வேதகம்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
வேதகம்(பெ)
- வேறுபடுத்துகை
- உயிரு மாயா வுடலையும் வேதகஞ்செய் தாண்டவங்கணனே (கோயிற்பு. இரணிய. 56)
- வேறுபாடு
- விண்களி கூர்வதோர்வேதகம் வந்து வெளிப்படு மாகாதே (திருவாச. 49,1)
- விரோதம்
- அவனால்இவ்வளவு வேதகமு முண்டாயிற்று.
- துரோகம்
- வேதகமுண்டானால் இராச்சியம்சளைக்கும்.
- புடமிடுகை
- வேதகப்பொன்.
- புடமிட்ட பொன்
- விளங்காநின்ற வேதகமே (தாயு. பெற்றவட். 10)
- இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும் பண்டம்
- இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற்போல (பெரியபு. கண்ணப். 154)
- வேதங்கம், சிறுதுகில்
- கர்ப்பூரம்
- தானியம்
- வெளிப்படுத்துகை
- இரகசியத்தை வேதகம்பண்ணலாகாது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- differentiating, distinguishing
- change, modification
- dissension, disunion
- treachery,treason
- refining, as of gold
- refined gold
- agent to transmute baser metals into gold
- small fine cloth
- camphor
- grain
- disclosure
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]- வேதி, வேதிவினை, வேதியல், இரசவாதம்
- வேதிகை, வேதியன், வேதகம், வேதிப்பான், வேதிதம், வேதித்தார்
- வேதை, வேதைச்சிந்தூரம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +