சும்மாடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
சும்மாடு (பெ)
- பாரத்தைத் தாங்க உதவும்படி தலையில் இடும் சுமையடை; சுமை தூக்கும்போது அழுத்தாமலிருக்க தலைக்கு வைப்பது
- தானியமாகக் கொடுக்கும் உரிமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- load-pad for the head
- perquisites in grain
விளக்கம்
பயன்பாடு
- இருவரும் சும்மாடுகளைத் தலையில் வைத்துக் கொண்டு கூடைகளைத் தலையில் ஏற்றினார்கள். ([1])
- சோழியன் குடுமி சும்மாடு ஆகாது (பழமொழி)
- அந்தப் பெண் அதிகாலை எழுந்து, தொழுவத்தில் கட்டப்பட்டுள்ள பசுக்களின் கனத்த மடிகளிலிருந்து பாலமுதை வாங்கிக் குடம் நிரப்பி வந்துவிடுவாள். அந்தப் பாலை அடுப்பிலேற்றி காய்ச்சி ஆறச்செய்து உறையூற்றி, கட்டித் தயிராக்குவாள். பின்னர் அந்தப் பெண், சும்மாடு கனக்க தயிர்க் கூடையைத் தலையில் சுமந்து ஒயிலாக நடந்துகொண்டே இனிமையான தன் குரலெடுத்து, "தயிரோ ஓ...ஓ...ஓ...தயிர்" என்று கூவும் ஓசை, உயிரோசைக்கு ஒப்பாகும். (மோரும் முப்பேரும்!, தமிழ்மணி, 29 Apr 2012)
(இலக்கியப் பயன்பாடு)
- சும்மா டம்மா மதியாக்கி (திருவாலவா. 30, 9)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சும்மாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +