உள்ளடக்கத்துக்குச் செல்

யாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
 • யாளி, பெயர்ச்சொல்.
 1. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுக்கு பின்னரான தமிழர் கட்டிடக்கலைசார் கருங்கற் கோயில் தூண்களிலும் நுழைவாயில்களிலும் காணப்படும் கற்பனை விலங்கு சிற்பத்துக்கான பெயர்.
 2. தற்கால விலங்குகளான சிங்கம், யானை, குதிரை, முதலை, ஆடு, எலி, நாய் போன்ற இரண்டு (அல்லது மூன்று) விலங்குகளை ஒன்றாக பொறுத்தி கோயில் கட்டிடங்களில் வடிவமைக்கப்பட்ட சிற்பக்கலைசார் கற்பனை விலங்கு சிலைகள்.
 3. தென்னிந்திய கருங்கற் கட்டிடக்கலைசார் கோயில்களில் காணப்படும் கலைநயமிக்க கற்பனை விலங்கு சிற்பம் ஆகும்.
 4. தென்னிந்தியா மட்டுமன்றி, இலங்கையின் சோழர்கால கோயில் கட்டிடக்கலை வடிவங்களிலும் இந்த யாளி காணப்படுகின்றன.
 5. ஒரு புராணக்கால விலங்கு
  (எ. கா.) உழுவையும் யாளியு முளியமும் (குறிஞ்சிப். 252)
 6. சிங்கம் (அக. நி.)
 7. சிங்கராசி (சூடாமணி நிகண்டு)
 8. காண்க...யாளிப்பட்டை (யாழ். அக. )
 9. யானை (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
 • ஆங்கிலம்
 1. A mythological lion-faced animal with elephantine proboscis and tusks
 2. lion
 3. leo of the zodiac
 4. A shallow vessel for throwing water to wet the sail of a craft or for ladling out bilge- water
 5. elephant

விளக்கம்

[தொகு]
"அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம்." - நற்றிணை
 • பொருள்: புலியால் தாக்கப்பட்டு இறந்து கிடக்கும் யானையின் உடலை யாளி தன்னுடைய நகங்களால் பற்றி இழுத்துச்செல்லும் என யாளியின் ஆற்றலை குறித்த ஒரு குறிப்பு நற்றிணையில் உள்ளது.
 • பெருமாள் கோவில்களில் உற்சவக்காலங்களில் சுவாமிக்கு யாளி வாகனம்/யாளி வாகனச் சேவை என ஒரு நாள் இருக்கிறது.
 • மேற்கண்டப் பொருளோடு சிங்கம், யானை ஆகிய விலங்குகளுக்கும், சிங்கராசிக்கும், கப்பல்களில் உட்புறம் அடியில் சேரும் தண்ணீரை வெளியேற்றவும், காற்றுப்பாய்களை நனைக்கவும் பயன்படும் ஒரு பாத்திரவகைக்கும் யாளி என்னும் பெயர் உண்டு..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாளி&oldid=1971213" இலிருந்து மீள்விக்கப்பட்டது