வெம்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெம்மை(பெ)

  1. வெப்பம்
  2. கடுமை, உக்கிரம்
  3. கோபம்
  4. விருப்பம்
  5. பராக்கிரமம்
  6. கொடுந் துன்பம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. heat; glow
  2. severity, harshness; cruelty
  3. anger, wrath
  4. desire
  5. might, valour
  6. extreme pain or distress


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால் (கலித். 11)
  • வேகயானை வெம்மையிற் கைக்கொள (சிலப்.15, 47)
  • உலக மூன்றுமென்வெம்மையி னாண்டது (கம்பரா. அதிகா. 4)
  • வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான் (கம்பரா. இராவணன்சோக.10)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :வெப்பம் - சூடு - கடுமை - கோபம் - வேக்காடு - வெக்கை

உரிச்சொல்[தொகு]

"வெம்மை வேண்டல்" - வார்ப்புரு:தொல்காப்பியம் 2-8-37

அருள் வெய்யோன், பொருள் வெய்யோன் (வெம்மை > வெம் < வெய்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெம்மை&oldid=1243101" இலிருந்து மீள்விக்கப்பட்டது