இச்சகம்
Appearance
இச்சகம் (பெ)
- முகத்துதி; காரியம் நிறைவேறுவதற்காகச் செய்யப்படும் போலியான புகழுரை/புகழாரம்
- பெறக்கருதிய தொகை; எதிர்பார்க்கும் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- flattery, sycophancy
- sum or result sought
விளக்கம்
பயன்பாடு
- ஆட்சி நாற்காலியில் அமர்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கேற்ப இச்சகம் பேசி, கைகட்டி வாய் பொத்தி அடிமை சேவகம் செய்யவும், வாய் வலிக்க வாழ்த்துப்பா வாசிக்கவும் வரிசையில் நிற்கும் இந்த அறிவு ஜீவிகளால், பாமர மக்களுக்கு எப்படி விழிப்பு உணர்வு ஏற்படும்? (எங்கே போகிறோம் நாம், தமிழ் சாரல்)
- பரிசில் கோரி பாடிய அந்த சங்ககாலக் குரலையே இன்றும் நாம் மேடைதோறும் பார்க்கிறோம். ஐயா நீர்தான் இமையமலைக்கே உயரத்தை கற்பித்தவர் என்று பரங்கிமலை பாண்டித்துரையைப் பற்றிப் பாட அவர்களுக்கு கூச்சமே இல்லை. அவர்கள் பாடும் சொற்களில் பெரும்பகுதி இச்சகம் பேசுதலே. (இலக்கியமும் நவீன இலக்கியமும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- வரத்திலே கண்ணும் வாக்கி லிச்சகமும் (பிரபோத. 11, 16)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இச்சகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +