விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 4

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 4
ஞெகிழி (பெ)
நெகிழிப் பொருட்கள்

பொருள்

  1. நெகிழி
    நெகிழிப் பைகளை உண்பதால், பல உயிரினங்கள் அழிகின்றன.
  2. கொள்ளி; கடைக்கொள்ளி
  3. தீக்கடை கோல்
  4. தீ, தீப்பொறி
    விடுபொறி ஞெகிழியிற் கொடிபடமின்னி (அகநானூறு. 108).
  5. விறகு
  6. கொடுவேலி
  7. சிலம்பு

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. plastic
  2. fire-brand
  3. piece of wood used for kindling fire by friction
  4. fire, spark
  5. fuel
  6. ceylon leadwort
  7. tinkling anklet
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக