உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:புதிய சொற்களின் வளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

றஓமரா

உலக மொழிகள் வரிசையில்

[தொகு]

முதன்மையான சொற்களின் மொழி பெயர்ப்பு

[தொகு]

ஒவ்வொரு மொழியிலும் ஏறத்தாழ 400-600 சொற்கள் அடிப்படை சொற்கள் எனக் கருதப்படுகின்றன. இவற்றை 1000 ஆகவும் நாம் கொள்ளலாம்.

  • உடல் உறுப்புகளின் பெயர்கள் (கை, கால், தலை..),
  • நெருங்கிய உறவுகள் (அம்மா, அப்பா, அண்ணன்..),
  • அன்றாடம் பயன்படும் பெயர்ச்சொற்கள் (வீடு, மரம்..விலங்குகள், பறவைகள், பூச்சிகள்) *வினைச்சொற்கள் (வா, போ, தா...),
  • உரிச்சொற்கள் (நல்ல, கெட்ட, உயரமான,..)

போன்றவை இவை. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய திராவிட மொழிகளில் முதலிலும், இந்தி, வங்காளி, மராட்டி ஆகிய மற்ற சில இந்திய மொழிகளில் அடுத்ததாகவும் முதன்மையான ஓராயிரம் சொற்களுக்குத் தமிழில் பொருள் தருமாறு ஒரு திட்டம் வகுத்து சொற்களுக்கான பக்கங்கள் உருவாக்கலாம். இதனால், அடிபப்டையான சொற்கள் இந்திய மொழிகளில் எத்தனை ஒற்றுமை வேற்றுமையுடன் உள்ளது என்று அறிவது மட்டுமல்லாமல், அவை நன்றாகப் பயன்படும் சொற்களாகவும் இருக்கும். பின்னர் விரிவாக எழுதுகின்றேன். ஒரு பத்து இந்திய மொழிகளில் இப்படி ஓராயிரம் சொற்களுக்கு பக்கங்கள் உருவாக்கினால், பயனுடைய 10,0000 பக்கங்களை நாம் உருவாக்கியதாகும். அடுத்த கட்டமாக இதே சொற்களுக்கு ஆங்கிலம், இடாய்ச்சு, பிரான்சியம், எசுப்பானியம், போர்த்துகீசியம், சீனம், சப்பானியம் ([[நிப்பானியம்), அரபி ஆகிய மொழிகளுக்கான பக்கங்களையும் உருவாக்கலாம். பொருளும் விளக்கமும் தமிழில் இருக்க வேண்டும். ஒலிப்பும் (பலுக்கலும்) தமிழ் எழுத்துகளில் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தை அழகான வடிவமைப்புடன் ஆக்குதலும் நல்லது.--செல்வா 16:56, 4 மே 2010 (UTC)[பதிலளி]

இத்திட்டத்தை நாம் வளர்த்து எடுத்தால், விக்சனரி தனித்தன்மை வாய்ந்ததாகவும் பயன் மிக்க ஒரு இணைய பன்மொழி அகரமுதலியாகவும் வளர்ந்தெழும். தென்னிந்திய மொழிகள் + 3 வட இந்திய மொழிகள் (இந்தி, மராத்தி, வங்காளி), ஆகியவற்றை முதலில் எடுத்துக்கொள்ளலாம். --செல்வா 14:56, 30 மே 2010 (UTC)[பதிலளி]

சில கலைச்சொற்கள்

[தொகு]

இவை எழுத்தாளர் ஜெயமோகனின் வலைதளத்தில் இருந்தது. சுட்டி இவற்றையும் கருத்தில் கொள்ளலாம்.

நிகண்டுகள் எங்கே?

[தொகு]
  • மற்ற மொழிகளை விட, தமிழின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுபவை நிகண்டுகள். அவைகளைக் குறித்த சொற்தொகுதிகள் நம் விக்சனரியில் இல்லை. கண்ணில் பட்டதை, பகுப்பு:நிகண்டுகளின் சொற்கள் என்பதில் தொகுத்துள்ளேன். இருப்பினும் முறைப்படி அவற்றினைத் தொகுக்கப்பட வேண்டும்.
தமிழறிஞர் அதற்கான நடவடிக்கை எடுப்பரா? அங்ஙனம் எடுப்பின், அவர்களோடு இணைந்து பணியாற்ற, இந்த எழுத்தன் ஆவலாக உள்ளான். நமது தொன்மைகளைப் புரட்டினாலே, தமிழ் மற்ற மொழிகளுடன் முன்னணியில் இருக்கும் என்ற பேராவலில் இதனை முன்வைக்கிறேன் { த*உழவன் 05:28, 31 மே 2010 (UTC) }[பதிலளி]

விக்சனரி தலைச்சொற்களைத் தரப்படுத்தல் எப்படி?

[தொகு]