உள்ளடக்கத்துக்குச் செல்

பாலபாடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாலபாடம்(பெ)

  1. குழந்தைகளுக்குப் பாடம் நடத்துதல்; அடிப்படைக் கல்வி
  2. சிறுவர்க்குரிய பாடநூல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. .teaching of children. (Colloq).
  2. a primer for infants
விளக்கம்
பயன்பாடு
  • தமிழ் எழுத, படிக்கத் தெரியாத அங்கேயே பிறந்துவளர்ந்த இளம் தலைமுறையினருக்கு என்ன செய்யலாமென்று யோசித்தபோது எனக்கும் ஒரு எண்ணம் பளிச்சிட்டது. தில்லி தமிழ்ப்பள்ளியிலிருந்து பத்துப் பிரதி தமிழ்ப் பாலபாடம் (அணில் ஆடு இலை ஈ உரல் ஊஞ்சல்) வாங்கிக்கொண்டுபோய் ஒவ்வொரு ஊரிலும் கொடுக்கச் செய்தேன். நல்லபலன் இருந்தது. சில வெள்ளிக்கிழமைகளில் நானும் போய்ச் சொல்லிக் கொடுத்தேன். (டி.ஆர்.ராஜகுமாரி இப்போது நடிக்கிறாரா? உயிர்ம்மை )
  • தே.மு.தி.க., உறுப்பினர்கள், சட்டசபைக்கு புதியவர்கள். அவர்கள், எங்களுக்கு பாலபாடம் நடத்த வேண்டாம் என்று, முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாகப் பேசினார். (தினமலர், செப்டம்பர் 07,2011)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---பாலபாடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


பாலர் - பாடம் - அரிச்சுவடி - பாடநூல் - பாலசிட்சை - கல்வி - போதனை - உபதேசம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாலபாடம்&oldid=1069193" இலிருந்து மீள்விக்கப்பட்டது