கொடுமை
கொடுமை (பெ)
|
---|
- கடுமை
- குரூரம்
- தீமை
- வளைவு
- மனக் கோட்டம்
- முரட்டுத் தன்மை
- அநீதி
- பாவம்
- வக்கிராந்த பாஷாணம்
- வேண்டா வார்த்தை
ஆங்கிலம்
- cruelty, tyranny, inhumanity
- severity, harshness
- roughness, uncouthness
- vileness, wickedness
- crookedness, obliquity
- partiality, bias
- injustice
- sin
- harsh words, slander
- a mineral poison
(இலக்கியப் பயன்பாடு)
- கொடுமைபல செய்தன (தேவா. 945, 1)
- கூனுஞ் சிறிய கோத்தாயுங் கொடுமை யிழைப்ப (கம்பரா. மந்திரப். 1)
- கொடு மையுஞ் செம்மையும் (பரிபா. 4, 50)
- கொடியோர் கொடுமை (தொல். பொ. 147)
விமர்சனப்பார்வை
[தொகு]கொடுமை என்ற சொல் " கஷ்டம் , சிரமம் " என்ற பொருளில் கையாளப்படுகிறது. இதன் வேர்ச்சொல் ''கொடு" . 'கொடு" என்ற சொல்லுக்கு "வழங்குதல் , Give " என்று பொருள். ஆனால் பண்புப்பெயர் விகுதி மை சேர்ந்த கொடுமை என்ற சொல்லுக்கு முற்றிலும் ஒட்டாத பொருள் வழங்கப்படுகிறது. கொடியோர் என்ற சொல் "Bad person, crookedness, obliquity" என்ற பொருளில் வழங்கப்படுகிறது. இதுவும் தவறான வழக்கம்.
கொட்டு = Punch on head, pour
கொடி = Wine ( தாழ்ந்து கொடுத்து நிற்பதால் 'கொடி' )
சரியான சொல்:
கடு = Severe
கடி = Bite
கடிமை = Being hard, Aggravation
கட்டி = Hard thing
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +