விக்சனரி:ஆலமரத்தடி/2011

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மாதங்களில் பெயர்கள்[தொகு]

விக்கிப்பீடியாவில் கருத்துக்கணிப்பு செய்து மாதங்களின் பெயர்களை சனவரி, சூன், சூலை, ஆகத்து, திசம்பர் போன்றவாறு மாற்றப்பட்டது. இங்கும் முன்னர் முன்மொழியப்பட்டது. விக்கிப்பீடியாவின் உறவுத்திட்டம் விக்சனரி என்பதால், ஒரே சீராக இருக்கும் பொருட்டு மாற்றியுள்ளேன். மறுப்புகள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும். --செல்வா 05:17, 5 சனவரி 2011 (UTC)

பெயர் மாற்றம், கலை என்பதிலிருந்து Kalaiarasy[தொகு]

என்னுடைய பயனர் பெயரை நான் கலை என்பதிலிருந்து, Kalaiarasy என்பதற்கு மாற்ற விரும்பிக் கேட்டிருந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில் சுந்தர் மாற்றிக் கொடுத்திருந்தார். அந்தப் பெயரைக் கொண்டு தமிழ் விக்சனரியிலும் உட்புக முடிந்தமையால், அங்கேயும் தானாகவே மாறி விட்டதாக எண்ணினேன். எனவே எனது 'கலை' பயனர் பக்கத்தில் இருந்த தகவல்களையும் 'Kalaiarasy' பயனர் பக்கத்துக்கு நகர்த்தி விட்டேன். ஆனால் தற்போது தமிழ் விக்சனரியிலும் முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என அறிகின்றேன். தயவுசெய்து அதனை செய்து தரும்படி வேண்டுகின்றேன்.
தமிழ் விக்கிப்பீடியாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், நான் புதிய பெயரில் செய்த தொகுப்புக்கள் சரிவர பதிவாகவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் பெயர் மாற்றப்பட்டு, விக்கியின் ஏனைய திட்டங்களில் மாற்றப்படாமையாலேயே இவ்வாறான பிரச்சனை இருப்பதாக அறிகின்றேன். எனவே கூடிய விரைவில் இதனை செய்து தரும்படி வேண்டுகின்றேன். நன்றி.--கலை 21:49, 16 மார்ச் 2011 (UTC)

பெயர் மாற்றப்பட்டுள்ளது. விவரங்களை உங்கள் பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளேன். நன்றி--ரவி 11:51, 21 மார்ச் 2011 (UTC)

சொற்களம் போட்டி[தொகு]

வரும் சனிக்கிழமை மார்ச் 19, 2011 அன்று தமிழ் சிறுவர் நாள் ஒன்று இங்குள்ள தமிழ் பாடசாலைகள் (அறிவகம் - http://www.arivakam.org/) மற்றும் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்படுகிறது. அன்று ஆயிரக் கணக்கான மாணவர்கள், சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் எதிர் பார்க்கப்படுகிறார்கள். இது சற்று "கோளிக்கை" நோக்கிலான ஒர் ஏற்பாடே. எனினும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். தமிழ் விக்கிப்பீடியா/நூலகம்/தமிழ்க் கணிமை ஆகியவற்றுக்கு ஒரு கடை ஒதுக்கப்பட்டுள்ளது. முடிந்தால் நாம் போட்டிகள் சிலவற்றை ஒழுங்கு படுத்தினாலும் சிறப்பாக இருக்கும்.

வகையான வயதினர்: 5 கீழே, 9 கீழே, 13+ மேலே எனப் பிரிக்கலாம். (Tentative)

இரண்டு வகையான போட்டிகள்:

பொது அறிவுப் போட்டி: ஐந்து கேள்விகளுக்குப் பதில் செல்ல வேண்டும்? சொற் களப் போட்டி: ஐந்து சொற்களுக்கு ஆங்கிலம் -> தமிழ் அல்லது தமிழ் -> ஆங்கிலம் இணைச் சொல் தர வேண்டும்.

இதில் சிறு வயதினருக்கு (புகலிடச் சூழலில்) கேட்கக் கூடியவாறு ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு 30-50 சொற்கள் வரையில் பரிந்துரை செய்தால் மிக்க உதவியாக இருக்கும். அரைவாசி ஆங்கிலம்-> தமிழ், முகுதி தமிழ்->ஆங்கிலம்

--Natkeeran 01:33, 18 மார்ச் 2011 (UTC)

நக்கீரன்! சொற்களப் போட்டிக்கு சில சொற்களைத் தொகுத்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்கின்றேன். மிக இலகுவான சொற்களாக எடுத்து விட்டேனா என்று தெரியவில்லை. --கலை 00:21, 19 மார்ச் 2011 (UTC)

விக்சனரி:தினம் ஒரு சொல்[தொகு]

விக்சனரி:தினம் ஒரு சொல் வெறுமையாக இருப்பதேன்??? Yoodhaa 06:32, 6 ஏப்ரல் 2011 (UTC)

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இப்போது சரி செய்து விட்டேன்.--Sodabottle 07:11, 6 ஏப்ரல் 2011 (UTC)
கவனித்ததற்கு நன்றி. Yoodhaa 15:57, 6 ஏப்ரல் 2011 (UTC)

தினம் ஒரு சொல் (நாள் ஒரு சொல்) திட்டத்தில் பிறமொழிச்சொற்கள்[தொகு]

தினம் ஒரு சொல் (நாள் ஒரு சொல்) பகுதியில் இடப்படும் சொற்களில் ஏறத்தாழ எத்தனை விகிதம் தமிழ்ச்சொற்கள் எத்தனை சொற்கள் பிறமொழிச்சொற்கள் (ஆங்கிலம், அரபி, இந்தி..) என்பன போன்ற வரைமுறை ஏதும் உள்ளதா? கூடிய மட்டிலும் தமிழ்ச்சொற்களை முன்னிறுத்திக் காட்சிப்படுத்துவது சிறப்பாக இருக்கும். அனைத்தும் தமிழ்ச்சொற்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் மிகப்பெரும்பான்மையும் தமிழ்ச்சொற்களாக இருத்தல் நல்லது என்பது என் கருத்து.--செல்வா 22:55, 16 மே 2011 (UTC)

“தமிழ் சொற்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; பிற மொழிச்சொற்கள் தமிழில் விரிவான, பொருள், விளக்கங்களோடு இருந்தால் அவையும் காட்சி படுத்தப்படும்.” என்று திட்டப்பக்கத்தில் சேர்த்துள்ளேன். தற்போது மிகப்பெரும்பான்மை தமிழ் சொற்களே இடம் பெறுகின்றன. தற்போதைய தரவுகளின் படி ஐந்தில் அல்லது ஆறில் ஒரு சொல் ஆங்கிலச் சொல்லாக உள்ளது. (27/157)--Sodabottle 04:01, 17 மே 2011 (UTC)
நன்றி, ஆனால் ஆறில் ஒன்று என்பது மிகவும் அதிகம் என்று நினைக்கின்றேன்!!! அதுவும் tsunami, maverick போன்ற "சிறப்பு" வரலாறு உள்ள சொற்கள் பற்றி இருந்தால் நல்லது. அதே போல இடாய்ச்சு மொழியிலும் Schadenfreude போன்று ஏதேனும் ஒரு வகையில் தனித்தன்மை, தனிநிறம் தரும் சொற்களைக் காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும். உடல் பருமனாக (குண்டாக) இருப்பதைக் குறிக்க இடாய்ச்சு மொழியில் ஒரு சொல் உண்டு (அதன் பொருள் தன்னைச் சுற்றி நிறைய இடத்தை எடுத்துக்கொள்ளும் ஆள் என்று பொருள் படும்!!). அதேன் போல கல்விச்சிறப்பால் ஒருவரிடம் காணபப்டும் முக அழகு என்ப்தற்கு தனிச்சொல் உள்ளது இடாய்ச்சு மொழியில். Weltschmerz என்றால் உலகுசூழ் துன்பம் என்பது போன்ற பொருள் (welt என்றால் உலகம், schmerz என்றால் வலி, துன்பம்), அதே போல Lebensmüde என்றாலும் வாழ்வுக்களைப்பு என்று பொருள் (Lebens என்றால் வாழ்க்கை, müde என்றால் களைப்பு, அலுப்பு என்பது போன்ற பொருள்). இபப்டி ஏதேனும் ஒரு வகையில் "சிறப்பு" அல்லது வேற்றுமைப்படுத்திக் காட்டும் ஒரு சொல்லாக காட்சிபடுத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. 20:1 என்னும் வகையில் பிறமொழிச்சொற்களைக் காட்சிப்படுத்துவது பொருந்தும் என் கருத்து! மிக மிகப் பெரும்பாலும் தமிழ்ச்சொற்களைக் காட்சிபப்டுத்த வேண்டும். எத்தனையோ அருமையான சொற்கள் சரிவர அறியாமல் இருக்கின்றோம்! உகின் என்னும் சொல்லைக் கண்டு உவந்தேன்! --செல்வா 15:02, 17 மே 2011 (UTC)
செல்வா, இப்படிப்பட்ட ஆசை எனக்கும் உண்டு. எனினும், தினம் ஒரு சொல்லை தவறாமல் வழங்கிட முயலும்போது நேரமின்மை காரணமாக திடீரென எந்தச்சொல் நம் மனதில் தோன்றுகிறதோ அதை வழங்கிவிடுகிறோம். சிலசமயம் சொற்கள் அன்றைய செய்திகுறித்ததாக அமைகின்றன. அதுவும் ஒருவகையில் பொருத்தம் என்பதால். பழ.கந்தசாமி 15:43, 17 மே 2011 (UTC)

யாருக்கும் மாற்று கருத்து இல்லையெனில் செல்வா முன்வைத்துள்ள 20:1 தமிழ்ச்சொல்:வேற்றுமொழிச் சொல் என்ற விகிதத்தை அதிகாரப்பூர்வ வழிமுறையாக திட்டப்பக்கத்தில் இணைத்து விடுகிறேன்.--Sodabottle 04:41, 21 மே 2011 (UTC)

20:1 பரிந்துரை அதிகாரப்பூர்வ வழிமுறையாக திட்டப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 07:31, 25 மே 2011 (UTC)
அதாவது20தமிழ்சொற்கள்;ஒருஅயல்மொழிச்சொல் அப்படித்தானே? தினம் ஒரு சொல் வடிவமும், புதுச்சொல் வடிவமும் ஒன்று போல இருந்தால் நிறைய நேரம், புதுச்சொல் உருவாக்கத்திற்கும், தினம் ஒரு சொல்லுக்கும் கிடைக்கும் என்றே எண்ணுகிறேன். ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு வடிவம் என்பது நேரத்தினை விழுங்குகிறது. நாம் ஈடுபடும் நேரத்தில், அதிகப் பதிவுகளை உருவாக்க வேண்டும் என்றே நோக்கத்திலேயே இது பற்றி வினவுகிறேன். உங்களின் கருத்தென்ன? --08:07, 25 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
ஆம் 20தமிழ்சொற்கள்;ஒருஅயல்மொழிச்சொல் என்பது கொள்கையாக்கபபட்டுள்ளது. இந்த இரு வடிவங்களுள் அப்படியொன்றும் பெரிய மாற்றம் இல்லையே (என் பார்வையில்). படியெடுத்து போடுவது எளிதாகத்தான் உள்ளது. ஒரு வேளை நான் செய்து பழகிவிட்டதால் எளிதாகத் தோன்றுகிறதோ என்னவோ. சொல் வடிவத்திலிருந்து தினமொரு சொல் வடிவத்தை உருவாக்க எனக்கு சில நிமிடங்களே ஆகின்றன. (அப்படியே படியெடுத்து விடுகிறேன்)--சோடாபாட்டில்உரையாடுக 08:23, 25 மே 2011 (UTC)
 • மேலும், ஒரு சொல்லின் பக்கத்திலுள்ள அனைத்தையுமே தினம் ஒரு சொல் பகுதியில் சேர்க்க இடம் இருக்காது என்பதால் தினம் ஒரு சொல் வடிவம் சற்று மாறுபடும். பழ.கந்தசாமி 15:53, 25 மே 2011 (UTC)
 • ஆம். பழ.க சொல்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு படம் + சிறு சுருக்கமான விளக்கம் + மேலும் பார்க்க என்னும் அழைப்பு இருப்பது நல்லது.--செல்வா 16:38, 25 மே 2011 (UTC)

விக்சனரி, விக்கிப்பீடியா பற்றிய திண்ணைக் கட்டுரை[தொகு]

--Natkeeran 03:11, 9 சூன் 2011 (UTC)

5 ஜூன் 2011 அன்று திண்ணையில் வெளியானக் கட்டுரை, உரையாடல் வடிவில் அமைத்த சித்ரா சிவக்குமார், விக்கியின் தமிழ் திட்டங்களைப் பற்றி நன்கு அறிமுகம் செய்துள்ளார்.அக்கட்டுரை மகிழ்ச்சியளிக்கிறது.தொடுப்பிட்டமைக்கு மிக்க நன்றி.--00:18, 12 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தட்டெழுத்துப் பகுதி சீர்மை(வடிவமைப்புப் பகுதிக்குரியது)[தொகு]

சோ.பா! நீங்கள் செய்த மாற்றங்களினால் இப்பொழுது தட்டச்சு வசதியையும், புகுபதிகையையும் நேர்த்தியாக பயன்படுத்த முடிகிறது. நன்றி. முன்பு அடிக்கடி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு செல்லுமாறு, ஒன்றன் மேல் ஒன்றாக அவ்வசதிகள் இருந்தன. சீர்படுத்தியமைக்கு மீண்டும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.--14:43, 29 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Hotcat[தொகு]

மீடியாவிக்கி நிரல் மாற்றத்தால் ஹாட்கேட் வசதி தடைபட்டுள்ளது. அதனை மீண்டும் பெற பின் வரும் நிரல் துண்டினை உங்கள் தோல் கோப்பில் (vector.js or monobook.js) ஒட்டுங்கள்: நிரல் மாற்றம் ஒத்திப்போடப்பட்டுள்ளது. இப்போது தேவையில்லை. importScript('MediaWiki:Gadget-HotCat.js');

நிறப்பட்டை நீட்டம் (வடிவமைப்புப் பகுதிக்குரியது)[தொகு]

 • alimentary tract bacterial diseases இது போன்று பல படங்கள் இடும் பக்கங்களில், நிறப்பட்டைகள் வேறுபட்டு இருக்கின்றன. அப்பட்டைகள் சீராக ஒரே அளவில் இருப்பின் நன்றாக இருக்கும். மேலுள்ள தேடுபொறிச் சாளரம் வரை அப்பட்டைகள் இருப்பின், இது போன்ற சீரின்மை 90%பக்கங்களில் நீங்கும். உங்களின் கருத்தறிய ஆவல்.--த*உழவன் 01:09, 27 டிசம்பர் 2010 (UTC)
அப்படி படத்துக்கு இடம் விட்டு பட்டைகள் இருப்பது எனக்கு மிகச்சிறப்பாகத் தோன்றுகின்றது. எப்படி ஒரே அளவாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள் எனத் தெரியவில்லை. ஒரு முயற்சிப்பக்கத்தில் செய்து காட்டினால் ஒப்பிட்டுப் பார்த்து கருத்து அளிக்க முடியும். --செல்வா 05:22, 5 சனவரி 2011 (UTC)
 • பேச்சு:alimentary tract bacterial diseases சில முயற்சிகளைச் செய்துள்ளேன். அனைத்திலும், எப்பொழுதும் சீரானத் தோற்றம் உருவாக்குவதற்கான முயற்சியே இது.--தகவலுழவன் 08:07, 23 பெப்ரவரி 2011 (UTC)
[[1]] என்பது போல இருப்பது எனக்குக் குறையாகத் தெரியவில்லை. நிங்கள் காட்டிய பக்கத்தைப் பார்த்தேன். அது உங்களுக்குப் பிடித்திருந்தால், அப்படியே மாற்றுங்கள். என்னைப்பொருத்த அளவிலே தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. --செல்வா 15:50, 28 பெப்ரவரி 2011 (UTC)
 • தங்கள் கருத்துக்கு நன்றி. இப்போதைக்கு எந்த மாற்றத்தையும் விரும்பவில்லை. ஏனெனில் அதில் இன்னும் சில குறைகள் உள்ளன. பிறகு தெளிந்தால் சொல்கிறேன். வணக்கம்.--தகவலுழவன் 16:03, 28 பெப்ரவரி 2011 (UTC)

தவறான இணைப்பு அல்லது தொடுப்பு ( bad link என்பதற்கு அதுதானே!)[தொகு]

விக்சனரிக்கு வாழ்த்துக்கள். நான் விக்சனரியில் SLAP என்பதற்கு அர்த்தம் தேடினேன். அறை , அறை கொடு என்று பதில் கிடைத்து. நன்றி. ஆனால் அறை என்ற வார்த்தையில் ஒரு தொடர்பு (link) இருந்தது. அதை சொடிக்கினால் அறை அதாவது room என்ற பக்கத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறேன். ஏதும் தவறா? - நன்றி நரேஷ்.

சுட்டிக்காடியமைக்கு நன்றி நரேஷ். “அறை” என்னும் சொல்லுக்கு பயன்படும் இடம் பொருத்து இரு பொருள்கள் வரலாம் - slap and room. இப்போது இரண்டையும் அங்கு தெளிவாகத் தெரியும் படி மாற்றியமைத்துள்ளேன். --Sodabottle 14:07, 5 பெப்ரவரி 2011 (UTC)

தொனிகள்[தொகு]

 • சீன மொழியில் இடம்பெறும் தொனிக்களை நாம் எப்படி விக்கிக் குறிகள் கொண்டு தமிழுக்குச் செய்யலாம். எ.கா wǒ. --Natkeeran 00:39, 26 பெப்ரவரி 2011 (UTC)
  • செல்வாவின் இதுபோன்ற வழிமுறைகள் முதற்கட்டக் கற்றலில் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், கற்றலின் கேட்டல் நன்று என்ற அடிப்படையில், ஒலியை கேட்டலே சிறந்ததாக எண்ணுகிறேன். முதலில் விக்கி ஊடக நடுவத்தில்(commons) உள்ள சீன ஒலிக்கோப்புகளுக்குரிய சொற்களை உருவாக்க வேண்டும். பிறகு அதனை வளர்த்தெடுக்கலாம். --தகவலுழவன் 02:17, 26 பெப்ரவரி 2011 (UTC)

தலைப்பிற்கு தொடர்பில்லாதவற்றிற்கு இணைப்பு கொடுத்தல்[தொகு]

உதாரணமாக இந்தப் பக்கத்தில் இந்த சொல்லிற்கு தொடர்பில்லாதவற்றிற்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல பக்கங்களில் உள்ளது. இது நாம் தேடி வந்த சொற்கள் பற்றி அறிவதை விட எதற்காக இந்தப் பக்கத்திற்கு வந்தோம் என்பதையே மறக்கச்செய்துவிடும். இது பயனர்களை தவறாக வழிநடத்துவதாகும் (navigation). சள்ளை பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் செல், வழி, சங்கிலி, கை, கறை போன்றவை சள்ளை என்பதற்குத் தொடர்பில்லாதவை. அதனால் இணைப்பு தேவையில்லை என்பது என் கருத்து.

//ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் டிவிஎஸ் 50 உறுமிக்கொண்டு நின்றுவிட்டது. காலால் எற்றிக்கோண்டே சென்று ஓரமாக நிறுத்தினேன். சங்கிலி கழன்றுவிட்டது. சள்ளையாக இருந்தது. அதை கழட்டிமாட்டினால் கையெல்லாம் கறையாகிவிடும்//


நான் பார்த்த பல்வேறு செய்தித் தளங்களில் கூட சென்னையில் வழிப்பறி என்று தலைப்பிருந்தால் சென்னை,வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்றவற்றிற்கு தான் (தானியங்கியாக வரும்) தொடுப்பு கொடுக்கப்படுகிறது. அது தான் சரியனது. உங்கள் கருத்துக்களையும் பகிரவும். -- மாகிர் 08:24, 12 மார்ச் 2011 (UTC)

நான் என் தொழில்முறை எழுத்துகளுக்கு விக்சனரியை அதிகம் பயன்படுத்துகிறேன் (பங்களிக்க தொடங்குவதற்கு முன்பிருந்து) எனக்கு இந்த நீல இணைப்புகள் திசை திருப்புதலாக இருந்ததில்லை. செய்தித் தள/ கலைக் களஞ்சிய இணைப்பு முறைமைகளைப் போன்று ஒரு restrictive linking இங்கு இருக்க அவசியமில்லை என கருதுகிறேன். மேலும் இது thesaurus அல்ல வெறும் அகராதி தானே. எவ்வளவு நீல இணைப்புகள் இருக்கலாமோ அவ்வளவு இருந்துவிட்டுப் போகட்டுமே. -Sodabottle 09:24, 12 மார்ச் 2011 (UTC)

தொடர்புடைய சொற்களுக்கு மட்டுமே இணைப்பு என்று மட்டுப்படுத்தத் தேவை இல்லை. அதே வேளை, ஏகப்பட்ட சொற்களுக்கு சிகப்பும் நீலமுமாக ஏகப்பட்ட இணைப்புகளைத் தந்தால் படிப்பதற்கு இடையூறாக உள்ளது. எனவே, தகுந்த இடங்களில் அளவோடு இணைப்புகள் தரலாம் எனக் கருதுகிறேன்--ரவி 11:53, 21 மார்ச் 2011 (UTC)

 • இவ்வாறு பயன்பாடு, விளக்கம் போன்ற பகுதிகளில் இணைப்புக் கொடுக்கக் காரணம் அச்சொற்களின் பொருளைக் காண விழைவோர் அச்சொற்களுக்கு நேரடியாகச் செல்லவே. அப்படிச் செய்தல் ஒரு மிகச் சிறந்த பயன்பாட்டு வசதி, வேறு அகராதிகளில் இல்லாத ஒரு தனித்தன்மை விக்சனரிக்கு அளிப்பதும் என்றே கருதுகிறேன். சிவப்பு இணைப்புகள் காலம் செல்லச் செல்லக் குறைந்துவிடும். பழ.கந்தசாமி 06:51, 31 மார்ச் 2011 (UTC)

தற்போதைய தலைப்பு வார்ப்புருக்களினால் ஏற்படும் இடர் (வடிவமைப்புப் பகுதிக்குரியது)[தொகு]

 • வார்ப்புரு பேச்சு:பொருள் என்ற பக்கத்தின் அடியில், மாகிர் குறிப்பிடும் தொழில் நுட்ப விசயங்களைக் காணவும். அதன்படி, தற்போது பயன்படுத்தப்படும் தலைப்பு வார்ப்புருக்களைத் தவிர்த்தல் அல்லது மாற்றுதல் மிக அவசியம் ஆகும். ஆங்கிலக் கட்டுரைகளை, தமிழ் விக்சனரியின் சொற்களைக் கொண்டு மொழிபெயர்க்கும் கருவி பயன்படுத்தும் போது, அவர் குறிப்பிட்ட இடர் தோன்றுகிறது. எனக்கு அங்ஙனம் மாற்றுவதில் உடன்பாடு. உடன்பாடு இல்லாதவர் அதற்குரியவற்றை அப்பக்கத்திலேயே கூறவும். நன்றி.--04:33, 27 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
 • மீடியாவிக்கி:Common.css-இல் நிறமாற்றத்தை மேற்கூறியக் காரணத்தால் ஏற்படுத்தியுள்ளேன். முன்னிலை வகிக்கும் விக்சனரிகளில் உள்ள நடைமுறைகளின் படி, இனி நாமும் சமக்குறியீடுகளைப் பயன்படுத்த இது வழிவகுக்கும். இம்மாற்றத்தினால், வார்ப்புருக்களினால் வந்த இடர் நீக்கப் படுகிறது. அனைவரது கருத்தினையும் அறிய ஆவல்.(எ. கா.) saltarello --06:22, 15 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தானியங்கி அனுமதி[தொகு]

தவியில் பெற்ற எனது தானியங்கி அனுக்கத்தை விக்சனரிக்கும் பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன். குறிப்பாக பகுப்புகள், பராமரிப்புப் பணிகளுக்கு. உதா, பகுப்பு:1000 ஆங்கில அடிப்படைச் சொற்கள், பகுப்பு:1000 தமிழ் அடிப்படைச் சொற்கள் (see:In English Wikt) போன்றவை. இதுபோன்றவை தமிழ் விக்சனரியின் தரத்தை மேம்படுத்த உதவலாம். பயனர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். இங்கு சிறப்பு அனுமதி ஏதும் பெறவேண்டுமா? நன்றி. -- மாகிர் 08:03, 1 மார்ச் 2011 (UTC)

 • மாஹிர், விகசனரிக்கென்று தனி அனுமதி இருப்பதாகத் தெரியவில்லை. ரவி அல்லது தகவலுழவன் இருவருந்தான் தமிழ் இணையக் கல்விக்கழகச் சொற்கள் பதிவேற்றும்போது தகவலெந்திரன் என்ற தானியங்கியை உருவாக்கினர். அவர்களுக்கு மேல்விபரங்கள் தெரியலாம். பழ.கந்தசாமி 08:12, 1 மார்ச் 2011 (UTC)

தமிழ் விக்சனரிச் சமூகம் கூட்டாகச் செய்யும் பணிகளுக்கே பொதுவான ஒரு தானியங்கிக் கணக்கு உருவாக்கிச் செய்தோம். மாகிர் சுட்டுவது போன்ற பணிகளைத் தனிப்படச் செய்வதற்குத் தடை இல்லை. மாகிர், தாங்கள் செய்ய விரும்பும் தானியங்கிப் பணிகளைத் தெளிவாகச் சுட்டி ஓரிரு சோதனைத் தொகுப்புகள் செய்து காட்டினால், அது குறித்து உரையாடி அணுக்கம் தரலாம். நன்றி--ரவி 20:04, 5 மார்ச் 2011 (UTC)

மாஹிர், உங்கள் தானியங்கிக்கு தினம் ஒரு சொல்லில் இடம் பெறும் சொற்களுக்கு {{was wotd}} வார்ப்புரு இணைக்கும் பணியினையும் தாருங்களேன்.--Sodabottle 04:25, 7 மார்ச் 2011 (UTC)

Sodabot தானியங்கி அனுமதி[தொகு]

பயனர்:Sodabot என்ற ஒரு தானியங்கியை ஏற்படுத்தியுள்ளேன். தற்போதைய வார்ப்புரு அடிப்படையிலான பகக வடிவமைப்பை சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சொற்களுக்கும் ஏற்படுத்த இந்த தானியங்கியைப் பயன்படுத்த விரும்புகிறேன். ஆட்டோ விக்கி புரவுசரின் மூலம் இதை செய்ய நினைக்கிறேன். மிகக் கவனமாக சிறு சிறு மாற்றங்களாகவே இதனை செய்யத் திட்டமிட்டுள்ளேன். சில சோதனைத் தொகுப்புகள் இங்கு காணலாம் - [2] [3].

இந்த தானியங்கிக்கு அணுக்கமும், தானியங்கி கொடியும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Sodabottle 21:49, 11 மார்ச் 2011 (UTC)

சோடாபாட்டில், ஒலிப்பு என்னும் பகுதியின் கீழ் மீண்டும் பலுக்கல் (ஐ. அ) என்பது போல் வருகிறது. இதைத் தவிர்க்க இயலுமா? புதிய வடிவில் இந்தப் பலுக்கல் என்ற சொல்லைத் தவிர்த்திருக்கிறோம். இது ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றம் என்பதால் மற்ற ஒரு சிலரின் ஒப்புதலை அடுத்து இதற்குத் தானியங்கி அணுக்கம் வழங்குவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்--ரவி 11:57, 21 மார்ச் 2011 (UTC)

சரி ரவி. ஒலிப்பு/பலுக்கல் குறித்த consensus இல்லையென்றால் பிற பகுதிகளை மற்றும் மாற்றுகிறேன்.--Sodabottle 12:02, 21 மார்ச் 2011 (UTC)


விக்கியன்பு(வடிவமைப்புப் பகுதிக்குரியது)[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது விக்கியன்பு என்றொரு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை விக்சனரியிலும் நிறுவலாமா? தங்களது கருத்து தேவை. --Surya Prakash.S.A. 10:25, 21 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பினைக் கண்டேன். இங்கு செயல்படும் அனைவருக்கும் பதக்கம் பெறவும், அளிக்கவும் வேண்டியவர்களே. மிகக் குறைந்த எண்ணிக்கையில் செயல் படுபவர் இருப்பதால், இப்போதைக்கு எனக்குத் தேவைப்படாது.தேவையெனின் பயன்படுத்துவேன்.நன்றி.--00:24, 12 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பகுப்புகள்(வடிவமைப்புப் பகுதிக்குரியது)[தொகு]

நாம் பகுப்புகளை இடும்பொழுது பற்பல விதமாக இட்டாலும், அடிப்படையில் ஒரு மொழிச்சொற்கள் எத்தனை உள்ளன என்பதை அறியும் முகமாக தொகுக்கப் பெறுதல் வேண்டும் (ஆங்கில விக்சனரி இதனைச் சீராகச் செய்கின்றது). எடுத்துக்காட்டாக உருசிய உரிச்சொற்கள் பகுப்பில், மேலும் அடிப்பகுப்பாக உள்ளதில் [[பகுப்பு:உருசியம்]] என்பது இருப்பது தேவை. இதே போலவே பிற எல்லா மொழிகளுக்கும். மொழிகள் ->தனித்தனி மொழிகள்->(பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை, இடைச்சொல்) என்னும் பாகுபாடுகள் இருப்பது அடிப்படை. மேற்கொண்டு கூடுதலான பகுப்புகளாக நிறம், விலங்குகள், அறிவியற்சொற்கள், ஆட்சிமொழிச் சொற்கள் என்று பகுப்புகள் இருக்கலாம், ஆனால் மொழி1-நிறங்கள் என்னும் பகுப்பு இருந்து உள்ளே மொழி1-உரிச்சொல் பகுப்பும் இருந்தாலும், ஒரு மொழியின் எல்லாச் சொற்களும் மொழி1 என்பதில் தெளிவாகத் தொகுக்கப்பெறுமாறு இருத்தல் வேண்டும் என நினைக்கின்றேன்.--செல்வா 14:00, 12 சூன் 2011 (UTC)

பகுப்புகளைச் சீராக்குவோம்.ஆங்கில விக்சனரியிலும் கூட அடிப்படை என்ற பகுப்பினை தவிர்க்க உரையாடுகின்றனர்.அப்பகுப்பு, பகுப்புக்கான கருவிக்கு இடராக இருப்பதால் நீக்க எண்ணுகின்றனர். நாமும் அதனைத் தவிர்ப்போம்.தமிழ் விக்சனரி-->மொழிகள்-->உட்பகுப்புகள் என நீங்கள் குறித்தபடி மாற்றுவோம். அப்பொழுது மறவாமல் விக்கியிடை இணைப்புகளையும் இணைப்போம்.மேலும், ஒரு மொழிக்கு முழுமையாக அமைத்துத் தாருங்கள். அதனை பின்பற்றி, பல மொழிகளுக்கும் அமைக்கிறேன். --00:15, 13 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

inbambot தானியங்கி அனுமதி[தொகு]

தமிழ் விக்சனியில் நான் த.இ.ப வணிகவியல் கலைச் சொற்கள் மற்றும் நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி சொற்களை சேர்த்து வருகிறேன். அதற்கென inbambot என்ற ஒரு தானியங்கி தேவை.

BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:Inbambot
நோக்கம்: த.இ.ப வணிகவியல் கலைச் சொற்கள் மற்றும் நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி சொற்களை சேர்க்க.
உரிமையாளர்: User:Inbamkumar86
சோதனைப்பதிவுகள்: 1., 2.
மேலாளர் முடிவு:

--இராஜ்குமார் 09:21, 13 செப்டெம்பர் 2011 (UTC)

தமிழ் உறவுச் சொற்கள் தலைப்பு மாற்றம்[தொகு]

இந்த உரையாடல்கள் படி, இன்னும் 10நாட்களுக்குப் (27.08.2011-தேதிக்குப்)பிறகு தமிழ் உறவுச்சொற்கள் என்ற பகுப்புத்தலைப்பு, உறவுச்சொற்கள் என மாற்றப்பட உள்ளது.--06:56, 17 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

இசைச் சொற்கள்[தொகு]

ஓ மாக சீயா, நாக்கு முக்க போன்ற இசைச் சொற்களை {.{இசைச் சொற்கள்}} என்று தொகுத்து உள்ளேன். இது போன்று நீங்கள் அறிந்த இசைச் சொற்களையும் இந்த பகுப்பில் குறிப்பிடவும். --இராஜ்குமார் 12:19, 12 செப்டெம்பர் 2011 (UTC)

பகுப்பு_பேச்சு:இசைச்_சொற்கள் என்பதில் எனது மறுப்பைக் கூறியுள்ளேன்.--03:01, 13 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தட்டச்சுக் கருவி நீட்சி[தொகு]

நமது தமிழ் தட்டச்சு கருவியின் புதிய பதிப்பு (நரையம் மீடியாவிக்கி நீட்சி) விக்கி மூலத்திலும், விக்கி நூலகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நீட்சி பதிப்பினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

 1. அனைத்து திட்டங்களுக்கும் பொதுவான ஒரே இடத்தில் நிரல் இருப்பதால் - மாற்றங்கள், வழு களைதல் எளிது
 2. ஒரு முறை தேர்வு செய்து விட்டாலே ஒரு பக்கத்தில் உள்ளீடு செய்ய வேண்டிய அனைத்து இடங்களிலும் தட்டச்ச முடியும் (இப்போது ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனியே தேர்வு செய்ய வேண்டும்)
 3. கருவி வேண்டாம் என்று கருதுபவர் விருப்பத் தேர்வுகள் வழியாக கருவியை நீக்கி விடலாம்
 4. கருவிக்கான இணைப்பு இப்போது தேடு பெட்டிக்கு அருகில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. புதிய நீட்சி மேலே இருப்பதால் இட சிக்கல் தீர்கிறது.
 5. வேகமான தட்டச்சு / பக்கம் தோன்றுதல்

முன்பு நீட்சியை நேரடியாக தமிழ் விக்கியில் நிறுவியதால் சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டு அதனை நீக்க வேண்டியதானது. ஆகையால் இம்முறை குறைவான பயனர்கள் செல்லும் திட்டங்களான விக்கி நூல்களிலும், விக்கி மூலத்திலும் நிறுவியுள்ளோம். இதனை நன்றாக சோதித்து குறைகள் ஏதேனும் உள்ளனவா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன். குறிப்பாக தமிழ்99 பயன்படுத்துவோரின் உதவி தேவைப்படுகிறது. இதில் குறைகள் ஏதும் இல்லையென்று உறுதி படுத்தியபின்னர் விக்சனரி, விக்கி செய்தி மற்றும் விக்கிப்பீடியாவிலும் நிறுவப்படும்.

கருவிக்கான சில இணைப்புகள் தற்போது ஆங்கிலத்தில் தெரியும், அவற்றை தமிழில் மாற்றியிருக்கிறேன். அவை தெரிய ஒரு நாளாகலாம். தற்போது (விக்கி நூல் மற்றும் விக்கி மூலத்தில்) பக்கத்தின் மேல் உங்கள் பயனர் பெயருக்கு இடப்புறம் “input method" அல்லது “தமிழில் எழுத” என்று தோன்றும் இணைப்பை சொடுக்கி இக்கருவியை சோதித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன். சோதனையில் தோன்றியவற்றை இங்கு பதிவு செய்யுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 18:50, 12 செப்டெம்பர் 2011 (UTC)

த*உழவன்[தொகு]

நான் தமிழ்99தட்டச்சுமுறையை பின்பற்றுபவன். விக்கி மூலம் திட்டத்தில் சோதிக்கிறேன். என்றுக்குள் இங்கு, அந்த அனுபவங்களை பதிய வேண்டும். மற்றொரு சந்தேகம். தற்பொழுது இங்குள்ள தட்டச்சு வசதியின் மூலம் hotcat-இல் தட்டச்ச இயலவில்லை. அது இந்த புதிய தட்டச்சு வசதியில் கிடைக்குமா?--02:58, 13 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

சோ.பா!

நான் விக்கி மூலத்தில் பயன்படுத்தி பார்த்தேன். எனது அனுபவங்கள் வருமாறு;-

 1. தமிழ்99ஐ தேர்தெடுக்கும் போது, நான் தெரிவு செய்த தட்டச்சு முறை கண்ணுக்குப் புலப்பட்டால் நன்றாக இருக்கும். தட்டச்சு செய்தே, விசைப்பலகையினை அறிய முடிகிறது.
 2. ctrl + m பயன்படுத்தும் போது, உடனே ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறுவதில்லை.
 3. தட்டச்சு குறிப்பு தெரியும் இடத்தில், சிகப்பான பெருக்கல் குறியிருந்தும், தமிழ்99 தட்டச்சு வேலைசெய்கிறது.
 4. ஒரே ஒரு விசையை அழுத்துவதன் மூலம், தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாறினால் நன்றாக இருக்கும்.
 5. hotcat-இல் பயன்படுத்தி பார்க்கவில்லை.
 6. அனைத்து இடங்களிலும் எந்த முறிவும் இல்லாமல் வேலை செய்கிறது. தற்போதைய வசதியை விட இது மிகவும் பலன் அளிக்கவல்லது.தங்களது ஈடுபாட்டிற்கு மிக்க நன்றி கூற கடமைப்படுகிறேன். வணக்கம்.--தகவலுழவன் 02:04, 14 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

புதிய தட்டச்சுக் கருவி[தொகு]

புதிய தட்டச்சுக் கருவி மீடியாவிக்கி நீட்சியாக நிறுவப்பட்டுள்ளது. பழைய கருவி நீக்கப்பட்டு விட்டது. புதிய கருவிக்கான உதவிப்பக்கம்- உதவி:தமிழ்த் தட்டச்சு

 • மிக்க நன்றி. இதற்கு உழைத்தவர் அனைவருக்கும் தெரிவித்திடுங்கள்.சோ.பா!--14:13, 4 அக்டோபர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பாமினி விசைப்பலகை உதவி[தொகு]

நமது தட்டச்சுக் கருவியில் பாமினி விசைப்பலகை முறையினை சேர்க்க பாமினி தட்டச்சு முறை அறிந்தவர்களின் உதவி தேவைப்படுகிறது - காண்க - விக்கிப்பீடியா ஆலமரத்தடி--சோடாபாட்டில்உரையாடுக 13:34, 14 அக்டோபர் 2011 (UTC)

Call for image filter referendum[தொகு]

The Wikimedia Foundation, at the direction of the Board of Trustees, will be holding a vote to determine whether members of the community support the creation and usage of an opt-in personal image filter, which would allow readers to voluntarily screen particular types of images strictly for their own account.

Further details and educational materials will be available shortly. The referendum is scheduled for 12-27 August, 2011, and will be conducted on servers hosted by a neutral third party. Referendum details, officials, voting requirements, and supporting materials will be posted at Meta:Image filter referendum shortly.

Sorry for delivering you a message in English. Please help translate the pages on the referendum on Meta and join the translators mailing list.

For the coordinating committee,
Philippe (WMF)
Cbrown1023
Risker
Mardetanha
PeterSymonds
Robert Harris

தமிழ் இணையப் பல்கலைக்கழகச் சொற்கள் வழு[தொகு]

த.இ.ப இலிருந்து எடுக்கப்பட்ட உயிரியல் கலைச்சொற்களில் பல வழுக்கள் உடையது, அவை திருத்தியமைக்கப்படும் சில சந்தர்ப்பங்களில், ஒரு சொல்லானது பிறிதொரு சொல்லுடன் முழுமையாக மாற்றீடு செய்யப்படுகின்றது, அதன் பின்னர் "தமிழ் இணையப் பல்கலைக்கழகச் சொற்கள்" எனும் பகுப்பு அப்பகுதிக்கு அவசியமா இல்லையா என்பதைக் கூறுங்கள்.--சி. செந்தி 10:24, 5 மே 2011 (UTC)

பெருமளவு மாற்றம் ஏற்பட்டுவிட்டால், அந்தப் பகுப்பினை நீக்கிவிடுங்கள்.--Sodabottle 11:07, 5 மே 2011 (UTC)
அதன் மொழிப்பெயர்ப்புத் தவறுகளை, நீங்கள் தொடர்ந்து திருத்தியமைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்க உமது செஞ்சேவை! அப்பகுப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம், தமிழ் மாநாட்டின் போது அவர்கள் அளித்த கொடைச்சொற்களை குறிக்கவே ஆகும். அதனை நீக்கும் போது, அக்கொடை பற்றிய வரலாறு அழிக்கப்படுமன்றோ? மாநாட்டில் நீங்கள் (குறிப்பாக மருத்தும் சார்ந்த சொற்களை) சரிபார்ப்பதை, த.இ.க.கழக அதிகாரியிடம் நேரில் கூறியிருந்தேன். அவர் மகிழ்ந்தார்.பிறகு மின் மடல் மூலமும் பல துறை சார்ந்த அறிஞர் திருத்துவதையும் கூறியிருக்கிறேன். அவர்கள் மகிழ்ந்தனர்.--07:58, 25 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
நீங்கள் சொல்வது சரியானதே. கொடை வரலாற்றைப் பாதுகாக்க அவை பயன்படுகின்றன என்பது எனக்கு தோணாமல் போய்விட்டது. --சோடாபாட்டில்உரையாடுக 08:24, 25 மே 2011 (UTC)


Archive information icon.pngஆலமரத்தடியிலிருந்து ( தமிழ் இணையப் பல்கலைக்கழகச் சொற்கள் வழு என்பதன் உரையாடல்களை, 10 (18.நவம்பர்.2011 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்பட்டது.)


முன்னொட்டு மாறுதல்(வடிவமைப்புப் பகுதிக்குரியது)[தொகு]

இன்றிலிருந்து wiktionary என்ற முன்னொட்டு உடைய பக்கங்கள் (திட்டப் பக்கங்கள்) அனைத்தும் முறிந்துள்ளன. wiktionary என்று ஆங்கிலத்தில் இருந்தால் ஆங்கில விக்கிக்கு தொடுப்பு காட்டுகிறது. இதை சரி செய்ய ஆங்கில முன்னொட்டுக்கு பதில் தமிழ் “விக்சனரி” என்று பயன்படுத்தினால் சரியாகின்றது. எங்கேனும் இணைப்புகள் முறிந்துள்ளதைக் கண்டால் இதனைச் செய்யுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 16:32, 24 சூன் 2011 (UTC)

நான் கண்டால் மாற்றி விடுகிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.சோ.பா.--01:58, 25 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..


Archive information icon.pngஆலமரத்தடியிலிருந்து ( முன்னொட்டு மாறுதல் என்பதன் உரையாடல்களை, 10 (18.நவம்பர்.2011 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்பட்டது.)


Invite to WikiConference India 2011[தொகு]

WCI banner.png

Hi ஆலமரத்தடி,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.


But the activities start now with the 100 day long WikiOutreach.

As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [4] --Naveenpf 05:36, 6 ஆகத்து 2011 (UTC)

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் ஆலமரத்தடி,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

விக்கி ஊடகப் போட்டி கருத்து வேண்டல்[தொகு]

விக்கி ஊடகப் போட்டி கருத்து வேண்டலில் பங்கேற்க வேண்டுகிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 18:25, 29 செப்டெம்பர் 2011 (UTC)


Archive information icon.pngஆலமரத்தடியிலிருந்து ( விக்கி ஊடகப் போட்டி கருத்து வேண்டல் என்பதன் உரையாடல்களை, 10 (18.நவம்பர்.2011 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்பட்டது.)