ecotourism
Appearance
பொருள்
ecotourism(பெ)
- சூழுலா; சூழியல் சுற்றுலா - சுற்றி உலா வரும் சூழலுக்குக் கேடு விளைவிக்காத, சூழலுக்கு அழிவு ஏற்படுத்தாத சுற்றுலா
- சுற்றுச் சூழல் சுற்றுலா - சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எதைச் செய்யவேண்டும், எதையெல்லாம் நிச்சயமாகச் செய்யக்கூடாது என்பதைக் கடைப்பிடிக்கும் சுற்றுலா
விளக்கம்
பயன்பாடு
- கவி கேரளத்தின் சூழுலா [Eco-Tourism ] மையங்களில் ஒன்று. ஏற்கனவே பரம்பிக்குளம் சூழுலா மையத்துக்குச் சென்றிருந்தேன். (கவி சூழுலா, ஜெயமோகன்)
- கேரள அரசு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள அடர்காடுகளில் சூழியல்சுற்றுலா [ எக்கோ டூரிசம்] என்ற முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்திவருகிறது. சூழலில் உறுத்தாத அழகிய கட்டிடங்களை காட்டுக்குள் வேலியிடப்பட்ட இடத்துக்குள் அமைத்து அங்கே சிறப்பான உணவு தங்குமிடம் கொடுத்து காட்டுக்குள் வழிகாட்டியுடன் அனுப்பி வைக்கிறார்கள். (பருவமழைப் பயணம், ஜெயமோகன்)
- சுற்றுச் சூழல் சுற்றுலா என்னும் பெயரில் சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எதைச் செய்யவேண்டும், எதையெல்லாம் நிச்சயமாகச் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம் (பயணங்கள் முடிவதில்லை! ஞாயிறு கொண்டாட்டம், 1 ஆகஸ்டு 2010)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ecotourism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:tourism - environment - ecology - ecotourist - ecoterrorist