, ஒழுங்கு நோக்கி எளிமையாக சனவரி, சூன், சூலை, ஆகத்து, திசம்பர் ஆகிய மாதங்களின் பெயர்களை மாற்றலாமா? தமிழ் விக்கிப்பீடியாவில் சென்று அங்கு ஏதேனும் ஒரு பக்கத்தின் வரலாற்றைப் பாருங்கள், அங்கே மேலே உள்ள மாதங்களின் பெயர்கள் எவ்வாறு தெரிகின்றன என்று பாருங்கள். இங்கே விக்சனரியிலும் அப்படிச் செய்வது சீராக இருக்கும் என்பது என் கருத்து. (ஆனால் கையொப்பம் இடும் இடங்களில் இன்னமும் ஏனோ மாற்றம் தென்படவில்லை. ). --செல்வா 18:29, 8 செப்டெம்பர் 2010 (UTC)

கொடி பற்றி[தொகு]

வார்ப்புரு_பேச்சு:=பிரா= என்னும் பக்கத்தில் தகவலுழவன் குறிப்பிட்டுள்ள கருத்தைப் பார்க்க வேண்டுகிறேன். அங்கே நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதியை இங்கும் இடுகின்றேன், ஏனெனில் அது பொதுவானது (என் மறுமொழியை ஒற்றி இங்கு இடுகின்றேன், அங்கும் அது உள்ளது).

எனக்கும் ஒரு கொடியுடன் வருவதே அழகாகத் தெரிகின்றது.அப்படியே மிஞ்சிப் போனாலும் 2-3 உக்கு மிகாமல் இருந்தால் அழகாக இருக்கும். இது மொழியைக் குறிக்கவும், மொழிப்பட்டையில் மொழியின் பெயர் சற்று விலகி நின்று அறிவிக்கவும் ஏதுவாக இருக்குமாறு அமைத்தது மட்டுமல்லாமல், சிறியதாக கொடியின் நிறம் தெரிவது ஒரு வகையான ஈர்ப்பும் உண்டாக்கி பக்கத்துக்குச் சிறிது அழகும் சேர்க்கின்றது. தமிழ் தவிர்த்த இந்தி முதலான மற்ற எல்லா இந்திய மொழிகளுக்கும் ஒரு கொடியோ 2-3 கொடியோ இட்டால் போதும். அல்லது இந்திக்கு இந்தி பேசும் வட இந்தியப் பகுதியை சிவப்பு நிறத்திலோ, பச்சை, நீல நிறத்திலோ ஒரு வரைபடத்தில் தீட்டி அப்படத்தைச் சேர்க்கலாம். ஆங்கிலத்துக்கும், ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய இரண்டு நாட்டுக்கொடிகள் மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும் (அல்லது கனடாவையும் சேர்த்துக்கொள்ள்லாம்). உச்ச எல்லையாக மூன்று கொடிகளுக்கு மேல் இல்லாமல் இருந்தால் நல்லது. கொரிய மொழிக்கு இரண்டு நாட்டுக்கொடியும் இடுவது அடித்தேவை. இப்படியே தமிழுக்கும், தொன்றுதொட்டு இலங்கையும் தமிழர்களின் தாயகம். தமிழுக்கு இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய மூன்று கொடிகள் இடலாம். இதெல்லாம் பயனர்கள் கூடி முடிவு செய்ய வேண்டியது. மொழிக்கென ஒரு பட்டையும் வார்ப்புருவும் இருந்துவிட்டால், அதனை தக்கவாறு எப்பொழுதும் செப்பம் செய்து கொள்ளலாம். papillon என்னும் பிரான்சியச் சொல் போல நாளடைவில் மிகப்பல பிற மொழிச்சொற்களுக்கும் தமிழில் பொருளும், தக்க படங்களும் அமைத்து வரைய முடிந்தால் சிறப்பாக இருக்கும்.--செல்வா 13:02, 10 செப்டெம்பர் 2010 (UTC)
 • மறுபதிவினைத் தவிருங்கள். அங்ஙனம் கொடுக்கும் போது, தொடர்ந்து நடக்கும் உரையாடல்களைக் காணநிலை ஏற்படும். தொடுப்பினை மட்டும் அவசியமென்றால் கொடுங்கள். நன்றி. வணக்கம்.--த*உழவன் 01:26, 11 செப்டெம்பர் 2010 (UTC)

Fundraising 2010: Beat Jimmy Challenge[தொகு]

The Fundraising Committee is issuing all interested community members a challenge: we want you to beat Jimmy. The appeal from Jimmy Wales and the corresponding banner have been tested head-to-head with other successful banners, and the results are clear: it's our best performing message... by a lot. This year we have a lofty fundraising goal; we need all of our banners to bring in donations like the Jimmy Appeal, but no one wants to keep the Jimmy banner up for two months. We want to run donor quotes, and other wonderful ideas, but we have to have banners that work as well as or better than the Jimmy appeal.

We've just released the highlights from a donor focus group, and the results of our donor survey. With one month to the launch of the fundraiser, the messages we test must be driven by data from our tests and surveys - we can no longer rely on instinct alone.

We've redesigned our fundraising meta pages with the Jimmy challenge; check out the survey results and propose/discuss banners that reflect these findings. Add the banners you think will 'beat Jimmy' here to be tested Tuesday October 12 against Jimmy. -Dgultekin 00:20, 7 அக்டோபர் 2010 (UTC)

Signpost coverage[தொகு]

த இ. ப வின் சொற்களைப் பதிவேற்றுவது பற்றி சிறு குறிப்பு (எங்கு, எப்படி, எவ்வளவு) போன்ற தகவலகளை தந்தால், விக்கிபீடியா signpost இல் போட பரிந்துரைக்கிறேன். இது பற்றி ஊடகங்களில் வந்திருந்தால் அதையும் கொடுங்கள்.--Sodabottle 19:32, 19 அக்டோபர் 2010 (UTC)

பதிவேற்றம் முடிவடைந்த பின் முறைப்படியான முழுமையான அறிவிப்பை இடலாம் என நினைக்கிறேன்--ரவி 21:12, 19 அக்டோபர் 2010 (UTC)

விக்கி மாரத்தான்[தொகு]

பார்க்க: விக்கி மாரத்தான். இதே போன்ற ஒரு திட்டத்தை அதே நாளில் தமிழ் விக்சனரியிலும் செய்யலாம். தமிழ் விக்சனரி ஆர்வலர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் வந்தும் உதவிகள் செய்யலாம் :) தமிழ் விக்கி சமூகத்தின் ஒருங்கிணைந்த வலுவை நாமே உணர, இது ஒரு நல்ல வாய்ப்பு--ரவி 18:24, 21 அக்டோபர் 2010 (UTC)

 • போட்டி கட்டுரைகளைப் பதிவேற்றும் சிறந்த பணி.நானும் இணைவேன். ஒரு குறிப்பிட்ட நாளைத் (நவம்பர்-14,2010) தேர்ந்தெடுத்தக் காரணத்தை அறிய ஆவல். --த*உழவன் 23:23, 21 அக்டோபர் 2010 (UTC)

ஒவ்வொரு மாதம் இரண்டாம் ஞாயிறும் பெங்களூரில் விக்கி சந்திப்புகள் நடப்பது வழக்கம். இந்த முறை அதே நாளில் சென்னை உட்பட பல இந்திய நகரங்களிலும் விக்கி சந்திப்புகள் நடத்த முயன்று வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை என்றால் பலரும் பங்கு கொள்ளலாம். இந்த நாளில் உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்று இந்த முயற்சி. சந்திப்புக்கு வர இயலாதவர்கள் தத்தம் இடங்களில் இருந்தும் இதில் கலந்து கொள்ளலாமே என்று தோன்றியது.--ரவி 04:59, 22 அக்டோபர் 2010 (UTC)


பின் இணைப்பு பட்டியல்[தொகு]

விக்சனரி முழுதும் பயன்படுத்தும் அடிப்படை சொற்களுக்கான பின் இணைப்புகளுக்கு ஆங்கில விக்சனரியில் பக்கம் உள்ளது. அதுபோல் நாமும் தொகுக்கலாம். en:Appendix:Glossary. -- மாகிர் 07:07, 11 நவம்பர் 2010 (UTC)

செய்வோம்.தொகுக்கத்துவங்குகள். உங்களுடன் இணைகிறேன்.--த*உழவன் 04:46, 12 நவம்பர் 2010 (UTC)

தமிழ் விக்சனரியில் எத்தனை மொழிகள் உள்ளன?[தொகு]

தமிழ் விக்சனரியில் தமிழ், ஆங்கிலம், உருசியம் முதலாக எத்தனை மொழிகளில் சொற்கள் உள்ளன? ஒவ்வொரு மொழியிலும் எத்தனைச் சொற்கள் எனத் தோராயமாக குறிப்பிட இயலுமா? நன்றி--ரவி 07:55, 11 நவம்பர் 2010 (UTC)

பெரும்பான்மையானச் சொற்கள் பெயர்ச்சொற்களே. முறையான கணக்கு இதுவரை எடுக்கப்படவில்லை. பகுப்பு:பெயர்ச்சொற்கள் என்பதில் எண்ணிக்கையைக் காணலாம்.--த*உழவன் 04:46, 12 நவம்பர் 2010 (UTC)

நோர்வே மொழியும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.--கலை 00:18, 13 நவம்பர் 2010 (UTC)

India newsletter coverage[தொகு]

ஆங்கில விக்கி இந்தியத் திட்ட செய்தி மடலில் த. இ. ப சொற்கள் சேர்த்ததைப் பற்றிய சிறு குறிப்பொன்றை இணைத்துள்ளேன்--Sodabottle 08:55, 16 நவம்பர் 2010 (UTC)

 • கண்டேன்.மகிழ்ந்தேன்--த*உழவன் 10:44, 16 நவம்பர் 2010 (UTC)

எழுத்துப் பிழைகள்[தொகு]

விக்சனரியில் சில சொற்களுக்குப் பொருள் தேடி வரும்போது, சில சொற்கள் எழுத்துப் பிழைகளுடன் இருப்பதைக் கண்டேன். எழுத்துப் பிழைகள் இருப்பதனால் சில சமயம் சரியான கருத்து புரியாமலோ, அல்லது கருத்து தெளிவின்றியோ, அல்லது தவறான கருத்தை கொடுப்பதாகவோ உள்ளது. தட்டச்சு செய்யும்போது எழுத்துப் பிழைகள் வருவது இயல்புதான் எனினும், விக்சனரியாதலால், எழுத்துப் பிழை வராமல் தவிர்ப்பதில் அதிக கவனம் எடுத்தோமானால் நல்லது என்று கருதுகின்றேன்.--கலை 00:58, 27 நவம்பர் 2010 (UTC)

 • உங்களது கருத்தினை நானும் ஏற்கிறேன். நான் அறிந்தவரை இப்பிழைகளில் பெரும்பாலானவை முதன்முதலில் தானியங்கி செயல்பட்டபோது ஏற்பட்டது. அப்போது ஒருங்குறியில்லா எழுத்துருவை, ஒருங்குறிக்கு மாற்றியும் பதிவேற்றத்தை சுந்தர்தானியங்கி செய்தது. மேலும் பொருட்பிழையையும் த.இ.க. சொற்கள் பெற்றுள்ளது.எழுத்துப்பிழைகளும் உள்ளது. செந்தியும், செல்வாவும் மருத்துவம் சார்ந்தவைகளை, அவ்வப்பொழுது கலந்தாலோசித்து மாற்றுகின்றனர். நீங்களும், நானும் பிறரும் பகுப்பு:திருத்த வேண்டியன என்ற பகுப்பினை இட்டால், பின்னர் அது நேரம் கிடைக்கும் போது மாற்றுவதற்கு வசதியாக இருக்கும். எனவே, அத்தகைய பகுப்பிட கேட்டுக்கொள்கிறேன்.--த*உழவன் 01:21, 27 நவம்பர் 2010 (UTC)
இந்தக் கருத்தை இடும்போதே இது தானியங்கியினால் வரும் வழுவாக இருக்கலாமோ என்று எண்ணினேன். எனது கருத்தை பிழை கண்டு பிடிப்பதாக தவறாக யாரும் புரிந்து கொள்வார்களோ என்று யோசனையுடனேயே எழுதினேன். அவ்வாறில்லாமல், சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் தகவலுழவன். நானும் இனிமேல் அவ்வாறு தவறுகளைக் காணும்போது அவை சிறிய எழுத்துப் பிழைகளாய் இருந்தால் திருத்தியும், கலந்துரையாடி முடிவெடுக்கப்பட வேண்டியவையாக இருந்தால், நீங்கள் கொடுத்திருக்கும் பகுப்பிலும் இடுகின்றேன். நன்றி.--கலை 01:04, 28 நவம்பர் 2010 (UTC)
 • இங்கு நான் சில முறைகளைத் தவறாக புரிந்து கொண்டு செயல்பட்டபோது, என்னை மாற்றியவர் பலர். ஏறத்தாழ அனைவருமே எனலாம். எனவே, தயக்கமின்றி கருத்துக்களை முன்மொழியுங்கள். Homo sapiens என்பதில், sapiens என்பதன் முழுப்பொருளையுணர்வோம். தயக்கம் தளர்வோம். இனி இணைந்து இற்றைப்படுத்துவோம். ஓங்குக தமிழ் வளம். வணக்கம்.--த*உழவன் 01:49, 28 நவம்பர் 2010 (UTC)


தமிழ்ப்பக்கங்களில் {{=தமி=}} என்னும் வார்ப்புரு[தொகு]

சமுதாய வலைவாசலில் உள்ள படிவங்கள் மூலம் சொற்களை உள்ளிடும் பக்கத்தில் தமிழ்ப்பக்கங்களுக்கான வார்ப்புருவில் {{=தமி=}} என்னும் வார்ப்புருவை இணைத்துள்ளேன். யாருக்கும் மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்கவும். எல்லா மொழிகளுக்கும் சீரான வடிவமைப்பு இருத்தல் நல்லது என்னும் நோக்கிலேயே இதனைச் சேர்த்துள்ளேன்.--செல்வா 21:04, 9 டிசம்பர் 2010 (UTC)

 • ஒன்றிற்கு மேற்பட்ட நிறப்பட்டைகளைப் பயன்படுத்துகிறோம். அந்நிறப்பட்டைகள் அனைத்தும் பக்கத்தின் இறுதி வரை இருப்பதை விட, கவனிப்புப் பட்டியலில் சேர் என்பதற்குரிய நட்சத்திரக்குறியீடுவரை இருப்பின் நன்றாக இருக்கும். ஏனெனில், படங்களை இட்டபிறகு சில பட்டைகள் முழுவதும் தெரிகிறது. சில பட்டைகள் அரைகுறையாகத் தெரிகிறது. சில பட்டைகள் படத்திற்கு முன்னே நின்று விடுகிறது.ஒரு சொல்லின் பட்டைகள், படங்கள் இட்ட பிறகும் சீராக ஒரே அளவில் இருந்தால் சிறப்பு.(எ. கா.) babbler, large grey , dado2, யானை--த*உழவன் 05:02, 12 டிசம்பர் 2010 (UTC)

முதற் பக்கத்தில் தினம் ஒரு சொல் பெட்டி சேர்க்கலாமா?[தொகு]

முதற்பக்கத்தில் 'தினம் ஒரு சொல்' என ஒரு பெட்டியை வைக்கலாமா?. இதில் குழந்தைகளுக்கு அல்லது அடிப்படையான சொற்களை சேர்க்கலாம். படங்கள் ஒலிதம் சேர்க்க தூண்டலாம். பரிந்துரை பக்கமும் சேர்க்கலாம். உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும். --மாகிர்

 • 'தினம் ஒரு சொல்' பெட்டி வைப்பதில் பலருக்கும் உடன்பாடு உள்ளது என்பதனை பல கலந்துரையாடலில் கவனித்திருக்கிறேன். எனக்கும் உடன்பாடே. உங்களுக்கு அவ்வுரையாடல்கள் தேவையெனின் எடுத்துத் தருகிறேன். நீங்கள் திரும்ப வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.எதிர்நோக்கும்.--த*உழவன் 16:43, 11 டிசம்பர் 2010 (UTC)
சேர்த்திருக்கிறேன். வார்ப்புரு:தினம் ஒரு சொல்/தற்போதையமாதம் இன்றையதேதி பக்கத்திற்கு சென்று {{wotd|சொல்|பெயர்ச்சொல்|பொருள் ஒன்றுக்கும் மேல் என்றால் #|தற்போதைய மாதம்|இன்றையதேதி}} என்று கொடுத்தால் போதும் -- மாகிர் 18:25, 11 டிசம்பர் 2010 (UTC)
 • மாகிர், இவ்வாறு ஒன்றைச் சேர்க்கவேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். நன்றி. பழ.கந்தசாமி 18:39, 11 டிசம்பர் 2010 (UTC)
நாள்தோறும் ஒன்று சேர்க்க இயலும் அல்லது காட்சிப்படுத்த முடியும் என்றால் மிக அருமையாகவே இருக்கும். ஆனால் முதலில் ஒரு கிழமைக்கு ஒன்று என்று ஆண்டுக்கு 52 சொற்களைக் காட்சிப் படுத்துவோம். அவை ஒவ்வொன்றும் தரமானதாக இருக்கட்டும். ஆர்வத்தைத் தூண்டுவனவாக இருக்கட்டும். பல துறைகளைச் சேர்ந்தவையாக இருக்கட்டும். ஒவ்வொரு நாளும் இரண்டு சொற்களைக் காட்சிப்படுத்தலாம். ஒருசொல் எப்பொழுதும் தமிழாகவும், மற்றது பிறமொழிச் சொல்லாகவும் இருக்கலாம். பிறமொழிச்சொற்கள் வெவ்வேறு மொழிக்கு மாறிக்கொண்டு இருக்கலாம் (பிரான்சியம், ஆங்கிலம், உருசியம், எசுப்பானியம், கிசுவாகிலி... இப்படி). ஓரள்வுக்கு பட்டறிவு பெற்ற பின்னர் நாள்தோறும் இரண்டு சொற்களாகவும் செய்யலாம். சொற்களைப் போலவே "உங்களுக்குத் தெரியுமா" என்பது போல சொற்களைப் பற்றிய சுவையான தகவல்களையும் தரலாம். எடுத்துக்காட்டாக அணுவின் துகளின் உட்கூறுகளைக் குறிக்கும் quark என்னும் சொல் வாத்தின் குரலாகிய குவாக் என்னும் சொல்லில் இருந்து பெற்றாதாம் ("Gell-Mann originally named the quark after the sound made by ducks"). இப்படி ஏதேனும் சுவையான செய்திகளைச் சுட்டலாம். எது நீளமான சொல், யானைக்கு இத்தனை தமிழ்ச்சொற்கள், வைரத்தின் குற்றங்கள் இவை என்று ஏதேனும் சுவைபடச் சொல்லலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட விக்சனரியின் முகப்புப் பக்கம் அழகாக நேர்த்தியாகச் செய்வது முகனையானது (முகனை = முதன்மை, தலைமை, முதல், இன்றையமையாமை).--செல்வா 20:00, 11 டிசம்பர் 2010 (UTC)

செல்வா நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் 52 என்று சுறுக்கிக்கொள்ளவேண்டாம். 365 நாட்களுக்கும் தேதிவாரியாக ஒவ்வொன்றாய் ஆலோசித்து பட்டியலிட்டு உருவாக்கலாம். விக்சனரி:தினம் ஒரு சொல்/முன்மொழிவுகள் பக்கத்தில் பட்டியலை தொகுக்கலாம். முதற் பக்கத்தில் சொற்களை காண்பிப்பதால் பலர் கவனம் செலுத்தி செம்மைப்படுத்த முடியும். முதலில் இந்த மாதத்திற்கான பட்டியலை உருவாக்குவோம். -- மாகிர் 11:03, 13 டிசம்பர் 2010 (UTC)

ஒவ்வொரு நாளும் ஒரு சொல்லை இட முடிந்தால் அதுவே மிக உவப்பான செய்தி. செயற்படுத்துவதில் மிகுந்த விழிப்பு இருக்க வேண்டுமே என்றே கூறினேன். மேலும், முகப்புப் பக்கத்தை இரௌ பத்திகளாகப் பிரித்து, தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதைப்போல் செய்தால், வலப்புற பத்தியில், இந்த நாள் ஒரு சொல் என்னும் பகுதியை நன்றாகக் காட்சிப்படுத்த முடியும். இடாய்ச்சு மொழி விக்கியில் செய்திருப்பதையும் பார்க்கலாம்.--செல்வா 17:25, 14 டிசம்பர் 2010 (UTC)

விக்சனரி மாதங்கள்[தொகு]

தவியில் மாதங்கள் திசம்பர், சனவரி என்றுள்ளது. இங்கு டிசம்பர், ஜனவரி என்று வருகிறது. மாற்றம் செய்ய வேண்டுகிறேன். -- மாகிர் 10:35, 13 டிசம்பர் 2010 (UTC)

இதைச் செய்யலாம் மாகிர். செல்வோம். நன்றி.--செல்வா 14:44, 13 டிசம்பர் 2010 (UTC)
செய்தாயிற்று. --செல்வா 12:22, 5 சனவரி 2011 (UTC)

தினம் ஒரு சொல் அறிவிப்பு செய்யவும்[தொகு]

தினம் ஒரு சொல் பற்றி sitenoticeல் அறிவிப்பு செய்யலாமே? -- மாகிர் 11:22, 13 டிசம்பர் 2010 (UTC)

நாளொருசொல் என்று ஒரு தலைப்பு போல் இருப்பது நல்லது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சொல்லை அறிந்து கொள்வோம், அல்லது தெரிந்த சொல்லின் புதிய பொருளையோ, புதிய குறிப்பையோ அறிந்துகொள்வோம் என்பது போன்ற விளக்கம் தரலாம். ஒவ்வொரு முறையும் ஆங்கிலமாக இல்லாமல் 90% தமிழ்ச்சொற்களாகவும் 10% ஆங்கிலம் உட்பட பிறமொழிச்சொற்களாகவும் இருக்கலாம். பிற விக்கிகளில் அவர்கள் தங்கள் மொழிச்சொற்களை மட்டும்தான் காட்சிப்படுத்துகின்றார்கள் என நினைக்கின்றேன் (நான் எல்லா மொழிகளின் எல்லாப் பதிவுகளையும் பார்க்கவில்லை). --செல்வா 14:43, 13 டிசம்பர் 2010 (UTC)
நாள் ஒரு சொல் என மாற்றப்பரிந்துரைக்கின்றேன். --செல்வா 17:22, 14 டிசம்பர் 2010 (UTC)
இப்பாரிந்துரையை செயல்படுத்தலாமா? யாருக்கேனும் மறுப்பு உள்ளதா? நாள் ஒரு சொல் என்று தலைப்பிடலாமே?--செல்வா 11:57, 17 டிசம்பர் 2010 (UTC)
 • செல்வா, மாகிர் ஆகியோருக்கு வணக்கம். தாங்கள் கூறியபடி, தினம் ஒரு சொல், நாள் ஒரு சொல் என்பதனை, ஒரு நாள் ஒரு சொல் --- என்று மாற்றியமைக்க எனது பரிந்துரை, ஆதரவுடன் வாழத்துக்கள். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:09, 18 டிசம்பர் 2010 (UTC)
ஓ! ஒரு நாள் ஒரு சொல் என்று மாற்றலாம். தின், தினம் (தினகரன் என்றால் கதிரவன், ஞாயிறு) என்பது வடமொழிச்சொல் என்பதால் மட்டும் மாற்றச்சொல்லவில்லை. தினம் என்றால் பொதுவாக பகலை மட்டும் குறிக்கும், ஆனால் நாள் என்றால் இரவு-பகல் சேர்ந்த ஒரு முழுநாளைக் குறிக்கும். திருச்சி பெரியண்ணன் சொன்னதுபோல ஒரு நாள் ஒரு சொல் என்று இப்பகுதியின் தலைப்பை மாற்றலாம். மேலும், ஒவ்வொரு நாளும் இடும் சொல் வெவ்வேறு துறையில் இருந்து வருவனவாகவும், ஓரளவுக்கு அதிகம் பழக்கம் இல்லாத சொல்லாகவும் இட வேண்டுகிறேன். எடுத்துக்காட்டாக ஐது என்றால் நெருக்கமின்மை, அடர்த்தி இன்மை. இது இலங்கையில் வழக்கில் உள்ளது. முகனை என்றால் முதன்மையானது, தலைமையானது. முக்கியம் என்பதற்கு ஈடான சொல். அகராதியில் உள்ளது (நான் ஆக்கிய சொல் அல்ல!!). முனைவர் இராமக்கிருட்டிணன் (இராம.கி ஐயா) முகன்மையானது என்று ஆள்கிறார்.நான் முகனையானது என்று ஆள்கிறேன். வல்லை வெளி என்று ஒரு வலைப்பதிவு கூட உள்ளது, வல்லை என்றால் அடர்ந்த காடு என்று இப்படிச் சிலருக்குப் புதியதாக இருக்ககூடிய சொற்களை தேர்ந்து இடுங்கள். நானும் இதில் விரைவில் பங்குகொண்டு சொற்களைச் சேர்க்கின்றேன்.--செல்வா 15:19, 21 டிசம்பர் 2010 (UTC)

dictionary in public domain[தொகு]

தகவலுக்காக en:Wiktionary:Webster. --மாகிர் 06:09, 16 டிசம்பர் 2010 (UTC)

 • தொடுப்பினைத் தந்தமைக்கு நன்றி மாகிர்!. --த*உழவன் 01:03, 27 டிசம்பர் 2010 (UTC)

முகப்பு பக்கத்தில் ஏதோ சிக்கல்[தொகு]

தமிழ் விக்கிபீடியாவில் வந்த அதே சிக்கல்!--சி. செந்தி 15:54, 20 டிசம்பர் 2010 (UTC)

தற்காலிகமாக சரி செய்துள்ளேன். ஓரிரு நாட்களில் நிரந்தரமாக சரியாகி விடும்--Sodabottle 16:47, 20 டிசம்பர் 2010 (UTC)