யாளி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- யாளி, பெயர்ச்சொல்.
- ஏழாம், எட்டாம் நூற்றாண்டுக்கு பின்னரான தமிழர் கட்டிடக்கலைசார் கருங்கற் கோயில் தூண்களிலும் நுழைவாயில்களிலும் காணப்படும் கற்பனை விலங்கு சிற்பத்துக்கான பெயர்.
- தற்கால விலங்குகளான சிங்கம், யானை, குதிரை, முதலை, ஆடு, எலி, நாய் போன்ற இரண்டு (அல்லது மூன்று) விலங்குகளை ஒன்றாக பொறுத்தி கோயில் கட்டிடங்களில் வடிவமைக்கப்பட்ட சிற்பக்கலைசார் கற்பனை விலங்கு சிலைகள்.
- தென்னிந்திய கருங்கற் கட்டிடக்கலைசார் கோயில்களில் காணப்படும் கலைநயமிக்க கற்பனை விலங்கு சிற்பம் ஆகும்.
- தென்னிந்தியா மட்டுமன்றி, இலங்கையின் சோழர்கால கோயில் கட்டிடக்கலை வடிவங்களிலும் இந்த யாளி காணப்படுகின்றன.
- ஒரு புராணக்கால விலங்கு
- (எ. கா.) உழுவையும் யாளியு முளியமும் (குறிஞ்சிப். 252)
- சிங்கம் (அக. நி.)
- சிங்கராசி (சூடாமணி நிகண்டு)
- காண்க...யாளிப்பட்டை (யாழ். அக. )
- யானை (அக. நி.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A mythological lion-faced animal with elephantine proboscis and tusks
- lion
- leo of the zodiac
- A shallow vessel for throwing water to wet the sail of a craft or for ladling out bilge- water
- elephant
விளக்கம்
[தொகு]- "அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
- ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
- பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
- ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
- துன் அருங் கானம்." - நற்றிணை
- பொருள்: புலியால் தாக்கப்பட்டு இறந்து கிடக்கும் யானையின் உடலை யாளி தன்னுடைய நகங்களால் பற்றி இழுத்துச்செல்லும் என யாளியின் ஆற்றலை குறித்த ஒரு குறிப்பு நற்றிணையில் உள்ளது.
- பெருமாள் கோவில்களில் உற்சவக்காலங்களில் சுவாமிக்கு யாளி வாகனம்/யாளி வாகனச் சேவை என ஒரு நாள் இருக்கிறது.
- மேற்கண்டப் பொருளோடு சிங்கம், யானை ஆகிய விலங்குகளுக்கும், சிங்கராசிக்கும், கப்பல்களில் உட்புறம் அடியில் சேரும் தண்ணீரை வெளியேற்றவும், காற்றுப்பாய்களை நனைக்கவும் பயன்படும் ஒரு பாத்திரவகைக்கும் யாளி என்னும் பெயர் உண்டு..
-
யாளி என்னும் ஒரு புராணக்கால விலங்கு யானைகளை வேட்டையாடுகிறது.
-
யாளி என்றால் சிங்கம் என்றும் அர்த்தம்,
-
யாளி என்பது சிங்கராசி என்று பொருள்..படம் சிங்கராசியைக் குறிக்கும் மற்றொருச் சின்னம்.
-
யாளி என்றால் யானை என்றும் அர்த்தம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +