கம்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பச்சையும் வெண்மையும் கலந்த நிறத்திலுள்ள திணை வகையைச் சேர்ந்த ஒரு உணவு தானியம்.
- உருளை வடிவத்திலுள்ள ஒரு மரக்கோல், மரக்கொம்பு, செடி கொடிகளின் சிறுதண்டு, கழி.
- ஈரநிலத்தினை அளந்திட உதவும் ஒரு அளவுகோல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- pearl millet, bulrush millet, indian millet. Pennisetum glaucum
விளக்கம்
- குச்சி, கம்பு எனும் சொற்கள் நாமறிந்தவை. குணில் என்பது பழந்தமிழ்ச் சொல். சென்னையிலே கம்பு என்பதைக் கொம்பு என்று சொல்கிறார்கள். மரத்திலே கிளை, கொம்பு என்பவை உண்டு. மரக்கொம்பை உடைத்துத்தான் குச்சியாகப் பயன்படுத்துகிறோம். ஒட்டடைக் குச்சி; குச்சி பெரிதாக இருப்பின் கம்பு, ஒட்டடைக் கம்பு எனும் சொல்லும் உண்டு. கம்பு சுழற்றுதல் - சிலம்ப விளையாட்டு எனப்பட்டது. மரத்திலுள்ள கொம்பு வளைந்தும் நெளிந்தும் இருக்கலாம். ஆனால் கம்பு நேராக - ஒரே அளவினதாக இருத்தல் வேண்டும்.
- பல் விளக்கும் குச்சி - வேப்பங்குச்சி இப்போது பார்க்க முடியாததாகிவிட்டது. தடித்துக் கனமாக நேராக இருப்பது கம்பு. (கம்பு என ஒரு தானியம் உண்டு; இது வேறு) சிறிதும், பெரிதுமாக வளைந்தும் நெளிந்தும் இருப்பது கொம்பு என்று கொள்ளுவோமா? கொடி படரக் கொழுகொம்பு வேண்டும் என்று படிக்கிறோம் (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் - 73, தினமணிக்கதிர், 08 சன 2012)